Thursday, November 10, 2011

Chakkarathazhvar Vaibhavam

நன்றி: பாஞ்ச ஜன்யம் ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார்
________

Chakkarathazhvar Vaibhavam

 
 
 
 
 
 
i
 
Rate This
Quantcast
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

“சக்கரத்தாழ்வார் வைபவம்”
1. பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் க்ஷேத்திரத்தில், சக்கரத்தாழ்வார் விசேஷமாக ஸேவை ஸாதிக்கிறார்.
2. ஸ்ரீரங்கம் சக்கரத்தாழ்வார் நம்பெருமாளான ஸ்ரீரங்கநாதனுடைய திருவாழியாழ்வானானபடியாலே ஸ்ரீரங்க திவ்யக்ஷேத்திரத்திலே இவருக்குத் தனி மஹிமை உண்டு.
3. இவரை வந்து ஸேவித்துப் பிரதக்ஷிணம் செய்து வந்தால் ஸகல தோஷங்களுக்கும் பரிஹாரம் கிடைக்குமாதலால், இன்றும் எல்லோரும் வந்து வழிபட்டுப் பலன் பெற்று வருவதைக் கண்கூடாகக் காணலாம்.
4. ஸ்ரீமன்நாராயணன் வலக்கரத்தில் உள்ள சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவனே ஸ்ரீ ஸுதர்†னர்.
5. இதையே ஸுதர்†ந சக்கரம் என்கிறோம். இவர் சக்கரராஜர், திருவாழி ஆழ்வான், ஹேதிராஜன், நேமி, என்றும், சக்கரத் தண்ணல் என்றும் பல பெயர்களால் போற்றப்படுகிறார்.
6. ஸ்ரீ ஸுதர்†னர் அனைத்து சக்திகளையும் பெற்றவர், அழிக்க முடியாத பகையை அழித்து, நீக்க முடியாத பயத்தைப் போக்கவல்லவர்.
7. எம்பெருமான் பஞ்சாயுதங்களை தரித்துக்கொண்டு இருக்கிறார். இந்த ஐவருள் சக்கரத்தாழ்வாரே முதல்வர்.
8.சக்ரத்தாழ்வாருடைய அற்புதசக்தியை எம்பெருமான் ஒருவனே அறியவல்லவன்.
9. ‘வலத்துறையும் சுடராழி’, ‘ஆழிவலவன்’, ‘வலன் ஏந்து சக்கரத்தன்’, ‘சக்கர நல்வலத்தையாய்’, ‘வலந்தாங்கு சக்கரத்தண்ணல்’, ‘திருநேமி வலவா’ என்றெல்லாம் ஆழ்வார்களால் கொண்டாடப்படுபவர் சக்ரத்தாழ்வார்.
10. ‘வட்டச் சுடராழி’, ‘வளை ஆழி’, ‘கூர்ஆழி உருவச் செஞ்சுடர் ஆழி’, ‘ஆர்மலி ஆழி’, ‘ஆர்படு… நேமி’, ‘நுதிநேமி’, ‘வளைவாய்த் திருச்சக்கரத்து’, ‘சுடர் வட்டவாய் நுதிநேமியீர்’, ‘மழுங்காத வைந்நுதிய சக்கர நல்வலத்தையாய்’, ‘வளைவாய் நேமிப்படையாய்’, ‘கூர் ஆர் ஆழி’, ‘வட்டவாய் நேமி’ என்றெல்லாம் ஆழ்வார்கள் சக்ரத்தாழ்வரைக் கொண்டாடுகிறார்கள்.
11. ‘கையார்சக்கரப்புறப்பாடு’ என்ற ஒரு நிகழ்ச்சி திருவரங்கத்தில் பிரஹ்மோத்ஸவங்களின் தொடக்கத்தின் போதுநிகழ்ந்து வந்ததாக பூர்வர்களின் வ்யாக்யானங்களில் குறிப்பிடப்படுகிறது.
12. லோக ஸம்ரக்ஷண காரியங்களில், எம்பெருமான் குறிப்பறிந்து, அவர் நினைப்பதை ஸுதர்†னாழ்வார் நொடியில் முடித்துத் தருகிறார். இந்தச் செயலை ஆழ்வார்கள் ‘கருதுமிடம் பொருதுபுனல் கைநின்ற சக்கரத்தன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.
13. சக்கரத்தாழ்வார் பகவான் திருவவதார காலங்களில் சில இடங்களில் நேரிடையாகவும், பல இடங்களில் மறைமுகமாகவும், எம்பெருமானுக்கு உதவி அநேக செயல்களைப் புரிந்து உள்ளார்.
14. வராஹ அவதாரத்தில் எம்பெருமானின் கோரைப் பற்களாக இருந்து இரண்யாக்ஷனை ஸம்ஹரிக்க உதவினார்.
15. நரஸிம்ம அவதாரத்தில் ஸுதர்†னர் அவர் கைகளில் நகங்களாக உருவெடுத்து இரணிய வதம் செய்தார்.
16. பரசுராம அவதாரத்தில் கோடரியாக மாறினார்.
17. ராமாவதாரத்தில், ஜ்வாலா மூர்த்தியாகி, அவரது வில், அம்பு பாணங்களில் அக்னியை கக்கி, எதிரிகளை அழித்தார், ராவண ஸம்ஹாரத்துக்கு துணை நின்றார்.
18. கிருஷ்ணாவதார காலத்தில் பகவானுடன் நேருக்கு நேராகவே அநேக ஸமயங்களில், எம்பெருமான் குறிப்பறிந்து எதிரிகளை அழித்துள்ளார்.
19. எம்பெருமான் கண்ணன் ஸுதர்சனாழ்வானைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டு இருந்ததால், சக்ரத்தாழ்வான் மகிமை, க்ருஷ்ணாவதார காலத்தில் விசேஷமாகப் பரிணமிக்கிறது.
20. ஸுதர்†னர் ப்ரத்யக்ஷ தெய்வம். நெறிமுறையுடன் தீவிரமாக உபாஸிப்பவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுப்பவர்.
21. உடல்நோய், அறிவு நோய், மன நோய் அனைத்தையும் தீர்க்கவல்லது. ஜயத்தை அளிக்கும், பயத்தைப் போக்கும். 22. “ஸ்ரீ ஸுதர்†நன்” என்பதற்கே நல்வழி காட்டுபவர் என்று பொருள். இந்நாளில் ஸ்ரீ ஸுதர்†னாழ்வானின் அருளே நமக்குத் தேவை.
23. பகவானுக்கோ பஞ்சாயுதங்கள்; ஆனால் ஸுதர்†நருக்கோ 16 ஆயுதங்கள்.
24. இருகரங்களிலும் பதினாறு ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு ஷட்கோண சக்ரவடிவில் யோக பீடத்தில் அமர்ந்து அருள் புரிகிறார். இவருக்குப் பின்புறம் திரிகோண வடிவில் யோகநரஸிம்மர் அருள் பாலிக்கிறார்.
25. தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ ஸுதர்†நாஷ்டகத்தில், திருவாழி ஆழ்வான் (ஸுதர்†னர்) பெருமைகளாகிய எதிரிகளுக்குப் பயங்கரமாயிருத்தல், வேதங்களால் போற்றப்படுதல், உலகு நிலைக்கக் காரணமாதல், எம்பெருமானுக்கு அழகு செய்தல், பிரமன் முதலிய தேவரால் போற்றப்படுதல், எம்பெருமானுக்குப் பல வகையிலும் துணை புரிதல், ஸம்ஸாரபந்தம்  நீங்க காரணமாயுள்ளமை, யந்த்ரத்தில் அமர்ந்துள்ளமை, உலகில் அச்சத்தை ஒழித்தல் முதலியவைகளை விளக்கி அருளிச் செய்துள்ளார்.
26. ஸ்ரீ கூரநாராயண ஜீயர் ஸ்வாமியால் இயற்றப்பட்ட ஸ்தோத்ரம் ‘ஸுதர்†ன †தகம்’ எனப்படும்.
27. ஸ்வாமி சிறந்த ஸுதர்†ன உபாஸகர். திருவரங்கத்தில் அரையர் ஒருவருக்கு கொடிய கண்டமாலை என்ற வியாதி ஏற்பட்டு மிகவும் துன்புற்றார். அரையர் இவ்வாறு வருந்துவதைக் கண்டு மனம் பொறுக்காத ஜீயர் ஸ்வாமி, ஸுதர்†னாழ்வானை ப்ரார்த்தித்து, அந்த அரையரும் நோயிலிருந்து பூரண குணம்பெற ஸுதர்†னரை ப்ரார்த்தித்து இயற்றிய அருட்பாமாலை இது. இந்த நூலுக்கு ‘ஸுதர்ஸன †தகம்’ என்று பெயர்.
28. இந்த ஸுதர்†ன சதகத்தை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்பவர்கள், எப்படிப்பட்ட தீராத வியாதியில் இருந்தும் நிச்சயம் நிவாரணம் பெறலாம். இந்த சதகத்தின் கடைசி இரண்டு ச்லோகங்களில் எம்பெருமானே ஸுதர்†நரை அழைத்து “திருவாழியே! உலக வாழ்க்கைக்கு முக்யமாக தேவைப்படும் ஆரோக்யம், ஐச்வர்யம், நீண்ட ஆயுள், ஆகியவற்றை அனைவரும் என்னிடம் வேண்டி ப்ராத்திக்கின்றனர். தகுதி உடையவர்களுக்கு அவற்றை நான் அளித்து வந்தேன். இனி கேட்கும் மக்களுக்கு நீரே இவற்றை அளியும். இதைத் தவிர வேறு எதை அபேக்ஷித்தாலும் கொடும்”, என்று எம்பெருமான் ஆணையிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
.

No comments: