Thursday, January 19, 2012

எத்தனை மஹான்கள்

எத்தனை மஹான்கள்:
 Thanks to: Sri Raghuveer Dayal Swami:
_________________
from  T.Raguveeradayal included below]
      adiyen dasasya vignaapanam.
In the previous mail, adiyen attached an article from the souvenir released
on the occasion of the sadabishekam of HH the 41stAzhakiasingar in 1938.
adiyen now attach two more from the souvenir.
One is by  Mukkur Sri Rajagopalan swamy (adiyen presume it must be the 44th
Azhakiasingar in his poorvashramam)
The other one is by Srimadubayave Thirukkottiyur swamy about whom adiyen
shared an article from Swami Desikan's 7thCentenary souvenir in my blog
http://thiruthiru.wordpress.com
Please enjoy the attachments.
 These pages were scanned with my potablescanner and so they may not be
perfectly aligned.Kindly ignore it.
*adiyen,*
*dasan,
**T. Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091
http://thiruppul.blogspot.com
http://thiruthiru.wordpress.com <http://rajamragu.spaces.live.com>***


 
_________________

தென்னன் தமிழ்


எத்தனை மஹான்கள்! எத்தனை க்ரந்தங்கள்! 23

Thursday, January 12th, 2012

அபிநவதேசிக உத்தமூர்

தி..வீரராகவாச்சாரியர் ஸ்வாமி

இந்த ஸ்வாமி^ தை மாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் பையம்பாடியில் அவதரித்தார். காவிய நாடகங்களைத் தமது திருத்தகப்பனாராகிய ஸ்ரீ உ.வே.சக்ரவர்த்யாச்சாரியரிடம் வாசித்தபிறகு மதுராந்தகத்தில் ஸ்ரீமதுபயவே ஸ்வச்சந்தம் ஸ்ரீநிவாஸாசாரியரிடம் தர்க்க பாடங் கேட்டார். பிறகு திருவையாறு கலாசாலையில் சேர்ந்து ந்யாய மீமாம்ஸா சிரோமணியில் தேறி சிறிது காலம் அங்கு விமர்சகராய் எழுந்தருளியிருந்தார். பிறகு ஸ்ரீமத் உபயவே கபிஸ்தலம் தேசிகாசாரிய ஸ்வாமியின் அழைப்பின்பேரில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேச்வர ஸம்ஸ்க்ருத கலாசாலையில் நியாய மீமாம்ஸா ப்ராத்யாபகராய் எழுந்து அருளியிருந்தார். இதனிடையில் தமது தீர்க்க பந்துவான ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ கோழியாலம் ஸ்வாமி ஸந்நிதியில் உபயவேதாந்த கிரந்த காலக்ஷேபங்களைச் செய்தருளி அந்த ஸ்வாமியின் திருவடிவாரத்தில் உபாயானுஷ்டானம் செய்தருளினார். பிறகு திருப்பதி கலாசாலையின் முதல்வராக பலகாலமிருந்து பல வித்வத்ரத்னங்களை பாரத தேசம் முழுவதற்குமாக அளித்துதவி யருளினார். இன்று ந்யாய சாஸ்திரத்தில் பிரபலமாய் விளங்கும் பண்டிதர்கள் யாவரும் ஸாக்ஷாத் ஆகவோ பரம்பரையாகவோ இந்த ஸ்வாமி யினிடம் பாடம் கேட்டவர்களே என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த ஸ்வாமி வித்யார்த்தி தசையிலேயே ந்யாய சாஸ்திரத்தில் உத்க்ரந்தமான “ந்யாயகுஸுமாஞ்ஜலி”க்கு விரிவான ஒரு உரையை இட்டருளினார். இதற்கு “குஸுமாஞ்ஜலி விஸ்தரம்” என்பதாகப் பெயர். இந்த உரையின் மேன்மையைக் கடாக்ஷித்தருளிய ஸ்ரீமதுபயவே மஹாவித்வான் ஸ்ரீபெரும்பூதூர் ஆஸூரி ராமானுஜாசார்ய ஸ்வாமி “தேவாம்சமில்லாதவரால் இந்த உரை எழுதியிருக்க முடியாது” என்று ஸாதித்தாயிற்று. மேலும் இவர் அருளிச் செய்த கிரந்தங்கள் வருமாறு”—
(1) நியாய பாஷ்ய ப்ரதீபம்; அச்சாகவில்லை (2) “வைசேஷிக ரஸாயனம்” இருமுறை அச்சாகியுள்ளது .(3) “அவயவ க்ரோட பத்ரம்” (4) “நியாய பரிசுத்தி வியாக்யானம்” ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த நியாய பரிசுத்திக்கு உரை (5) “கிருஷ்ணம் பட்டீய க்ரோடபத்ரம்” (6) “தர்கஸங்கரஹ வ்யாக்யானம்” முதலியன.
(7) “ஸ்ரீ வேங்கடேச கல்யாண சரிதம்” (காவியம்) (8) “ஸ்ரீவேங்கடேச ஸ்தோத்ரம்” (9) “பத்மாவதீ ஸ்தோத்ரம்” (10) “ஸ்ரீ ஜானகீ சதகம்” முதலிய ஸ்தோத்ரங்கள்.
(11) “பரமார்த்த ப்ரகாசிகை” (12) “பரமார்த்த பூஷணம்” (13) “நயத்யுமணி பூமிகை உரை ((14) ஸ்ரீ ஆழ்வார்களின் நாலாயிரம் பாசுரங்களுக்கும் “ப்ரபந்த ரக்ஷை” என்கிற உரை (15) உபநிஷத் பாஷ்யங்களை யாவற்றிற்கும் உரையாகிய “பரிஷ்காரம்” (16) “வேதாந்த புஷ்பாஞ்ஜலி” என்கிற உபநிஷதர்த்த ஸங்கிரஹமான (ஸ்ரக்தாவ்ருத்தத்தில்) விரிவான ஸ்தோத்ரம் (17) “உபநிஷத் ஸாரம்” (18) “வேதாந்த கரிகாவளி” (19) “வசன ஹ்ருத்ய விமர்சம்” (20) ”ஈசாவாஸ்யோபநிஷதாசாரிய பாஷ்ய தாத்பரியம்” (21) “நியாய ப்ரகாச வ்யாக்யானம்” (22) “ப்ரபன்ன பாரிஜாத வ்யாக்யானம்” (23) நிக்ஷப ரக்ஷைக்கு வ்யாக்யானம் (24) “யாதவாப்யுதய டிப்பணம்” (25) தமிழ் மொழி பெயர்ப்பு “வைகானஸ விஜயம்” (26) “ஸர்வார்தஸித்தி டிப்பணம்” (27) வேதாந்த தீபத்தின் மொழி பெயர்ப்பு (28) ஸ்ரீஸஹஸ்ர நாம நிர்வசனத்தின் விளக்க உரை (29) “சரணாகதி கத்ய விவரணம்” (30) நியாஸாதிகார ஸர்வஸ்வம்” (31) ஸ்ரீ ச்ருதப்ரகாசிகா டிப்பணம்” (32) ஸ்ரீபாஷ்ய வ்யாக்யானம் தர்பணம்” முதலியன.
இன்னும் இது தவிர ஸ்ரீபாவப்ரகாசிகை முதலிய ஸகல பூர்வாசாரிய கிரந்தங்களையும் முத்ரணம் செய்து பரிஷ்கரித்து உலகத்தாருக்கு அருளியுள்ளார். “ஸ்ரீஸித்தித்ரய வியாக்யானம்” அதிபால்யத்தில் அருளிச் செய்தது முதலியனவும் இங்கு நினைவுறத் தக்கது. இன்னும் பல கிரந்தங்கள் அருளிச் செய்திருக்கிறார். அவை அச்சுக்கு வரவில்லை. அநேகமாய் எல்லா பூர்வாசாரிய கிரந்தங்களுக்கும் “ஸங்க்ஷிப்தம் விஸ்த்ருதம்வா” என்கிற கணக்கில் டிப்பணம் முதலியன அருளிச் செய்துள்ளார். தற்போது * ஸ்ரீஸ்வாமி தேசிகனது ஸகல கிரந்தங்களுக்கும் உரை அருளிச் செய்து கொண்டு அதிவிலக்ஷணராய் சென்னை மாம்பலம் நாதமுனி வீதியில் நாதோபக்ஞமான நமது ஸித்தாந்தத்தை ப்ரவசநம் செய்து கொண்டு எழுந்தருளியிருக்கும் இந்த ஸ்வாமி வெகு நாட்கள் எழுந்தருளியிருந்து நமது தேசிக தர்சனத்துக்கு இன்னும் இதோ அதிகமான சாஸ்த்ரீய கைங்கர்யங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டி பேரருளாளன் பெருந்தேவித் தாயாரை ப்ரார்த்திக்கிறோம்.

சேட்டலூர் ஸ்ரீவத்ஸாங்காசாரியார்.

————————————————————————————————
  ஆங்கில ஆண்டு 1898
* வாசகர்கள் ஞாபகம் கொள்ள வேண்டியது இந்த வ்யாஸம் எழுதப்பட்டு மலர் வெளியிட்ட 1968ல் ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி ஸ்ரீதேசிக தர்சன கைங்கர்யங்களில் ஒப்பற்றவராய் வாழ்ந்து கொண்டிருந்த காலம். ஸ்வாமி பரமபதித்தது 1983ல்.
இணையத்தில் உத்தமூர் ஸ்வாமி என்று தேடினால் ஸ்வாமியைப் பற்றி பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. அவரிடம் நெருங்கிப் பழகும் பாக்யம் பெற்ற பல மஹான்கள் இன்று இருப்பதால் உத்தமூர் ஸ்வாமியைப் பற்றி மேலும் விரிவாக அறியலாம். மலரில் இட அளவு கருத்தில் கொண்டு ஸ்ரீமதுபயவே ஸ்ரீவத்ஸாங்காச்சார் ஸ்வாமி மிக அவசியமான தகவல்களை மட்டும் சொல்லியிருக்கிறார்.
உத்தமூர் ஸ்வாமியைப் பற்றி “ மாலுகந்த ஆசிரியர்” என்னும் அற்புதமான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கும் அடியேனது அபிமான ஸ்ரீ D.R. ஸ்வாமி ஸ்வாமியின் திருநாமத்தை இப்படி வர்ணிக்கிறார்.
V eerarAghavAchArya Swamy of UttamUr !
E lated do we feel, – relations, disciples, admirers,
E ighty years of sacred, pure and dedicated life !
R are specimen of profound scholarship and prolific authorship,
A fine exponent of ancient culture in methods modern and attractive,
R edoubtable authority on all systems of philosophy,
A bhinava DESika’, Thou art acclaimed by the knowing ones,
G reat indeed are Thy achievements, as great as DESika’s,
H ighlighted by Thy professorship in many colleges of Sanskrit lore,
A nd AchAryaship imparting KAlakshEpam to sishyas galore,
V EdAntas twain ever at Thy finger’s ends,
A t home equally in Scriptures – Sanskrit and Tamil,
C ommenting on the Upanishads in each, with equal felicity,
H is Holiness KOzhiyAlam Saint’s favourite and chosen disciple,
A ttached deeply to Lord SrInivAsa, Thy patron Deity,
R ecipient ever of His Grace and Blessings, sacred and mighty,
Y ears and years more, may Thou live in peace and plenty,
A dorning the AchArya-Peeta with lustre, great and lofty.
Thats what the sacred name of the AchArya “VeerarAghavAchArya”
is all about

எத்தனை மஹான்கள்! எத்தனை க்ரந்தங்கள்! 22

Tuesday, January 10th, 2012

ஸ்ரீமதுபயவே……..

கோபாலதாத தேசிகன்

(வில்லியம்பாக்கம் ஸ்வாமி)

இந்த ஸ்வாமி ஏடூர் எம்மடி லக்ஷ்மீ குமார கோடி கந்யகாதானம் லக்ஷ்மீ குமார தாத தேசிகன் திருவம்சத்தில் திருப்புட்குழி எம்பெருமான் கைங்கர்ய பரம்பரையில் ஸ்ரீநிவாஸதாத தேசிகனுக்கு குமாரராக, வில்லியம்பாக்கம் என்கிற அக்ரஹாரத்தில் திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ஸ்வாமி (மாதமஹன்) திருமாளிகையில் ஆனந்த ஸம்வத்ஸரம் தை மாதம் விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
இந்த ஸ்வாமிக்கு வில்லியம்பாக்கம் ஸ்வாமி என்று ப்ரஸித்த வ்யவஹாரம். ஏழாவது திருநக்ஷத்திரத்தில் பிதாவினிடத்தில் ப்ரம்ஹோபதேசம். பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கராஜ வீதியில் க்ருஹ நிர்மாணம் பண்ணிக் கொண்டு பத்து திருநக்ஷத்திரத்திலேயே ஏள்ளி நித்யவாஸம் செய்தருளினார். ஸ்ரீமதுபயவே ஸ்ரீமத் கிருஷ்ணதாத தேசிகனிடம் பஞ்சஸம்ஸ்காரம் பண்ணிக்கொண்டு ஸாமான்ய சாஸ்திரமும் உபய வேதாந்த காலக்ஷேபமும் செய்தருளினார். ஸ்ரீரங்கராஜ வீதியில் உள்ள திருப்புட்குழி ஸ்வாமி ஆச்ரமத்தில் உள்ள ஸ்ரீதேசிகன் ஸந்நிதியில் அனேக சிஷ்ய வர்க்கங்களுக்கு உபய வேதாந்த ப்ரவசநம் செய்துகொண்டும் பஞ்சகால பராயணராய் ப்ரதி தினமும் காலையில் பேரருளாளன் பெருந்தேவித் தாயாருக்கு மங்களாசாஸன காலத்தில் பால் அமுது செய்வித்துக் கொண்டும், விரக்தாக்ரேஸரராய் ஆசார்யாபிமதமான பேரருளாளன் திருவடிகளையே தாரக போஷக போக்யங்களாக அத்யவஸித்து நித்யவாஸம் செய்தருளினார். இந்த ஸ்வாமி ஸாதித்த கிரந்தங்கள்:
உபாகர்ம தர்பணம், ஸங்கரம த்வாதசீ நிர்ணயம், ஸங்க்ராந்தீ நிர்ணயம், மித்யாதீத ப்ராயஸ்சித்த நிர்ணயம், புத்ர ஜனனாசௌச ப்ராபல்ய விதி, உபராகே கர்தவ்ய விதி முதலியன.

எத்தனை மஹான்கள்! எத்தனை க்ரந்தங்கள்! 21

Monday, January 9th, 2012
ஸ்ரீமதுபயவே…..மஹாமஹோபாத்யாய….. ஏடூரெம்மடி திருமலை
லக்ஷ்மீகுமார கோடி கந்யகாதானம்
க்ருஷ்ண தாத தேசிகன்

(திருப்புட்குழி ஸ்வாமி)

இந்த ஸ்வாமி ஸ்ரீமத் நாதமுனிகள் திருவம்சத்தில் 21வது தலைமுறையில் அவதரித்து, ஜகதாசார்யரான ஸ்ரீஉபய பஞ்சமதபஞ்ஜன தாத தேசிகன் ஸ்வீகார குமாரராகவும் உள்ள உபய லக்ஷ்மீ குமார தாத தேசிகன் திருவம்சத்தில் திருப்புட்குழி எம்பெருமான் கைங்கர்ய பரம்பரையில் ஸ்ரீவேங்கடதேசிகன் குமாரராக ஸ்வபானு ஸம்வத்ஸரம் ஐப்பசி மாதம் ஆச்லேஷா நக்ஷத்திரத்தில் அரசாணிபாலை அஸ்தோகாத்வரி ஸ்வாமி திருமாளிகையில் அவதாரம்.
யதாகாலத்தில் தம் பிதாவினிடத்தில் ப்ரம்ஹோபதேசம் யஜுர்வேதாத்யயனம் ஆழ்வார்கள் அருளிச்செயல்கள் அனைத்தும் பெற்றார். தம் பெரிய தகப்பனாரான கோபால தாததேசிகனிடம் பஞ்சஸம்ஸ்காரமும் ஸ்ரீமத் ராமாயண உபதேசமும் ஸ்ரீராமஷடக்ஷர மந்த்ரோபதேசமும் பெற்றார். பிறகு வெங்கடாசாரியார் ஸ்வாமியிடம் ந்யாய சாஸ்திரமும், ஜடபுலூர் சிங்கராச்சாரியரிடம் வியாகரண சாஸ்திரமும், தம் பெரிய தகப்பனாரிடம் மீமாம்ஸா சாஸ்திரமும் அப்யஸித்தார். அரசாணிபாலை ஸ்ரீஸ்வாமி குமாரத்தி பெருந்தேவி அம்மங்காரை பாணிக்ரஹணம் பண்ணிக் கொண்டார். பிறகு உபய ஸ்ரீநிவாஸ மஹா தேசிகனிடத்தில் உபயவேதாந்த காலக்ஷேபமும் இருபது திருநக்ஷத்திரத்திற்குள் பூர்த்தி செய்து ஸ்ரீபேரருளாளன் விஷ்வக்ஸேன கைங்கர்யத்தையும் அங்கீகரித்தார். பிறகு ப்ரதிஸம்வத்ஸரம் ஸ்ரீபெரும்பூதூர் எம்பெருமானார் ஸந்நிதியிலும், ஆழ்வார் கோஷ்டியிலும், வேதபாராயணம் கோஷ்டியிலும் துரந்தரராக ஏள்ளியும், அங்கே ஸந்நிதி களில் கைசிகபுராணம் முதலிய கைங்கர்யங்களைச் செய்து கொண்டும் பிரதிதினமும் பேரருளாளன் பெருந்தேவித் தாயாரை மங்களாசாஸனம் செய்துகொண்டும் அனேக சிஷ்ய வர்க்கங்களுக்கு உபய வேதாந்த காலக்ஷேப ப்ரவசநம் செய்துகொண்டும் ஸ்ரீபேரருளாளனின் ஸந்நிதி வீதியில் பூர்விகாள் திருமாளிகையில் ஏள்ளியிருந்து மத்தியான்னம் ராத்திரி காலங்களில் தர்க்கம், வ்யாகரணம், மீமாம்ஸை முதலான ஸாமாந்ய சாஸ்திர ப்ரவசநமும் செய்துகொண்டும் ஸதா வித்யா ப்ரவசநம் போலவே தர்க்க வேதாந்த மீமாம்ஸா க்ரந்த நிர்மாணங்களும் செய்து கொண்டு எழுந்தருளியிருந்தார்..
பிறகு ஸ்ரீதூப்புல் வேதாந்த தேசிகனுக்கும் தீபப்ரகாச எம்பெருமானுக்கும் வார்ஷிக விசேஷ உத்ஸவங்களும் ஸந்நிதி ஜீரணோத்தாரணமும் செய்து வைத்தார். ஸ்ரீ தூப்புல் வேதாந்த தேசிகனுக்கு ஸ்ரீ பேரருளாளன் ஸந்நிதியில் மங்களாசாஸனமும் வெகு விமர்சையாக செய்வித்தருளினார்.
ஸ்ரீஸ்வாமி அருளிச் செய்த க்ரந்தங்கள்
வ்யாகரண விஷயம்: (1) ணத்வ சந்த்ரிகை (2) பரமுக சபேடிகா.
மீமாம்ஸா விஷயம்: பாட்ட ஸங்கரஹ டிப்பணீ
வேதாந்தம்: (1) ரத்நபேடிகா (2) ப்ரம்ஹ சப்தார்த்த விசார: (3) ஸந்யாய பரிசுத்தி (4) வித்வஜ்ஜநவிநோதிநீ
ஸம்ப்ரதாயம்: துரர்த்த தூரீகரணம்
ந்யாய க்ரந்தங்கள் : ப்ரதிபந்தகத்வ விசார:, குவலயோல்லாஸ:, சதகோடி கண்டன க்ரந்த:, சதகோடி முண்டன க்ரந்த: முதலியன.
வில்லியம்பாக்கம்
ஸம்பத்குமார தாதாசாரியர் ஸ்வாமி
காஞ்சி.

எத்தனை மஹான்கள்! எத்தனை க்ரந்தங்கள்! 21

Sunday, January 8th, 2012
அக்நிஹோத்ரம்
தாத தேசிக தாதாசார் ஸ்வாமி
(திருக்குடந்தை)
ஸ்ரீஉப.வே. பட்டு ஸ்வாமிகளுக்குப் பிறகு ஸ்ரீஅக்நிஹோத்ரம் தாததேசிக தாதாசாரியார் ஸ்வாமி ஆசார்யபீடம் வஹித்தாயிற்று. ஸ்ரீஸ்வாமி பால்யத்திலேயே வம்ச பரம்பரைப்படி வேதாத்யானம், வேதலக்ஷணம் கற்று மீமாம்ஸை, ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், இன்னும் பல ஸம்ப்ரதாய க்ரந்தங்களை ஸ்ரீபட்டு ஸ்வாமிகளிடம் காலக்ஷேபங்களைச் செய்து, வேதபாஷ்யம், கல்ப ஸூத்ரங்கள் இவைகளில் அஸாதாரணமான பாண்டித்யத்தைப் பெற்று திருவிதாங்கூர், புதுக்கோட்டை, மைசூர் முதலிய முன்னாள் ராஜாக்கள் நடத்திவந்த பண்டித சபையில் முதல் சம்மானம் அளிக்கப்பட்டு மெச்சி கௌரவிக்கப்பட்டார். ஆசாரம், அனுஷ்டானம், வைராக்யம், வைலக்ஷண்யம் இந்த ஸ்வாமிக்கு ஒரு விசேஷணம்.
கர்மானுஷ்டானத்தில் யாக்ஞ்யவல்க்யாதி ரிஷிகளைப்போல் நெறி தவறியது இல்லை. ஸ்ரீமத் ராமானுஜ ஸித்தாந்தத்தையும் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகர் ஸம்பிரதாயத்தையும் அநேக ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயஸ்தர்களுக்கு காலக்ஷேபங்கள் உபதேசங்கள், உபந்யாஸங்கள் மூலம் பிரசாரம் செய்தும் தேசிக தர்சனத்தின் பரந்த நோக்கத்தையும் அதன் உட்கருத்துக்களையும் திராக்ஷாபாகமாக மனதில் தெளிவுபட ஸாதிப்பது ஒரு சிறப்பு. மேலும் ஸ்வாமிக்கு வேதங்களில் ஆங்காங்கு உத்கோஷிக்கும் வேத வாக்யங்களே ஸ்ரீபாஷ்யகார, ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகனால் திருவாய் மலர்ந்தருளி யாயிற்று என்று ஐகண்ட்யம் செய்து கருத்து வேற்றுமை கிடையாது என தெளிவுற ஸாதிப்பது வழக்கம்.
நமது தேசிகதர்சன தீபம் ஸ்ரீ வி.வி. முத்தண்ணாவுக்கு, இந்த ஸ்வாமியிடம் விசேஷ பக்தியும் அன்பும் அதிகம். ஸ்ரீ வி.வி. ஸ்வாமி அடிக்கடி ஸ்ரீதாததேசிக தாதாசாரியார் ஸ்வாமியை “வேதமூர்த்தி” என்று வெகு சிலாக்யமாக கொண்டாடுவது நம் ஸம்பிரதாயஸ்தர்கள் மனதில் இன்றும் இருக்கும். திருக்குடந்தையில் பலகாலமாக நடந்து வருகிற “விசிஷ்டாத்வைத ஸபை”யில் சுமார் 30 ஸம்வத்ஸரங்கள் ஸ்ரீதாததேசிக தாதாசாரியார் ஸதஸ்யராக இருந்து பல வாக்யார்த்தங்களில் கலந்துகொண்டும் உபந்யாஸங்கள் மூலமாகவும் விசிஷ்டாத்வைத வேதாந்தத்தைப் பரப்பி வந்தார். ஸ்ரீஸ்வாமி திருமாளிகையில் காலையில் ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் காலக்ஷேபங்கள் ஸாதிப்பதும், போதகாசாரியராகவும், மற்ற சமயங்களில் வேத பாஷ்யம், வேத லக்ஷணம், சிரௌதம், மீமாம்ஸா கல்ப ஸூத்ரங்களையும் ஸ்ரீஸ்வாமிகளிடம் நம் ஸம்பிரதாயஸ்தர்களும் இதர வேதாந்திகளும் கற்பதைப் பார்த்தால் ஸ்வாமி திருமாளிகை ஒரு “குருகுலம்” என்று சொல்வது மிகப் பொருத்தம். ஸ்ரீமத் ராமாநுஜ ஸித்தாந்தத்தையும் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த கிரந்தங்களையும் ஸ்ரீஸ்வாமிகளிடம் காலக்ஷேபங்கள் செய்த பல தனவந்தர்களும், பண்டிதர்களும், சிஷ்ய கோடிகளும் ஆங்காங்கு பல பாகங்களில் இருக்கின்றனர்.
வம்ச பாரம்பர்யப்படி, பட்டு ஸ்வாமிகளுக்குப் பிறகு ஆசார்ய ஸ்தானத்தை வகித்து சிஷ்யகோடிகளுக்கு ஸமாச்ரயணம் மந்திரோபதேசம், ப்ரபத்தி முதலியவைகளை செய்து வந்தார்.
ஸ்ரீஸ்வாமிகளால் எழுதப்பட்டுள்ள கிரந்தங்கள் “ஸூத்ரானுகுண்யஸித்தி விமர்சனம்”. இந்த நூல் லலிதமான முறையில் அத்வைத ஸித்தாந்தத்திற்கு “ப்ரும்ம சூத்ரம்” பொருந்தாது என்று நிரூபிக்கிறது. “த்ரவிடாத்ரேய தர்சனம்” என்ற க்ரந்தம் அத்வைதிகள் த்ரவிட பாஷ்யகாரரைப் பற்றியும் வ்ருத்திகாரர்களைப் பற்றியும் சொல்லும் வாதங்களைக் கண்டித்து பகவத் ராமாநுஜ ஸித்தாந்தத்தை ஸ்தாபிப்பது. “வேத நவனீதம்” என்ற நூல் விசிஷ்டாத்வைத வேதாந்தம்தான் வேதத்தின் அடிப்படையான தத்வம் என்று நிரூபிக்கிறது.
ஸ்ரீஸ்வாமிகள் சென்னை, மைசூர் சர்வகலாசாலைகளில் விசிஷ்டாத்வைத வேதாந்தத்திற்கு பரீக்ஷாதிகாரியாகவும், பல இடங்களில் நடத்தப்பட்ட விசிஷ்டாத்வைத ஸதஸுகளில் ஸதஸ்யராகவும் பணியாற்றி இருக்கிறார். ஸ்வாமியின் பாண்டித்யத்தைப் பாராட்டி “ச்ருதி ஸ்மிருதி மீமாம்ஸா கல்ப ஸூத்ர விசாரத” “வேத பாஷ்ய ப்ரவீண” என்ற விருதுகளால் மைசூர், திருவிதாங்கூர்களில் பாராட்டினார்கள்.
வேதங்கள், வேதபாஷ்யங்கள், விசிஷ்டாத்வைத வேதாந்தம், மீமாம்ஸா, கல்ப ஸூத்ரங்கள் இவைகளில் ஸ்வாமிக்கு உள்ள அபார பாண்டித்யத்தை மெச்சி நமது பாரத ராஷ்ட்ரபதியால் 1962ல் கௌரவிக்கப் பட்டார்.
ஸ்வாமிகள் 60 ஸம்வத்ஸரங்களுக்கு மேல் வேதத்திற்கும் ஸ்ரீபகவத் ராமானுஜ ஸித்தாந்தத்திற்கும் தேசிக தர்சனத்திற்கும் பாடுபட்டு ஸ்வாமியின் 84-வது திருநக்ஷத்திரத்தில் திருநாட்டை அலங்கரித்தாயிற்று.
இந்த ஸ்வாமியின் தனியன்
ஸ்ரீசைல வம்ச கலசோததி பூர்ணசந்த்ரம் ஸ்ரீவாஸதாத மகிவர்ய க்ருபாந்த போதம்தம் ஸுந்ரார்யதநயம் ததுபாத்த மந்ரம்* ஸ்ரீவேங்கடேச குருவர்யமஹம் ப்ரபத்யே
(மாசி அனுஷம்)
(அடியேன்.
*இது அச்சுப் பிழையா என்பது தெரியவில்லை. நூலில் உள்ளதை அப்படியே தட்டச்சிட்டிருக்கிறேன். )

எத்தனை மஹான்கள்! எத்தனை க்ரந்தங்கள்! 20

Thursday, January 5th, 2012

ஸ்ரீமதித்யாதி …. கோடி கன்னிகாதானம் அக்நிஹோத்ரம்

ஸ்ரீநிவாஸ தாதாசார்யர் ஸ்வாமி

(பட்டு ஸ்வாமிகள். திருக்குடந்தை)
“தாதா” என்ற பதம் திருமலை திருவேங்கடமுடையான் தனது பரம பக்த ச்ரேஷ்டரான ஸ்ரீ பெரிய திருமலை நம்பியைப் பார்த்து ஒரு ஸமயம், “தாதா” என்று கூப்பிட்டதிலிருந்து ஏற்பட்ட அருள் வாக்கு. இந்த தாதாசாரியர் எனப்படும் ஆசார்ய புருஷ வம்சம் ஸ்ரீ சுமார் 1000 வருஷ காலமாக ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந் தத்தை பரப்புவதற்கும் பாதுகாப்பதற்கும் அளவிலா பங்கு கொண்டது. ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தில் முக்ய ஆசார்யர்களான ஸ்ரீமந்நாதமுனிகள், ஸ்ரீமன் யாமுன முனிகள் இந்த வம்சத்தில் அவதரித்தவர்கள். வம்ச பரம்பரையில் கோடிகன்னிகாதானம் ஸ்ரீ தாத தேசிகன் திருவவதாரம்.
ஸ்ரீதாத தேசிகன் கர்னாடக தேசத்தரசர்களுக்கு ராஜகுரு. விஜயநகர ஸாம்ராஜ்ய அரசர்களின் உதவியால் குளம் வெட்டுதல், அக்ரஹார ப்ரதிஷ்டை, கோவில் திருப்பணி இன்னும் பல தர்ம காரியங்களுக்கு தனது சிஷ்யகோடி களாலும் அரசர்களாலும் “துலாபாரம்” செய்யும் த்ரவியத்தை அர்ப்பணம் செய்துவந்தார். ஸ்ரீ காஞ்சீ சமீபமுள்ள “அய்யங்கார் குளம்” எனப்படும் புஷ்மரிணி ஒரு முக்யச் சின்னம். ஸ்ரீ காஞ்சீ க்ஷேத்திரத்தில் வரதராஜர் கோவிலிலுள்ள துலாபார மண்டபத்தையும் ஸ்ரீதாத தேசிகரையும் தர்ம்பத்னியையும் இன்றும் ஸ்ரீ காஞ்சீ க்ஷேத்திரத்தில் ஸேவித்து வருகிறோம்.
இப்படி இந்த தாதாசரியர் வம்சத்தில் பிரஸித்த ஆசாரிய புருஷர்கள் ஸந்ததியில் ஸுப்ரஸித்தரான ஸ்ரீ உப.வே. பட்டு ஸ்வாமிகள் திருவவதாரம். பால்யத்திலேயே வேதாத்யயனம், சாஸ்திரங்கள் ஸம்பிரதாய கிரந்தங்களான ஸ்ரீபாஷ்யம், ரஹஸ்யத்ரய ஸாரம், திவ்யப்ரபந்தம், இவற்றை காலக்ஷேபம் செய்து ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸித்தாந்தப்படி, எளிய வாழ்க்கை, வைராக்யம், ஆசாரம், அனுஷ்டானம் இவைகளோடுகூட ஸுமார் 30 ஸம்வத்ஸரம் வேதங்களில் உத்கோஷித்த பிரகாரம், அக்னிஹோத்ரத்தை பிரதி தினம் ஸாயம் பிராதா அனுஷ்டித்து ஸ்ரீமத் வேதமார்க்கத்தை பிரதிஷ்டாபனம் செய்தும், ஸ்ரீமத் பகவத் ராமாநுஜ ஸித்தாந்தத்தையும் ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகனின் திவ்ய ஸூக்திகளைப் பரப்புவதற்கும் பல இடங்களுக்கு எழுந்தருளி பிரசாரம் செய்தும், காலக்ஷேபங்கள் மூலம் உபதேசம் செய்தும், ஸ்ரீஸ்வாமியின் திருமாளிகையில் அனவரதம் ஸ்ரீஸ்வாமியை ஆச்ரயித்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் காலக்ஷேபம் ஸாதிப்பது ஒரு அழகு. அபிகமன ஆராதனமானபிறகு ஸ்ரீபாஷ்ய காலக்ஷேப கோஷ்டி, மாத்யான்னிக ஸ்நானமான பிறகு திருவாராதனம், உபய வேதாந்த கிரந்தங்கள் காலக்ஷேப கோஷ்டிக்கு உபதேசம், ஸாயம் அக்னிஹோத்ரமான வுடன் திருக்குடந்தை ஸ்ரீகோமளவல்லிநாயிகா ஸமேத ஸ்ரீமதபர்யாப்தாமிருதனை ஸேவித்து காவ்ய நாடகங்கள், சாஸ்திரம், பாடம் சொல்லி ஒரு ஸ்தாபனமாக சுமார் அரை நூற்றாண்டுக்குமேல் ஆசார்ய ஸ்தானம் வஹித்து, 1952 ஜூன் மாதத்தில் திருநாட்டுக்கு எழுந்தருளியாயிற்று.
ஆசார்ய நிஷ்டையின் தத்வத்தை விளக்கி “ஆசார்ய நிஷ்டை தத்வநிர்ணயம்” என்கிற கிரந்தமும், (திருக்குடந்தை) “கோமளவல்லி சதகம்” என்கிற கிரந்தமும் ஸ்வாமி ஸாதித்தவை.
ஸ்ரீவாஸதாதமகிவர்ய க்ருபாத்த மந்த்ரம்
தாதேzக்நிஹோத்ரநிரதாத்மதி ஸுந்தரார்யே|
ந்யஸ்தாத்மபாரமமலம் பரிபூர்ணபோதம்
ஸ்ரீவாஸதாதகுருவர்யமஹம் ப்ரபத்யே||
சித்திரை உத்திராடம்

எத்தனை மஹான்கள்! எத்தனை க்ரந்தங்கள்! 19

Wednesday, January 4th, 2012
ஸுரபுரம் வித்வான்களின் வரலாறு
பழைய நைஜாம் ஸமஸ்தானத்தில் க்ருஷ்ணா நதிக்கும், பீமா நதிக்கும் இடையில் (குத்தி முதல் குல்பர்கா வரையிலும்) ஒரு சிற்றரசு ஏறத்தாழ A.D. 1700 வருஷம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலும் ஆண்டது. இந்த அரச வம்சத்துக்கு பாமி நாயகர்கள் தலைவர்கள். புக்கபட்டணம் என்கிற ஊரில் சடமர்ஷண கோத்ரத்தில் அவதரித்த வேங்கடாசாரியர் என்கிற மஹானை தமது தலைநகரமான ஸுரபுரத்தில் எழுந்தருளியிருக்கும்படி மேற்படி வேந்தன் வேண்ட, அதன்படிக்கு இந்த ஸ்வாமியும் அங்கு எழுந்தருளி அனேக சிஷ்யர்களுக்கு ஸகல சாஸ்த்ரங்களையும் ப்ரவசநம் செய்து கொண்டு வந்தார். இந்த ஸ்வாமியின் குமாரர் அண்ணயாசாரியர்I என்பவர். இவர் குமாரர் நரஸிம்ஹாசாரியர் இவர் குமாரர் ஸ்ரீநிவாஸ தாதாசாரியர் I. இவர் திருக்குமாரர் வேங்கடாசாரியர் II என்கிற மஹான். இந்த ஸ்வாமி பல ஸ்ரீகோசங்கள் அருளிச் செய்திருக்கிறார். இவற்றுள் சில :– 1, ஆனந்ததாரதம்ய கண்டனம் (2). ஜகன்மித்யாத்வ கண்டனம் (3) வேதாந்த தேசிக தண்டகம் (4) வேதாந்த தேசிகாஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம் (5) ஸித்தாந்த ரத்நாவளீ. (இந்த ஸ்ரீகோசத்தில் ஸ்ரீபாஞ்சராத்ர சாஸ்திரங்களின் ப்ரமாண்யமும், திருவாழி திருச்சங்குகளை பிராம்ஹணர்கள் யாவரும் தரிக்க வேண்டும் என்பது பற்றியும், மற்றும் ஸம்ப்ரதாயத்திற்குத் தேவையான ஸகல விசேஷார்த்தங்களையும் நிரூபித்திருக்கிறார்) (6) ஸித்தாந்த வைஜயந்தி முதலியன.

Sunday, January 1st, 2012

 Posted in Uncategorized | Leave a comment

எத்தனை மஹான்கள்! எத்தனை க்ரந்தங்கள்! 18

Friday, December 30th, 2011
||ஸ்ரீ:||
ஸ்ரீமதித்யாதி சதுர்வேத சதக்ரது
நரஸிம்ஹ தாதயார்ய மஹாதேசிகன்
(நாவல்பாக்கம் ஸ்வாமி)
இம்மஹான், ஞானானுஷ்டானங்களை குலதனமாக உடைய ‘சதுர்வேத சதுக்ரது’ குமார தாதயார்ய வம்சத்தில் ஸ்ரீ வெங்கடரங்காசார்ய ஸ்வாமிக்கு குமாரராக அவதரித்தவர். இவருக்கு ‘நாவல்பாக்கம் ஸ்வாமி’ என்று ப்ரஸித்தி. ‘வித்வான் நரசிம்மாசார்ய ஸ்வாமி’ என்று வ்யவஹாரம். பரம்பரையாக வித்வான்கள் இவர் முன்னோர்கள்.
வித்யாப்யாஸம்:– தம் மாதுலர் புரிசை நடாதூர் ஸ்ரீரங்காசார் ஸ்வாமியினிடம் இவருக்கு வேதாப்யாஸம். மைசூர் ஸம்ஸ்க்ருத கலாசாலையின் அத்யக்ஷகர் கஸ்தூரி ரங்காசார்ய ஸ்வாமியிடம் தர்க்க சாஸ்த்ரப் பயிற்சி. திருவிசநல்லூர் ராமசுப்பா சாஸ்த்ரிகளிடம் மீமாம்ஸா க்ரஹணம். ஸ்ரீபரமஹம்ஸேத்யாதி நாவல்பாக்கம் வேதாந்த ராமாநுஜ மஹா தேசிகனிடம் வேதாந்த சாஸ்த்ரோபதேசம்.
உத்தமத்தில் தேர்ச்சி:- தர்க்க சாஸ்த்ரம் பயின்றது ஏழு வருஷம். ஒவ்வொரு பரீக்ஷையிலும் தவறாமல் உத்தமத்திலேயே தேர்ச்சி. இதை ஸஹிக்காத வித்வான் ஒருவர் வேண்டுமென்றே ஓர் பரீக்ஷையில் நம்பரைக் குறைத்துப்போட்டு மத்யமத்தில் தேறும்படி செய்தார். தர்க்காசார்யரான கஸ்தூரி ரங்காசார்யருக்கு இது தெரிந்தது. இதில் ஏதோ சூது நடந்திருக்க வேண்டுமென்று எண்ணினார். அரண்மனைக்கு எழுதினார். மறுபடியும் இம்மஹானுக்கு மட்டும் பரீக்ஷை வைக்கச் செய்தார். த்ரிமதஸ்தர்களைக் கொண்டு தனித்தனியாக நம்பர் (மார்க்) போடவும் வைத்தார். எல்லாவற்றிலும் உத்தமோத்தமத்திலேயே நம்பர் வந்திருந்தது. இதைக் கண்ட எல்லோரும் வியந்தனர். கடைசி பரீக்ஷைக்குப் பிறகு ‘தர்க்க வித்வா’னென்று பிருதமளிக்கப் பட்டது. ஜோடு சால்வை முதலானது ராஜ ஸம்மானமாக வழங்கப் பட்டது. இதுபோலவே பல சமஸ்தானங்களில் பரீக்ஷை கொடுத்துத் தேறினார்.
வாதத்தில் வெற்றி:– பல ஸதஸ்ஸுகளில் வாதம் புரிந்தார். மன்னார்குடி ஸதஸ்ஸில் உத்தர தேசத்து தர்க்க வித்வானொருவர் சபை முடியுந் தருணத்தில் வந்து, ‘என்னோடு வாதம் புரியுந் திறமையுள்ளவர் வாதிக்கலா’மென்று வம்புக்கிழுத்தார். அதற்கு சற்று முன்புதான் இச்சுவாமி ஸம்பாவனை பெற்று தம்மூருக்குத் திரும்பும் உத்தேசத்தில் ஹரித்ரா நதி சமீபத்தில் சென்று கொண்டிருந்தார். ஸதஸ்ஸிலுள்ள பல ப்ராசீன ப்ரஸித்த பண்டிதர்களும் ஒரே அபிப்ராயமாக ‘நாவல்பாக்கத்துப் பிள்ளையாண்டான் தான் இவனை அடக்க முடியும்’ என்று நிச்சயித்து இவரை அழைத்துவரச் செய்தனர். வாதம் செய்யவும் தூண்டினர். அதற்கிணங்கி வாதம் புரிந்தவர் ஸ்வாமி. வாதி சொன்னதிற்கு மேல் மூன்று ஆக்ஷேபங்களை நிறுத்தினார். வெற்றியையுங் கண்டார். இதுபோலவே கொச்சி ராஜாவை கேள்வியினாலேயே மடக்கி வெற்றி வாகையும் சூடினார் இச் சுவாமி.
அனுஷ்டானம் :– ஸந்த்யோபாஸனத்தை காலத்தில் செய்வதில் மிகவும் பிடிவாத முள்ளவர். சில சமயங்களில் ;ஸந்த்யா காலத்தில் தூங்கிவிடப் போகிறோமே’ என்று அஞ்சி, கண்விழித்த சமயம் பின்மாலை 3 மணியாகயிருந்தாலும் அப்பொழுதே குளத்திற்கு நீராட்டத்துக்காக எழுந்தருளுவதுமுண்டு. அனுஷ்டானத்திற்காக அங்கு சந்த்யா காலத்தை ப்ரதீக்ஷித்துக் கொண்டிருக்க நேரும்.
வைராக்யம்:– உபகரிப்பாரிருந்தும் தேவைக்குமேல் ப்ரதிக்ரஹிப்பது இல்லை. சாஸ்த்ரீய ரீதியில் விருத்தியை நடத்தும் விரதங் கொண்டார் ஸ்வாமி. சக்தி உள்ளவளவும் உஞ்ச விருத்தியை விரதமாகக் கொண்டிருந்தார். அசக்தி வந்த பிறகும் தமக்கு உகந்த இடத்தில்தான் ப்ரதிக்ரஹித்து வந்தார். மற்ற இடத்தில் ஸ்வர்ணத்தையும் த்ருணீகரிப்பவர். கிருகஸ்தராயிருந்தும் துறவி போன்று ப்ரகாசித்தவர்.
ஆடம்பரமற்ற வாழ்க்கை:– படாடோபத்தை அடியோடு வெறுத்தவர். இதற்குச் சான்று – பெரிய விருத்தத்தில் அமைந்த தனியனை வெறுத்து சின்ன விருத்தத்தில் (அநுஷ்டுப்பில்) அமைந்த தனியனை அங்கீகரித்ததுவொன்றே அமையும். பரஸமர்ப்பண அனுஷ்டானத்திற்காக ஸந்நிதிக்கு எழுந்தருளுங் காலத்தில்கூட, தமக்கு ஓர் மஹத்வம் தோன்றும்படி சிஷ்யபரிஜனங்கள் சூழ்ந்து வருவதை கண்டிப்புடன் நிராகரிப்பவர்.
அர்ச்சையிலீடுபாடு:– பேரருளாளனிடம் அதிக ஈடுபாடு. ‘மற்றொரு தெய்வந் தொழானவனையல்லால்’ என்ற ரீதியில் இருந்ததென்றால் மிகையாகாது. அதன்பலனாக, தம் கிருஹத்தில் தமக்கு ஆராத்யனாக பேரருளாளனையே ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் ஏற எழுந்தருளப்பண்ணி அர்ச்சையில் ஆராதித்து வந்தார்.
பகவத் ஸந்நிதியில் தீவட்டி கைங்கர்யம்:– நவராத்திரி முதலான உத்ஸவங்களில் வெளித் திருமுற்றத்தில் திவ்ய தம்பதிகள் பற்றி உலாவும் சமயம், கண்ணீர் மல்க ஆனந்த பரிதராய் தீவட்டி பிடிக்குங் கைங்கர்யத்தையே தாமேற்றுக் கொண்டு போர உகந்து வந்தார் ஸ்வாமி. இதனால் பகவத் கைங்கர்யத்தில் ஏற்றத் தாழ்வு கிடையாது என்பதை அனுஷ்டித்துக் காட்டினபடி.
ஆசார்ய ஸேவையின் ப்ரதான்யம்:– நவராத்திரி உத்ஸவமும் தேசிகனுத்ஸவமும் சேர்ந்துவரும் சமயத்தில் பெருமாள் கைங்கர்யத்தைப் புறக்கணித்து இருவேளையிலும் தேசிகன் கைங்கர்யத்தி லீடுபட்டிருப்பார் ஸ்வாமி. தேசிகன் சாற்று மறையன்று பெருமாளும் தேசிகனும் மலையிலிருந்து கீழிறங்கும்போதும், சந்நிதிப்ரதக்ஷிணத்தில் எழுந்தருளும் போதும் பெருமாளை விட்டு தேசிகனுக்கே பரிஜனமாய் நின்று திருவாலவட்டம் சமர்ப்பிப்பது போன்ற கைங்கர்யங்களைச் செய்து உகந்து வந்தார்.
அதிதி பூஜையில் பரிவு:– அதிதி கிடைத்துவிட்டால் தீர்த்த பானமாவது பண்ணாமல் போக விடுவதில்லை. ‘ந கஞ்சன வஸதள ப்ரத்யாசக்ஷீதய’ ‘அக்னிரி வ ஜ்வலன் அதிதி ரப் யாகச்சதி’ என்பது போன்ற பிரமாணங்களைக் காட்டி ஆதித்யத்தை ஸ்வீகரிக்கச் செய்வார் ஸ்வாமி.
அத்யயனம் பண்ணினவர்களிடம் விசேஷாபிமானம்:– வேத ஸம்பன்னர்களைக் கண்டால் கட்டுக்கடங்கா மகிழ்ச்சி. ஏதேனும் ஸ்வல்பமாவது ஸ்வீகரிக்கச் செய்தாலல்லது ஸ்வரூபந்தரியார். ‘யம் யம் க்ரது மதீதே தேந தேநாஸ்யேஷ்டம் பவதி’ (யாகத்தை போதிக்கும் வேத பாகத்தை அத்யயனம் பண்ணின மாத்ரத்தாலேயே யாக பலன் உண்டாகிறது.) என்பவை போன்ற வேத வாக்யங்களை உதாஹரித்து கேழ்ப்போரை பரவசமடையச் செய்வது இயல்பாக அமைந்திருந்தது இவரிடம்.
மனம் நோக நினைக்கார்:– பாகவதர்களின் மனம் புண்பட நினையார். புத்திக்குப் போக்குவீடாக சம்ப்ரதாய விஷயமாய் தாம் எழுதின சிறு நூலை, தாமே கொண்டுபோய் குளத்தில் தீர்த்தத்தில் சேர்த்துவிட்ட நிகழ்ச்சியே இதற்குச் சான்று.
சிறந்த குணங்கள்:– தன் கார்யத்தைத் தானே செய்வது. மனதில் நல்லதென்று, சரியென்று தோன்றியதை தைரியமாயுரைப்பது போன்ற சிறந்த குணங்கள் நிரம்பியுள்ளவர் ஸ்வாமி.
ஸஞ்சாரம்:– கடலாடி மலையேறி கங்கா ஸ்நானம் பண்ணியவர்.
உபதேசம்:– “காலத்தில் முழுகித் துதி. காரியங்களைச் செய். பாகவதரை வெறுக்காதே. தினமும் பாஷ்யாதியை வாசித்துவா. அன்னத்தை எறியாதே. தளிகை சரியில்லை என்று அன்னத்தை நிந்திக்காதே. அந்நத்தை நிரஸ்கரிக்காதே. பஹுமானித்துவா. பக்வமான அன்னத்தையே பகவானுக்கு நிவேதனம் செய். தளிகை ஆகாத அன்னம் ருத்ரனுக்குச் சேரும். காந்தல் நிருருதி தேவதைக்கு. ஆகையால் பக்வமானதையே சமர்ப்பி. எப்போதும் த்வயத்தை அனுசந்தித்து உஜ்ஜீவியுங்கோள்” என்று உபதேசித்து வந்தார்.
உபகாரம்:– ஸமாச்ரயணம், பரஸமர்ப்பணம், சாஸ்த்ர, வேத,வேதாந்தப் ப்ரவசனங்கள் இவர் செய்த உபகாரங்கள்.
தனிச் சிறப்பு;– ப்ரமுகர்களும் வித்வான்களுமாக பல சிஷ்யர்கள் ஸ்வாமிக்கு. சில வித்வான்கள் புதுக்கோட்டை ஸமஸ்தானம் முதலியதில் பரீக்ஷை அதிகாரிகளாக இருந்து வந்திருக்கிறார்கள். ஆசார்யகம் வஹிக்கிறார்கள். இப் பெருமைகளும் ஸ்வாமிக்கிருக்கும் தனிச் சிறப்பு.
ஸ்வாமி ஸ்ரீபாஷ்யத்தில் ஆங்காங்கு அற்புதமான விஷயங்களை விமர்சித்துப் பல வாதங்களை அருளிச் செய்திருக்கிறார்.
அவையாவன:–
1. பராப்யுபகத பஹ்வர்த்தவிசார:
2. ஸ்வமதாரோபித தோஷோத்கார:
3. கதிபயாதிகரணார்த்த விசார:
4. (க்வசித் க்வசித்) பாஷ்ய வ்யாக்யாநம்
5. கதிபய ச்ருத்யர்த்த விசார:
6. ஸத்வித்யா வ்யாக்யா
7. ஆனந்தவல்லீ வ்யாக்யா
8. கடசதுர்த்தவல்லீ வ்யாக்யா
9. ப்ராசீந பாஷ்ய பாட நிர்வாஹ:
10. நிஷ்ட்டா ஸ்வரூபாதி நிரூபணம்
11. கதிபயப்ரமேய ஸ்வரூப நிரூபணம்
12. அதிகரண ஸாராவளீ தத்வ்யாக்யா பராமர்ச:
முதலியன.
ஸ்ரீபாஷ்யத்தில் ஒரு அதிகரணத்தை ஸேவித்தால் அனேக க்ருச்ர பலமுண்டு என்று அடிக்கடி ஸாதிப்பது வழக்கம். இங்ஙனே பல.
கூத்தப்பாக்கம் கிருஷ்ணமாச்சாரியர்.

எத்தனை மஹான்கள்! எத்தனை க்ரந்தங்கள்! 17

Friday, December 30th, 2011
தேசிக தர்சநம் காட்டிய
ஸ்ரீமதித்யாதி ……
ஸௌமிய நாராயணாசாரியார் ஸ்வாமி
(திருக்கோட்டியூர் ஸ்வாமி)
திருக்கோட்டியூர் ஸ்வாமி என்றும் கோஷ்டீபுரம் ஸ்வாமி என்றும் பிரஸித்தராக எழுந்தருளியிருந்த ஆசார்ய சிரேஷ்டரான ஸ்ரீ ஸௌம்ய நாராயணாசார்ய ஸ்வாமியை நம் நாட்டில் அறியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அவருடைய ஞானம் அநுஷ்டானம் ப்ரவசநம் எல்லாவற்றுக்கும் மேலாக ஆத்ம குணங்கள் இவற்றைக் கண்டு எல்லோருக்கும் அவரிடம் பக்தியும், ப்ரீதியும் இருந்தது. அவரை ‘ஸௌம்ய மூர்த்தி’ என்றும் சொல்வார்கள்.

எத்தனை மஹான்கள்! எத்தனை க்ரந்தங்கள்! 16

Thursday, December 29th, 2011

ஸ்ரீமதித்யாதி
ஸ்ரீ (ஐயா) கிருஷ்ண தாதாசாரிய ஸ்வாமி, (காஞ்சீ)
(1873 –1953)
காஞ்சிமா நகரில் தேவப்பெருமாள் ஸன்னிதி வீதியில் வசித்து வந்த மஹான் இவர். பால்யத்தில் திருப்புட்குழி ஸ்வாமி என்று ப்ரஸித்தரான ஸ்ரீ கிருஷ்ணதாதாசாரிய ஸ்வாமியின் அருள் நோக்குக்கு இலக்காகி பிறகு அவர் சிஷ்யராயும் விலக்ஷண ஆசார அனுஷ்டான சீலராயும் விளங்கிய வில்லியம்பாக்கம் கோபாலதாத தேசிக ஸ்வாமியினிடத்தில் ஸகல சாஸ்த்ரங்களையும் பயின்றார். தேவப்பெருமாளையும் தூப்புல் தேசிகனையும் தவிர தேவுமற் றறியேன் என்று அத்யவஸித்திருந்த மஹா புருஷர் ஐயா ஸ்வாமி. தூப்புல் தேசிகனுக்கு நினைத்து நினைத்து பல திருவாபரணங்களை செய்து வைத்தது இந்த ஸ்வாமியின் அருந்தொண்டே. பல சிஷ்யர்களுக்கு அத்யாத்ம சாஸ்த்ரங்களைக் காலக்ஷேபமாக ஸாதித்து வந்த இந்த ஸ்வாமி பகவத் விஷயத்திலும் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்திலும் அதிமாத்ரம் வியாமோஹிதர். வெகு உத்ஸாகத்தோடு அவைகளை காலக்ஷேபமாக ஸாதிக்கிற வழக்கம். ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸார பங்க்திகள் முழுவதும் ஆதியோடு அந்தம் முகஸ்த்தம். ஸ்ரீ கோசம் பாராமலே அப்பங்க்திகளை அழகாக ஸாதிப் பது வியப்பைத் தரும்படி இருக்கும். பிள்ளை லோகாசாரியருடைய ஸ்ரீவசன பூஷணம், முமுக்ஷுப்படி முதலிய கிரந்தங்களில் நல்ல பரிசயம். அவர் கிரந்தங்களிலுள்ள எந்த பங்க்தியை திரு உள்ளத்தில் கொண்டு ஸ்வாமி தேசிகன் பங்க்திகள் அவதரித்துள்ளன என்று காட்டுவது வழக்கம்.

No comments: