Thursday, April 26, 2012

ஸ்ரீ எம்பெருமானாரின் திரு நக்ஷத்ரம் -(27--04--2012 )

THANKS to-- yengal gathiye!iraamaanusa muniye!     
Posted by:      "soundararajan desikan"            srikainkarya@yahoo.com                                       srikainkarya        
      Thu Apr 26, 2012 1:24 am        (PDT)   

Dear Swamin
This is my submission during the "Jayanthi " of Sri Udaiyavar
Sarvam Sree Hayagreeva Preeyathaam
Dasan
Uruppattur Soundararajan
----- Forwarded Message -----
From: Desikan Soundararajan <srikainkarya@gmail.com>
To: yennappan@computer.net;
Sent: Thursday, 26 April 2012
Subject: yengal gathiye!iraamaanusa muniye!

அடியேனின் விண்ணப்பம்
                                          ஸ்ரீ பாஷ்யகார என்கிற பெரிய ஏரியிலே , ஸ்ரீ ஆளவந்தார், மணக்கால் நம்பி, பெரிய நம்பி, மற்றும் திருக்கோட்டியூர் நம்பி போன்ற பரம ஆசார்யர்கள்  உபதேசித்த ,கங்கா ப்ராவாஹம் போன்ற உபதேசங்கள் நிரம்பி இருக்கின்றன. ஸ்ரீ உடையவர், இந்தப் பெரிய ஏரிக்கு மதகுகள் போல 74   சிம்ஹாசனாதிபதிகளை  நியமித்து, ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை நன்கு செழித்து வளரச்செய்தார். 
                                       ஸ்ரீ எம்பெருமானாரின் திரு நக்ஷத்ரம் நாளை (27--04--2012 )அமைகிறது.
                       இந்தப் பெரும் பாக்ய நாளில் , திருவரங்கத்து அமுதனார் அருளியுள்ள "இராமானுச நூற்றந்தாதியை " சேவிப்பதும், அவற்றின் பொருளை அகத்தில் கொள்வதும் , அதன் பயனாக சம்ப்ரதாய ஊற்றம் கொண்டு , மென்மேலும் பகவத், பாகவத கைங்கர்யங்கள்  செய்ய விழைவதும் சாலச் சிறப்பு உடைத்து.
இதற்காக, அடியேன் பல நாட்களாக முயற்சி எடுத்தும், இன்டர்நெட்  ஒத்து உழைக்கவில்லை. இதை, அடியேனின் பரம ஆப்தர் அறிவார். இருப்பினும், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவனைத் த்யானித்து, முடிந்தவரை, "எங்கள் கதியே, இராமானுச முனியே " சமர்ப்பித்து உள்ளேன். சில எழுத்துக்களுக்கு, சரியான ஆங்கில எழுத்துக்கள் தெரியவில்லை. பிழை இருப்பின் அடியேனை மன்னித்து, குணம் இருப்பின் கொண்டாடி ,
அடியேனைத் திருத்தி அருள வேண்டுகிறேன்
இதன் பிறகு "ஸ்ரீ வேதாந்த தேசிக நூற்றந்தாதி " வரும்; விரைவில் வரும்
தொடர்ந்து படியுங்கள்
                           எங்கள் கதியே ! இராமானுச   முனியே ! 
                         ----------------------------------------------------------
                                      தனியன் 
                                     --------------
 முன்னை வினை அகல மூங்கில் குடி அமுதன்
பொன்னங்கழல் கமலப் போதிரண்டும் ------என்னுடைய
சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன்   தென் புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன்  யான் 
                         ---------------------
நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதன்றி     நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி  இராமானுச முனி  தாளிணை மேல் 
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து  அமுது ஓங்கும் அன்பால்
இயம்பும்  கலித்துறை அந்தாதி ஓத  இசை நெஞ்சமே
                    -----------------
சொல்லின் தொகை கொண்டு உனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தும்   உன் நாமமேல்லாம்  என் தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு  அறுசமயம்
வெல்லும் பரம    இராமானுச ! இதென் விண்ணப்பமே
                -----------------
இனிஎன் குறை நமக்கெம்பெருமானார்    திருநாமத்தால்
முனி தந்த நூற்றெட்டு சாவித்திரிஎன்று     நுண் பொருளைக்
கனி தந்த  செஞ்சொற் கலித்துறை அந்தாதி பாடித் தந்தான்
புனிதன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே
                  --------------------  
நான்காவது தனியன் கூறுவதாவது;---நூற்றெட்டு ஆவ்ருத்தி ஜெபிக்கப்படும், சாவித்ரியின் பொருளாகிய ----அதன் சூக்ஷ்ம அர்த்தத்தை---
                                                                        இது பகவானால் உபதேசிக்கப்பட்டு, விச்வாமித்ரரால் பிரகாசம் செய்யப்பட்டதை , ஆசார்யரான  
                                                                         எம்பெருமானாரைத் த்யாநிப்பதால், தர்ம விஷயமான புத்தியை அளிக்கும் கலித்துறை
                                                                         அந்தாதியை புண்ணியரான திருவரங்கத்து அமுதனார் ,பாசுரமிட்டுத தந்துள்ளார்
                                                                                           ----------------
 இந்தத்  தனியன் மேல் நாட்டில் சேவிக்கப்படுகிறது.  ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் அருளிய " கண்ணிநுண் சிறுத்தாம்பு " முழுக்க, முழுக்க,
ஸ்ரீ நம்மாழ்வார் விஷ்யமாகவே இருக்கிறது.  ஆனால், நமது பூர்வர்கள்,   அதை, முதலாயிரத்தில் சேர்த்து அனுசந்திக்கிறார்கள்.
அதைப் போலவே, திருவரங்கத்து அமுதனார் அருளிய "இராமானுச நூற்றந்தாதியை " நான்காவது ஆயிரத்தில் சேர்த்து அனுசந்த்கிக்கப்படுகிறது.
"பகவத் சேஷத்வ கைங்கர்யங்களுக்கு எல்லை------------பாகவத சேஷத்வ கைங்கர்யங்கள் "
                                   ----------------------------------------------
" இராமனுசர் " என்னும் "சொல்" லக்ஷ்மணனையும் குறிக்கும்; கண்ணனையும் குறிக்கும்; ஏன்---பரதனையும், சத்ருக்னனையும் கூடக் குறிக்கும்.
பகவான் ஸ்ரீ ராமனாக அவதரித்து, சாமான்ய தர்மம், விசேஷ தர்மம், வர்ணாஸ்ரம தர்மம், சரணாகத தர்மம் என்று செய்து , தர்மத்தை ஸ்தாபித்துக் காட்டினார். அவருக்குப் பின்பாக , இந்த " அனுஜர் " ( ராமானுஜர் ) சாமான்ய, விசேஷ, வர்ணாஸ்ரம, தர்ம ஸ்தாபன, சரணாகத ரக்ஷணம் செய்து காட்டி உள்ளார். "ராமா " என்பது ஸ்ரீ ஆண்டாளையும் குறிக்கும். " ராமா " என்கிற ஆண்டாள், அனுஜா---எந்த ஆழ்வார்களுக்குப்
 பின்பு தோன்றியவளோ, அவளுக்குப் பின்பாக எந்த ஆழ்வார்கள் தோன்றினார்களோ, அவர்கள் யாவருமே ராமானுஜர்களாய்,
அவர்கள் அனைவருமாக அவதாரம் எடுத்தவர் ஸ்ரீ ராமானுஜர். "ராமை " என்கிற பெரிய பிராட்டியைப் போல, "நிக்ரஹம் " என்பதே தெரியாமல்,
"அனுக்ரஹ  " வடிவமாய்,  பெரிய  பிராட்டியைப்  பின்பற்றி ,  "பிரஜா ரக்ஷணம் " செய்தவர் இராமானுசர். இப்படியாகப் பலப் பலப் பொருள்களைக்
கூறிக்கொண்டே போகலாம்.
    பகவத் ராமானுஜரைப் பற்றி, "இராமானுச நூற்றந்தாதி " அருளியவர் திருவரங்கத்தமுதனார். இவரைப் "பெரிய கோயில் நம்பி " என்றும் அழைப்பர். இவர், எம்பெருமானாரின் நியமனத்தினால், ஸ்ரீ கூரத்தாழ்வானாலே திருத்தப் பெற்றவர். ஸ்ரீ கூரத்தாழ்வானை ஆஸ்ரயித்தவர்.
இப்படி, ஸ்ரீ கூரத்தாழ்வானை ஆச்ரயித்து, தம் ப்ராசார்யரும், தம்மால் ஈடு இணையின்றி அனுபவிக்கப் பெற்றவருமான எம்பெருமானார்
 விஷயமாக, ஆயிரத்துக்கும் மேலான  பாசுரங்கள் இயற்றியதாகவும், அவற்றை எம்பெருமானார் விரும்பவில்லை என்றும், பிறகு, அரங்கன் நியமனத்தின் பேரில் "நூற்றந்தாதி " இயற்றி, எம் பெருமானாரும்  ,   பெருந் திரளாக பக்தர்களும் திருவரங்கன் திரு முன்பே கூடியிருந்தபோது, எல்லோரும் போர உகக்க,
"இராமானுச  நூற்றந்தாதியை " விண்ணப்பித்தார் என்று சொல்வர்.        
"இராமானுச நூற்றந்தாதி' அமுதுக்கு அமுது; அமுதனார் அருளிய அமுது; திருவரங்கன் உகந்த அமுது;  நமக்கெல்லாம் அமுது;
இந்த அமுதத்தில் , சிலவற்றை அள்ளிப் பருகலாம் வாருங்கள், பகவத் ராமானுஜர் திரு நக்ஷத்திர சுப தினத்தில் ,இதை விட பாக்யம்
வேறு எது !
 
                          எங்கள் கதியே ! இராமானுச முனியே !
                                      ---------------------------

                                                                                                                                                                         
  1)  பூமன்னு மாது  பொருந்திய மார்பனின்  புகழ் மலிந்தபாமன்னு  மாறன் அடி பணிந்து உய்ந்தவன் ; பல்கலையோர்  தாம் மன்ன வந்த இராமானுசன்    !
  2)      குறையல் பிரான்  அடிக்கீழ் விள்ளாதஅன்பன்  இராமானுசன்  !
  3)     பொருவருஞ்சீர்  ஆரியன் செம்மை இராமானுசன்  !
 4)     ஊழி முதல்வனையே  பன்னப் பணித்த இராமானுசன்   !
 5)    எனக்குற்ற  செல்வம் இராமானுசன்   !
 6)    இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன்கவிகளன்பால்  மயல் கொண்டு வாழ்த்தும்  இராமானுசன்  !
 7)   பழியைக் கடத்தும் இராமானுசன்  !
 8)     பொய்கைப் பிரான் மறையின் குருத்தின் பொருளையும் ,செந்தமிழ்த் தன்மையும் கூட்டி, ஒன்றத் திரித்தன்  
            எரித்த திருவிளக்கைத்  தன்திருவுள்ளத்தே  இருத்தும் பரமன் , இராமானுசன்  !
  9)    இறைவனைக் காணும்  இதயத்து இருள் கெட, க்ஜானமென்னும்  நிறை விளக்கேற்றிய   , பூதத் திருவடித் தாள்கள்
            நெஞ்சத்து உறைய வைத்து ,  ஆளும் இராமானுசன்  !  
10)  மன்னிய பேரிருள் மாண்ட பின்  கோவலுள்  மாமலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும்
              தமிழ்த் தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசன்  !
 11)  சீரிய நான்மறைச்செம்பொருள்  செந்தமிழால் அளித்த பார் இயலும், புகழ்ப் பாண் பெருமாள் ,சரணம் ஆம் பதுமத்    தார் இயல்
          சென்னி  இராமானுசன்   !
 12 ) இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கு  இறைவன் இணை அடி போது அடங்கும் இதயத்து இராமானுசன்  !
       13) செய்யும் பசு துளபத்து எழில்  மாலை  செந்தமிழில்  பெய்யும்  மறைத் தமிழ் மாலையும், பேராத சீர் அரங்கத்து
           ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியாமெய்யன் , இராமானுசன்  !
       14)கொல்லிக் காவலன் சொல் பதிக்கும் கலைக் கவிபாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன்  இராமானுசன் 
       15) சோராத காதல் பெருஞ்சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும் பாராது அவனைப் பல்லாண்டு காப்பிடும்
             பான்மையன் தாள் பேராத உள்ளத்து இராமானுசன்   !
        16) தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து, தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன், அரங்கர் மௌளி
            சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற    வள்ளல் இராமானுசன்  !
        17) கண்ணமங்கை நின்றானைக்கலை பரவும் தனியானைத் தண்தமிழ்   செய்த நீலன் தனக்குஉலகில்  இனியான் --எங்கள் இராமானுசன்  !
        18) எய்தற்கு அரிய  மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை சிந்தையுள்ளே பெய்தற்கு
           இசையும் பெரியவர் ,சீரை உயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் இராமானுசன்  !
        19) மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று  உறு பெரும் செல்வமும்  தந்தையும் தாயும் உயர் குருவும் ,
          வெறிதரு பூமகள் நாதனும் என்று நீள் நிலத்தோர் அறிதர நின்ற இராமானுசன்  !
        20)  ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்க்கு இனியவர்தம்,
         சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை   நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன்  !
        21)தூய நெறி சேர்  யதிகட்கு இறைவன்  யமுனைத் துறைவன் இணை அடியாம் கதி பெற்று உடைய இராமானுசன்  !
        22) கார்த்திகையானும், கரிமுகத்தானும், கனலும் முக்கண் மூர்த்தியும், மோடியும், வெப்பும், முதுகிட்டு,மூவுலகும்
        பூத்தவனே என்று போற்றிட, வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன்  !
        23 )வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும்  இராமானுசன்  !
        24 )பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து     அவிய, கைத்த மெய்க்ஜானத்து     இராமானுசன்  !
        25 )கார் ஏய் கருணை   இராமானுசன்  !
       26 )என் செய்வினை ஆம் மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை, திக்கு உற்ற கீர்த்தி இராமானுசன்  !
       27)வெள்ளைச் சுடர் விடும் உன்   பெருமேன்மைக்கு  இழுக்கு இது என்று, தள்ளுற்று இரங்கும் இராமானுசன்    !
       28)நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் ,நங்கள் பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன் பாதம்
             நண்ணா வஞ்சர்க்கு அரிய இராமானுசன்  !
       29)தென் குருகைப் பிரான் பாட்டென்னும் வேதப் பசுந் தமிழ் தன்னைத்  தன் பக்தி என்னும்  வீட்டின் கண்  வைத்த இராமானுசன்  !
      30)தொல் உலகில் , மன் பல உயிர்கட்கு இறைவன் மாயன் என மொழிந்த அன்பன் ,அனகன், இராமானுசன்  !
      31)இன்று  ஓர் எண் இன்றியே  காண் தரு  தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைகீழ் பூண்ட அன்பாளன் இராமானுசன்  !
      32) செறு  கலியால் வருந்திய   உலகத்தை வண்மையினால் வந்து எடுத்து, அளித்த அருந்தவன் எங்கள் இராமானுசன்.
     33)கேள்வன் கை ஆழி என்னும்  படையொடு  நாந்தகமும்,படர் தண்டும், ஒண் சார்ங்க வில்லும் புடையார் புரிசங்கமும்
           இந்தப் பூதலம் காப்பதற்கு   என்று இடையே இந்நிலத்தே ஆயினான் இராமானுசன் !
     34)நிலத்தை செறுத்துண்ணும் நீசக் கலியை,   நினைப்பரிய பலத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை,
          என் பெய்,வினைத்தென்புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கிய பின் ,நலத்தைப் பொறுத்தது ,தன் நயம் புகழ் இராமானுசன் !
     35) பொன்னரங்க மென்னில் மயலே பெருகும், இராமானுசன் 
     36) காசினியோர் இடரின் கண் விழுந்திடத் தானும் அவ்வொண்  பொருள்கொண்டு ,அவர்பின் படரும் குணன் எம் இராமானுசன் !
     37)படி கொண்ட கீர்த்தி ராமாயணமென்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் இராமானுசன் !
     38)புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுசன் !
     39)இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில்  பெரும் புகழே தெருளும் தெருள் தந்த இராமானுசன் !
    40)கண்ணனுக்கே ஆமது காமம்; அறம், பொருள் , வீடு , இதற்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் இராமானுசன் !
    41)   மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே  கண்ணுற நிற்கிலும், காணகில்லா உலகோர்கள் எல்லாம்,
          நண்ணரு க்ஜானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆகவைத்த அண்ணல் இராமானுசன் !
     42)மாமலராள் நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என உபதேசித்த  தூயவன் தீதிலா இராமானுசன் !
     43)அறம் சீரும் உறு  கலியைத் துரக்கும்  பெருமை (குடிகொண்ட) இராமானுசன் !
     44)சொல்லார் தமிழ் ஒரு மூன்றும், சுருதிகள் நான்கும், எல்லையில்லா அறநெறி யாவும் தெரிந்தவன் ,எண் அருஞ்சீர் 
           நல்லார் பரவும் இராமானுசன் !
    45)சரண் அன்றி, அப்பேறளித்தற்கு   ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி,  என்று இப்பொருளைத் தேறுமவர்க்கும்
         எனக்கும் உனைத் தந்த செம்மைச் சொல்லால்  கூறும் பரம் அன்று, இராமானுசன் !
    46)கூறும் சமயங்கள் ஆறும் குலையக்   குவலயத்தே மாறன் பணிந்த மறை உணர்ந்தோனை  ;மதியிலியேன் தேறும்படி என் மனம்
          புகுந்தவன் ; திசை அனைத்தும் ஏறும் குணம் இராமானுசன் !
    47)இறைஞ்சப்படும்  பரண் , ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செய்யும் அண்ணல் இராமானுசன் !
    48)புன்மையிலோர் பகரும் பெருமை இராமானுசன் !
    49)பூங்கமலத் தேன் நதிபாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத் தான் அதில் மன்னும் இராமானுசன் !
    50) பாவு  தொல் சீர் எதித்தலை நாதன் இராமானுசன் !
     51)  அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய்  அன்று  பாரதப் போர்    முடியப் பரி நெடுந்தேர் விடுங்கோனை  முழுதுணர்ந்த
           அடியார்க்கு அமுதம் இராமானுசன்!
    52) பார்த்தான் அறு   சமயங்கள் பதைப்ப ,இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடை த்தான் புகுந்து
          தீர்த்தான் இருவினை ,தீர்த்தரங்கன் செய்ய  தாள் இணையோடு ஆர்த்தான் இராமானுசன் !
    53)என்னை ஆளவந்த கற்பகம்; கற்றவர் காமுறு சீலன்; கருதரிய பற்பல உயிர்களும் பல் உலகு யாவும் பரனதென்னும்
          நற்பொருள் தன்னை இந்நானிலத்தே வந்து நாட்டிய , அற்புதன் செம்மை இராமானுசன் !
    54)நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன; நாரணனைக்  காட்டிய வேதம் களிப்புற்றது; தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண்தமிழ் மறை
         வாழ்ந்தது; (காரணம்) மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமானுசன் !
    55)கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன் தொண்டர் குலாவும் இராமானுசன் !
    56)  கோக்குல மன்னரை மூவெழுகால் ஒருகூர் மழுவால்  போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் , புவனம் எங்கும் ஆக்கிய
           கீர்த்தி       இராமானுசன் !
    57)மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்காள் உற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் ;
          நற்றவர் போற்றும் இராமானுசன் !
    58)பேதையர் வேதப்பொருள் இது என்று உன்னி, பிரமம் நன்று என்று ஓதி, மற்று எல்லா உயிரும் அஹுதென்று,
          உயிர்கள் மெய் விட்டு ஆதிப்  பரனோடு ஒன்றாமென்று  சொல்லும்  அவ் அல்லல் எல்லாம் வாதில் வென்ற மெய்ம்மதிக்கடல்
         இராமானுசன் !
    59)கடலளவாய திசை எட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு   காலத்து, மிக்க நான்மறையின் சுடரொளியால் ,
          அவ்விருளைத் துரத்திலநேல் , உயிரை உடையவன், நாரணன் என்று உணர்த்தியவன் இராமானுசன் !
    60)உணர்ந்த மெய்க்ஜானியர்  யோகந்தோறும் திருவாய் மொழியின் மணம் தரும்   இன்னிசை மன்னு  மிடந்தொறும்
          மாமலாராள் புணர்ந்த    பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும் குணம் திகழ் கொண்டல் ,குலக்கொழுந்து
         இராமானுசன் !  
    61) அரு முனிவர் தொழும்     தவத்தோன் இராமானுசன்  !
    62)இருவினைப் பாசம் கழற்றி  இன்றி  யான் இறையும்  வருந்தேன்; இனி எம் இராமானுசன் !
    63)அறு சமயச் செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைத்து ஓட வந்து , இப் படியைத் தொடரும் இராமானுசன் !
    64)பண்டரு  மாறன் பசுந் தமிழ்  ஆனந்தம்    பாய் மதமாய், விண்டிட வந்த  வேழம் எங்கள் இராமானுசன் !
    65) குற்றமெல்லாம் பதித்த குனத்தினருக்கு அந் நாழற்ற க்ஜானம் தந்த இராமானுசன் !
    66)தன்னை எய்தினர்க்கு ,தன் தகவென்னும் சரண் கொடுத்து, மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன் !
     67)உயிர்கட்கு அரண் அமைத்து, கரணமிவை மாயவனுக்கென்று (உரைத்த) இராமானுசன் !
     68)"ஆர்" எனக்கின்று நிகர் சொல்லின்    ,மாயன், அன்று ஐவர்  தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
           பாரினில் சொன்ன      இராமானுசன் !
    69)சரண் என்று, தான் அது தந்த  , எந்தை இராமானுசன் !
     70)என்னையும் பார்த்து, என் இயல்பையும் பார்த்து, எண்ணில்  பல் குணத்து உன்னையும் பார்க்கில் , அருளும் இராமானுசன் !
     71)முன் செய்வினை, நீ செய்வினை அதனால், பேர்ந்தது வண்மை, பெருந்தகை  இராமானுசன் !
     72)நிறை புகழோருடன், என்னை வைத்தனன், இராமானுசன் !
     73)வண்மையினாலும்,உந்தன்  மாதகவாலும், மதிபுரையும் தண்மையினாலும் இத் தரணியோர்கட்குத்  தான் சரணாய்
          உண்மை  நன் க்ஜான  முரைத்த இராமானுசன் !
    74)எழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே ஏரார் குணத்து எம் இராமானுசன் !
    75)நின் புகழே வந்து மொய்த்து அலைக்கும், இராமானுசன் !
    76)நின்ற வண்கீர்த்தியும்   நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்குன்றமும்  வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
         உன்றனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர்த்தாள் என்றனக்கும்   இவை ஈந்து    அருளும் இராமானுசன் !
   77) ஈயாத இன்னருள் ஈந்தனன்,என்னில்  பல் பொருளால் மறைக் குறும்பைப் பாய்ந்தனன்;கீர்த்தியினால்  என் வினைகளை 
         வேர் பறியக்  காய்ந்தனன்  வண்மை இராமானுசன் !
   78) கருத்தில் புகுந்து, உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய வருத்தத்தினால் மிக வஞ்சித்து, நீ, இந்த மண்ணகத்தே திருத்தி,
        திருமகள் கேள்வனுக்கு ஆள் ஆக்கிய இராமானுசன்  !
    79)பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து இந்தப் பூதலத்தே மெய்யைப் புரக்கும் இராமானுசன் !
    80)நல்லார் பரவும் இராமானுசன் !
    81)சோர்வின்றி  உந்தன் துணை அடிக்கீழ்த் தொண்டு பட்டவர்பால் சார்வின்றி நின்ற எனக்கு  அரங்கன் செய்ய, தாளிணைகள் பேர்வின்றிஇன்று   பெறுத்தும்  இராமானுசன் ! ! 
    82)தெரிவுற்ற க்ஜாலம்  செறியப் பெறாது ,வெந்தீவினையால்  உருவற்ற க்ஜானத்து உழல்கின்ற என்னை, ஒரு பொழுதில்
      பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் ,தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் !
   83) "சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் "என்னும் பார் கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன்     ;
         உன்  பாத பங்கயமாம் ஏர் கொண்ட வீட்டை எளிதில் எய்துவன் (அதற்கான)  கார் கொண்ட வண்மை இராமானுசன் !
   84)கண்டு கொண்டேன், தன்னைக்  காண்டலுமே  தொண்டு    கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்   விண்டுகொண்டேன் ,அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் --அவனே இராமானுசன் !
   85)ஓதிய வேதத்தின்  உட்பொருளாய் அதனுச்சி மிக்கசோதியை  நாதனென்று அறியாது உழல்கின்ற,தொண்டர்பேதைமைதீர்த்த   இராமானுசன்  !
   86)பற்றா மனிசரைப் பற்றி    , அப்பற்றி விடாது  அவரை உற்றார் என உழன்றோடி நையேன் இனி   எம்மை ஆளும் பெரியவர் கற்றார் பரவும்   இராமானுசன் !
  87)பெரியவர் பேசிலும், பேதையர் பேசிலும் தன் குணங் கட்கு உரிய   சொல் என்றும் உடையவன் என்றென்று உணர்வில் மிக்கோர் தெரியும்
        வண்கீர்த்தி இராமானுசன் !
   88)கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான் ,ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து ,அதனால் வலி மிக்க சீயம்    இராமானுசன் !
   89)போற்ற அரும் சீலத்து இராமானுசன் !
   90)நினையார் பிறவியை நீக்கும் பிரான் ; இந்நீணிலத்தே எனை ஆளவந்த இராமானுசன் !
   91)மருள் சுரந்து, ஆகம வேதியர் கூறும் அவப்பொருளாம் இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்க, தன் ஈண்டிய சீர் அருள் சுரந்து எல்லா
      உயிர்கட்கும் நாதன்----அரங்கன்  என்னும் பொருள் சுரந்தான் எம் இராமானுசன் !
  92)புண்ணிய நோம்பு புரிந்துமிலேன்; அடி போற்றி  செய்யும் நுண்ணருங்கேள்வி   நுவன்றுமிலேன்; இன்று என் கண்ணுள்ளும், நெஞ்சுள்ளும்
      புகுந்து நின்ற எண்ணருங்கீர்த்தி இராமானுசன்  !
  93)கட்டப் பொருளை மறை பொருள் என்று , கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே, என் பெரு வினையைக் கிட்டிக்   கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாள் உருவி  வெட்டிக் களைந்த இராமானுசன் !
  94) தவந் தரும், செல்வம் தகவும் சலியாப் பிறவிப் பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாமமென்னும் திவந்தரும் (அதன் நாமம் )
      தீதில்  இராமானுசன் !
  95)உள் நின்று உயிர் கட்கு உற்றனவே செய்து அவர்க்குயவே பண்ணும் பரனும், பரிவு இலன் ஆம் படி , பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று,
      வீடளிப்பான், எம் இராமானுசன் !
 96)வளரும் பிணி கொண்ட வல்வினையால், மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத்தறியாது    முடைத் தலை ஊன்     தளருமளவும்
     தரித்தும், விழுந்தும்  தனி திரிவேற்கு உளர் , ஏற்றவர், இறைவர் இராமானுசர் !
 97)தன்னை உற்று ஆள் செய்யும் தன்மையினோர்மண்ணு  தாமரைத் தாள்  தன்னை உற்று  ஆள் செய்ய  , இன்று என்னை உய்த்தான் தன் தகவால்        தன்னை உற்றார் அன்றி  தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து தன்னை உற்றாரைச் சாற்றும் குணத்தான் இராமானுசன் !
98 )இடுமே இனிய சுவர்க்கத்தில், இன்னம் நரகலிட்டுச் சுடுமே அவற்றைத்  தொடர் தொல்லைச் சுழல்  பிறப்பில் நாடுமே , நம்மை நம்
      வசத்தே   விடும் ( அவனைச் ) சரணமென்றால், ( அவன் ) இராமானுசன் !
99)தர்க்கச் சமணரும், சாக்கியர் பேய்களும் தாழ் சடையோன் சொற்கற்ற   சோம்பரும்,  சூனிய வாதரும் , நான் மறையும் நிற்கக் குறும்பு செய்
     நீசரும்,  நீணிலத்தே மாண்டனர். ---(எப்போது )பொற் கற்பகம் போந்தபின் ( அவரே ) இராமானுசர்!
100)என் நெஞ்சம் என்னும் பொன்வண்டு, உனதடிப் போதில் ஒண் சீர்  ஆம் தெளி தேன் உண்டு, அமர்ந்திட வேண்டி, நின் பால் போந்தது
        அதுவே ஈந்திட வேண்டும் ( வேண்டியது கொடுக்கும் )  இராமானுசன் !
101)மயக்கும் இருவினை வல்லியில் பூண்டு, மதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயர் அகற்றி உயக் கொண்டு
        நல்கும் இராமானுசன் !
102)நையும் மனம் உன்  குணங்களை உன்னி , என் நா இருந்து (உனை அழைக்கும் ) எம் ஐயன் இராமானுசன் !
103)என் தன் மெய் வினை நோய் களைந்துகையில் கனி  என்னவே க்ஜானம் அளித்தனன்  இராமானுசன் !
104)உன் தன் மெய்யில் பிறங்கிய  சீர் அன்றி நிரயத் தொய்யில்  கிடக்கிலும் சோதி விண் சேரிலும்  ---இவ்வருள்  செய்யும் இராமானுசன் ! 
105)செழுந்திரைப் பாற்கடல்  கண் துயில் மாயன்  திருவடிக்கீழ் விழுந்திருப்பார்  நெஞ்சில் மேவுநன் கஜானி ,நல் வேதியர்கள் தொழும்
         திருப்பாதன் இராமானுசன் ! 
106)இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்  மாலிருஞ்சோலை என்னும் பொருப்பிடம்மாயனுக்கு என்பர் நல்லோர் , அவை தன்னோடு வந்து
        மாயன் இருப்பிடம்  மனம்-----(அது) இராமானுசன் !
107) என்றும் எவ்விடத்தும் என்புற்ற நோயுடல் தோரும் பிறந்து இறந்து  எண்ணரிய  துன்புற்று  வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு ;
         உன்   தொண்டர்கட்கே அன்புற்று இருக்கும்படி என்னை ஆக்கி, அங்கு ஆட்படுத்தும் இன்புற சீலத்து இராமானுசன் !
108)பக்தி எல்லாம் தங்கியது என்ன நம் தலைமிசை ,  பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ மன்ன, அங்கயல் பாய் வயல்
       தென்னரங்கன் அணி ஆக மன்னும் பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும்
குறிப்பு:--அடைப்புக்குறியில் உள்ள சொற்கள் அடியேன் சொன்னவை
----------------------------------------------------------

              ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
        எம்பெருமானார் திருவடிகளே சரணம்
        திருவரங்கத்தமுதனார்  திருவடிகளே சரணம்
  சீரார்  தூப்புல் திருவேங்கடமுடையான்  திருவடிகளே சரணம்

Sarvam Sree Hayagreeva Preeyathaam
Dasan
Uruppattur Soundararajan

No comments: