Wednesday, January 23, 2013

TIDBITS FROM UPANYASAMS


Tue Jan 22, 2013 6:07 am (PST) . Posted by:

"VS" sadagopan10510



From: Nochalur Seshadri Sampath
Sent: Tuesday, January 22, 2013 5:39 AM
To: sadagopan
Subject: TIDBITS FROM UPANYASAMS.

பக்தர்களுக்காக,

திருவட்டாறு என்கிற திவ்ய தேசத்தில் நாபிக் கமலம் இல்லை இந்த
பத்மநாபனுக்கு. மேலே பிரம்மாவும் இல்லை, மூலமூர்த்தியின் முகத்தில்
மாலை நேரத்தில் சூரியன் ஒளியை காணலாம். வேறு எந்த திவ்ய
தேசத்திலும் இப்படி கிடையாது. இது த்ரேதா யுகத்தது என்று பெரியோர் கூறுவார்.

பெரிய நம்பியிடம் பதினெட்டு முறை சென்றார் என்பது எல்லோரும் அறிந்ததே.
கடைசியில் பெரியநம்பி ஒரு சீடரை அழைத்து தான் ஒருவரே வருமாறு கூறினார்.
உடையவரோ இருவரை அழைத்துச் சென்றார் (முதலி ஆண்டான் ,கூரத்தழ்வான்)
ஏன் இவர்களை அழைத்து வந்தீர் என்று கேட்டபோது ஒருவர் தன் த்ரிதண்டம்,
மற்றவர் தன் பவித்ரம் என்றாராம்.அவர் சாதுர்யத்தை வியந்து, தான் ரஹஸ்யங்களை
கூறப் போகிறேன், வேறு எவருக்கும் உபதேசிக்கலாகாது என்று ஆணை இட்டார்.
ஆனால் நடந்தது எல்லோரும் அறிந்தது.அவரை பெரியநம்பி கோபத்தோடு கூறியதும்
யாவரும் அறிந்ததே. தான் செய்தது தவறு என்று கூறாமல் உடையவர் அருளிய சுலோகம் இதுதான்.

"யதிஷ்யே ஏக ஏவாஹம் நரகே குரு பாதகாத்
சர்வே கச்சந்து பாவதாம் க்ருபயா பரமம் பதம் "

இதைக் கேட்ட நம்பி உள்ளம் குறுகி ஆனந்தம் அடைந்து உடயவரை கட்டித்தழுவி
பேரின்பம் அடைய்ந்தார்.
"எம்பெருமானாரே " என்று கூறி தனது குமாரரான சௌம்ய நாராயணனை
சீடரக்கினார் என்பதும் சரித்திரம்.

எம்பெருமான் சிஷ்யர்கள் கோவிந்தனை புகழ்ந்து பேசினபோது அவர் ஒன்றும்
சொல்லாமல் இருந்தார்.இதைக் கண்ட அவர்கள் அவரிடித்தில் புகார் செய்தனர்.
அவரும் கோவிந்தனை கேட்கும் போது "மறுத்தால் குறை ஒத்துக்கொண்டால் நிறை "
அவர்கள் என்னைப்பற்றி பேசியது தங்கள் அனுக்ரஹம் என்பதால் அடியேன் மறுக்கவில்லை
என்று கூறினார். அவர்கள் புகழ்ச்சி தங்களையே சேரும் என்றார்.
இதைக் கேட்டு மிக்க மகிழ்ந்து கோவிந்தனை எம்பெருமானார் என்றே அழைக்க, குருவி தலையில் பனங்காய்
வைத்தது போல் இருக்கும் அடியேன் தங்கள் நிழ்லில் இருக்கவே ஆசைப்படுகிறேன் என்றாராம் .
அதனால் அன்று முதல் எம்பார் என்று அழைக்கப் பட்டார் தன் பெயரை சுருக்கி.
.

ராமர் தனது நித்ய திருவாரதனை பெருமாளை அன்று விபீஷணனுக்கு
கொடுத்தார்.

பங்குனி உத்சவத்தின் ஒன்பதாம் நாள் உடையவரின் சரணாகதி கத்யம்
(மஹாலக்ஷ்மியைப்பற்றி) ஸ்ரீரங்க கத்யம் (ரங்கனதனுக்காக)
வைகுண்டகத்யம் சாதிப்பது வழக்கம்.

திருப்பேர் நகரான் அப்பக்குடத்தான் பற்றி பாடின பின்பு
நம்மாழ்வார் வேறு எந்த திவ்ய தேசத்தை பற்றியும் மங்களா
சாசனம் பண்ணவில்லை.

திருகோட்டியூர் திவ்ய தேசத்தில் உத்சவர் வெள்ளியால் காட்சி தருகிறார்.

வைகுண்டத்தில் கலக்குவதற்கும், காட்டுவதற்கும் யாரும் இல்லை ஆனால்
பூலோகத்தில் கலக்குவார் உண்டு என்று அறிக.

மேலும் அவன் அருள் இருந்தால்,
அடியேன்,தாசன்,
நொச்சலூர் சேஷாத்ரி சம்பத்

No comments: