"Sri Vedanta Desika Chalisa"
____________________________________
--------------------------------------------------------------------------------
தென்னன் தமிழ்Categories
செந்தாமரையாள்மாலை
திருநறையூர் மேக விடு தூது
திருவடிமாலை
திருவரங்கத்தந்தாதி
தென்னாட்டுச் செல்வங்கள்
தேசிக நூற்றந்தாதி
தேசிக ஸ்தோத்ரங்கள்
தேசிக ஸ்தோத்ரங்கள் – தமிழில்
ஸம்ரக்ஷணீ
ஸ்தோத்ரம்
ஸ்ரீ மகா பாகவதம்
Books
Computers and Internet
Uncategorized
Blogroll
திருதிரு
நம்பெருமாள்
புல்லாணிப் பக்கங்கள்
மகுடதீபன்
ஸ்ரீரங்கபங்கஜம்
Blog Stats
1,721 hits
search site archives
Pages
அடியேன்
செந்தாமரையாள்மாலை
--------------------------------------------------------------------------------
Sri Vedanta Desika Chalisa
Posted in தேசிக ஸ்தோத்ரங்கள் - தமிழில் by thiruthiru on August 3, 2010
"Dr. Veena Arora, a Punjabi lady, who has done her Ph.D. on Swami Desikan’s "Thathva Muktha kalapam" has also written a Chalisa, ahymn written in 40 stanzas, on Swami Desika out of her Bhakthi to the Greatest Acharyan . Sri Narasimman swami of Vaduvoor, now at Haryana, has recently brought this chalisa to light by a post in the Yahoo groups. Since it was in Hindi, adiyen made a request to translate it into English and Tamil, so that a vast majority of Desika Devotees can enjoy it. Sri Narasimman swami ,instantly started a blog for this at http://singamanithinkso.blogspot.com and has begun translating stanza by stanza.
In the meanwhile, Dr. Sri Sundararajan swami of Trichy, who occasionally writes to Yahoo groups ,whose command over English will admire every reader, has translated the entire Chalisa and surprised us. adiyen sincerely thank him for this great upakaram.
The "Sri Vedanta Desika Chalisa" in Hindi (original) can be read here
http://picasaweb.google.com/singamani/SrimatVedantaDesikanChalisaInDEVNAGRIScripts?feat=email#
And Dr.Sundararajan Swamin’s translation is reproduced below. And it is another surprise that Dr. swamin is a leading physician and Ortho specialist .It is our bhagyam that he spares some time for samprathaya kainkaryams.
Sri Vedanta Desika Chalisa written by researcher (Dr. Veena Arora)
Meditating by stationing in my mind the lotus feet of Ramanuja
I sing about the flawless qualities of the eminent preceptor Vedanta Desika
Hail to Vedanta Desika the ocean of qualities
Hail to the lord of ascetics, emancipator of the whole world .1.
Vedanta Desika, is the host of immeasurable skills
He grants discrimination and removes malefic thoughts .2.
Hail to the incarnation of Venkatesha’s bell
Ramanuja’s unique officer .3.
The primal worshipper of Vaishnava faith
The unconquerable sentry of Visistadvaita .4.
Son of Ananthasuri full of piety
and mother Tottaramba benevolent .5.
Descendant of the pious clan of Atreya
Extolled by the world for the great austerity of devotion .6.
Went daily to the sacred place of Venkatesha
Acquired the auspicious name Venkatanatha .7.
Of perfect form and body of incomparable charm
Fair hued and faultless moon’s desire .8.
Gazing on the figure of the five year old boy
Varada Guru(Nadadur Ammal) felt extremely happy .9.
He spoke words timely and well thoughtout
This lad will be the representative of Yatiraja(Ramanuja) .10.
Atreya Ramanuja(Appullar) got a disciple most holy
All the Veda sciptures were taught by heart . 11.
Seeing the learning, energy and strength of mind
He was made to sit on Yatiraja’s chair .12.
To meditate he went to Thiru Ahindrapura
Where the fruits of Garuda mantra were achieved .13.
He was granted the vision of Hayagriva
He was filled with knowledge and austerity .14.
Thirty times he imparted SriBashya
Got the title of Vedanta Desika .15.
He wrote profound works and increased logic
He was called lion among poets and logicians .16.
In SriRangam the meaning of scriptures were highlighted
and all other doctrines were defeated .17.
Ranganatha pronounced the auspicious words
My dear one you are "sarvatantrasvatantra" .18.
With knowledge like an agent of Vishnu
Thou shalt be called Vedantacharya .19.
Preceptor of the twin streams my Lord
sincere by nature and loving to followers.20.
Peerless form of austerity and renunciation
The brilliant sun of virtuousness and knowledge .21.
With ornaments of learning, humility and courtesy
He destroyed all impurity with the strength of austerity .22.
Among Vaishnava preceptors he is
like the sun in the sphere of the sky .23.
He created works hundred and thirty
Superhuman actions he did do .24.
Nyayaparisuddhi, Nyaya siddhanjana
Compositions like gems, enjoyed by the learned .25.
The unique work Satha Dushani
Ornament like Tattvamuktakalapa .26.
The much like ballad Yadavabyudaya
The enchanting song Hamsa Sandesa .27.
The handsome drama Sankalpa Suryodaya
Subhashitha Nivi that teaches ethics .28.
The all purifying Yatiraja Sapthathi
The most delightful Dayasathaka .29.
Raghuveera Gadya, Paaduka Sahasra
Githartha Sangraha, Hayagriva stotra .30.
Tattva Tika, Tatparya Chandrika
Seshvara Mimamsa, Mimamsa paduka .31.
Garuda Panchasath, Achyuta Sathaka
Nyasa Vimsathi, Nyasa Tilaka .32.
All these works are gems and most purifying
Vedanta Desika’s fame they made wide spread .33.
The handsome image of Vedanta Desika
Desires of one’s mind it fulfills .34.
With shoulders branded with Conch and Discus
top knot, thread and upright insignia .35.
He took birth in the land of Bharata
He destroyed and dispersed the impostors .36.
Very clever and with the strength of learning and asceticism
Always ready to do service to Vishnu .37.
Destroyed charlatans in the role of a saint
Nurtured Hari’s service through logic and scriptures .38.
He came and made Visistadvaita prosper
and pleased immensely the mind of SriVishnu .39.
Vedanta Desika removes all difficulties
for one who meditates on him by mind, deed and spech .40.
In one who worships Vedanta Desika
Proper learning and devotion developes .41.
The fame of Vedanta Desika is immeasurable and cannot be spanned by the poet
Vaishnavi "Veena" is singing his qualities using her weak intellect
Leave a Comment
ஸம்ரக்ஷணீ இதழிலிருந்து
Posted in ஸம்ரக்ஷணீ by thiruthiru on February 11, 2010
இரக்கம்
1941 செப்டம்பர் மாத ஸம்ரக்ஷணீ இதழில்
ஸ்ரீ தி.ராமஸ்வாமி ஸ்வாமி எழுதியது
வணக்கம், ஒடுக்கம், வழக்கம், ஒழுக்கம் என்ற இந்நான்கு குணங்களும் மனிதற்குரிய நற்குணங்கள். இவை நான்கும் தேசிக பக்தர்களைச் சென்றடைவன, என்று அருளிச் செய்து, பின்னர் தெய்விகத் தன்மை பொருந்திய இரக்கமும் அவர்கள்பால் சேரும் என்கிறார் இப்பாசுரத்தில். இரக்கம், தயை, கருணை, அனுதாபம், அனுகம்பா, இச்சொற்கள் எல்லாம் ஏறக்குறைய ஒரே மனநிலையைச் சொல்வன. பிறர் வருத்தம் பொறுக்காமல் அவர்களிடத்தில் இரங்குவது இரக்கம்.
பிறர் குற்றம் கண்டு அவர்களை வெறுப்பது மனித இயல்பு. பிறர் குற்றம் கண்டும் அவர்களிடத்தில் வெறுப்புக் கொள்ளாமல் இருப்பது தெய்வத்தினியல்பு. பிறர் குற்றம் கண்டும் அதையே காரணமாக் கொண்டு அவர்களை நல்வழிப் படுத்துவது ஆசார்யர்கள் இயல்பு. இரக்கமென்பது ஒரு மனோநிலை. அது கார்யகரமாவது தயை வெளிப்படுவதால். எத்தனை தாழ்ந்தோரையும் திருத்திப் பணிகொள்வது பரம தயாவான்களான ஆசார்யோத்தமர்கள் உலகிற்குப் புரியும் நன்மை. ஸ்ரீ தேவாதிராஜனும் இராமாநுச வள்ளலெனும் தயாஸாகரத்தினின்று நீர் முகந்து அருளைப் பொழிந்து அருளாளனாகிறான். “தத்தம் யேநதயா ஸுதாம்புநிதிநா பீத்வாவிசுத்தம்பய: காலேந: கரிசைலக்ருஷ்ணஜலத: காங்கக்ஷாதிகம் வர்ஷதி” இந்த ரஹஸ்யமும் மற்றொரு ஆசார்யோத்தமன் காட்ட நாமறிந்தபடி. ப்ரதிபலனை யொன்றும் தமக்கு அபேக்ஷியாமல் தம்மை அண்டின பேர்களை உயர் பதமேற்றுவது உத்தம ஆசார்யர்கள் செய்யும் மஹோபகாரம். “க்யாதிலாப பூஜாஸுவிமுக:” என்று தம் திருத்தந்தையாரை குமாரவரதார்யன் அறிந்து வர்ணித்திருக்கிறார். ஸ்வாமி தாமே ஆசார்யர்கள் க்ருபையை வர்ணிக்குமிடம் “பரக்கும் புகழ்வரும் பைம்பொருள் வாய்த்திடும் பத்தர்களாய், இரக்கின்றவர்க்கிவை ஈந்தால் அறமுளதென்றியம்யார், கரக்குங் கருத்துடைத் தேசிகர் கன்றென நம்மை யெண்ணிச், சுரக்குஞ் சுரபிகள் பொல் சொரிகின்றனர் சொல்லமுதே” என்கிற அம்ருதஸ்வாதினிப் பாசுரம். அன்றீன்ற கன்றுக்கிரங்கிச் சுரக்கும் தேனுவைப்போல் அவ்யாஜமான வாத்ஸல்யம் தான் ஆசார்யர்களுக்கு அனுரூபமான வாத்ஸல்யம். சொரிகின்றனர் சொல்லமுதே என்கிறபடி நம்பக்கல் இரக்கத்தால் ஸ்தோத்திரங்களையும் பாசுரங்களையும் ரஹஸ்ய க்ரந்தங்களையும் அபரிதமாய் அருளிய பெருமை நம் தேசிகர் பெருமானுக்கே உரியது. இரக்கமென்றால் இதுவன்றோ இரக்கம்! அன்று தம் திருவடிகளில் நேரில் அந்வயிக்க பாக்கியம் பெறாத அஸ்மதாதிகளுக்கும் பயன்படும்படி அருளிச் செயல்களை அனுக்ரஹித்த பெருமைக்குத்தானே “நிரவதி தயாதிவ் யோதந்வத் தரங்கநிரங்குசை: நியமயதிய: சிஷ்யாந் சிக்ஷாக்ரமை: குணசங்க்ரமை” என்று பாசுரமிட வேண்டும். “தீர்க்க பந்தும் தயாளும்” என்றும் “தேசிகேந்த்ரோதயாளு” என்றும் பேசப்படவல்ல தயாளு அவரே யன்றி மற்றார்?
“காரேய் கருணை இராமாநுச! இக்கடலிடத்தில் யாரே அறிபவர் நின்னருளின் தன்மை!” என்று பூர்வர்கள் வியந்தபடி மஹா விசால மனதுடையராய் அருள் வடிவாய் விளங்கியவர் ஸ்ரீபாஷ்யகாரர். அவர் அருளும் சிறிதென்னுமளவில் ஸ்வாமி தேசிகன் பொன்னருள் உலகில் ப்ரஸரித்திருக்கிறது. ஸ்ரீபாஷ்யாதி ஸம்ப்ரதாய க்ரந்தங்களை அதிகரிக்க ஸமர்த்தராய் சரணாகதி கத்யத்தில் பேசப்பட்ட முறையை முறையாக அனுஷ்டிக்க வல்ல ஞானவான்களுக்கே உடையவரருள் உதவும். அந்தணரந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகுக்கும் உதவ வல்ல தஞ்சப் பரகதியைத் தந்தருளிய பெருமை நம் தேசிகோத்தமனதே யன்றோ! மோக்ஷமென்னும் உப்பரிகைக்கு ஏறிப்போகப் படி கட்டினார்கள் ஆசார்யர்களெல்லாரும். அந்தப் படியை அந்தரங்கர்கள் சிலர் மட்டும் செல்லக்கூடிய விடத்தில் அமைத்தனர் முன்புள்ள ஆசார்யர்களெல்லாரும் கீதாசாரியன் முதல் கீதாபாஷ்யாசாரியருள்பட. நம் ஸ்வாமிதான் முதன் முதலில் அந்தப் படிகளை ராஜமார்க்கமாகிய பொது வீதியிலிருந்தே ஏறும்படி அமைத்து வைத்தார். ஆகவே தான் அந்தணர் அந்தியர் என்னும் பாகுபாடின்றி அனைவரும் இம்மார்க்கத்தை அவலம்பிக்க அதிகாரிகளானார்கள். இந்தப்படி யமைத்த அழகையும் அருமையையும் கண்டு பூர்வர்கள் வியந்து சிரக்கம்பனம் செய்தார்கள் என்று ஸ்வாமி தாமே அருளிச் செய்யும்படி, “விசிகாஸோபாதபங் திஷ்வமீ வைசம்பாயன சௌனகப்ருப்தய: ச்ரேஷ்டா: சிர: கம்பிந:” நமக்குத் தெரியாமல் போனதை இம்மட்டும் இம்மஹான் கண்டுபிடித்து உலகனைத்தையும் எளிதில் உய்விக்க உபாயத்தை உபதேசித்தனரே யென்ற ஸந்தோஷத்தைத் தம் தலையசைப்பால் காட்டுகிறார்கள் போலும். “ஸதிசது பகவான சேஷபும்ஸாம் ஹரிரப ஜந்ம ஜராதிகாம்ஸம்ருத்திம்” என்று ஒரு உதாரஹ்ருதயர் ப்ரார்த்தித்ததை இந்தப் பரம தயாளு அவதரித்துத்தான் தலைக்கட்டினார்.
எம்பெருமான் பரம தயாளு. அவன் தயையைத் தடுத்துக் கொண்டே வருகிறது நம் கர்ம ஸமூகங்கள். அந்தக் கர்மங்களை போகத்தாலேயாதல் ப்ராயச்சித்தத்தாலேயாதல் கழிக்க அரிதென்று கண்டு பகவச்சரணாரவிந்த சரணாகதியொன்றே அதற்குரிய உபாயம் என்ற சாஸ்திரார்த்தத்தை வெளியிட்டு அதை ஒரு ஸித்தாந்தமாக ஸ்தாபித்தருளி நம்மையெல்லாம் நற்கதிக்குள்ளாக்கினார் நம் தூப்புல் மாபுருடன். நாம் நலம்பெற வழியறியாது திகைப்பதால் திருவுள்ளம் நொந்துள்ள எம்பெருமானையும் தயையென்னும் குணத்தையொழிய ஏனைய குணங்களைத் தயைக்குச் சேஷபூதமாக வைத்தருள வேண்டுமென்று ப்ரார்த்தித்து அவனுக்கும் அனுகூலம் புரிகிறார். தயாசதகம் என்னும் ஒரு நூலே நம் தேசிகர் பெருமான் இரக்கத்திற்கு அத்தாக்ஷி. சேதனர்கள் பக்கம் இரக்கம் ஒருபால், பரமசேதனனான பரம்பொருளிடம் இரக்கம் ஒருபால், இவ்விரண்டும் தயாசதகத்தில் ஒருமிக்கக் காண்கிறோம். எம்பெருமான் இறக்கத்திற்கு (அவதாரத்துக்கு)க் காரணமாகிய அவனிரக்கமும் ஸ்வாமி தேசிகன் கொண்டுள்ள இரக்கத்தின் ஏகதேசமாய்க் காண்கிறது. அத்தனை அருள் பெருக்குமவர் விஷயத்தில் “இனியெனக் குன்னருளேயன்றி ஆறில்லையே” யென்று அவர் திருவடிகளில் அன்பு பூண்டு நிற்க நமக்கு வாய்ந்த ஒரு பெரும் பாக்கியம். அவர் திருவவதரித்த இம்மாதத்தில் பலவிடங்களிலும் இவரது மஹோத்ஸவத்தைக் கொண்டாடி, அவருடைய பேரருளுக்கு மனம் தோற்று, பரஸ்பரஹிதைஷிகளாய் ஒன்றுகூடி அவர் பெருமைகளைப் போற்றும் தீதிலா நல்லோர் திரள் வாழி வாழி வாழியே!
Leave a Comment
ஸம்ரக்ஷணீயிலிருந்து
Posted in ஸம்ரக்ஷணீ by thiruthiru on February 9, 2010
ஒழுக்கம்
1941 ஆகஸ்ட் மாத ஸம்ரக்ஷணீ இதழில்
ஸ்ரீ ராமஸ்வாமி தாஸன்
எழுதியது
ஒழுக்கமென்றால் நடத்தை, அனுஷ்டானம். நல்லொழுக்கமெல்லாம் முன்னே நல்வழியிற் சென்றோருடைய பழக்கத்தையொட்டியே வரும். யுக்தா யுக்தங்களை நன்குணர வல்ல விவேகமும் அயுக்தத்தை தள்ளி யுக்தத்தை மட்டும் அவலம்பிக்க தைரியமும் ஒருவனுடைய நடத்தையை நன்னடத்தையாக்கி அவனுடைய ஒழுக்கத்தை நல்லொழுக்கமாக்குவன, ஞானம், அனுஷ்டானம் இரண்டையும் உலகிற்கு உபதேசிக்கவென்றே அவதரித்த உத்தம புருஷராம் நம் தூப்புல் மாபுருடன் மலரடிப் போதுகளுக்கன்பு பூண்டவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதில் என்ன வியப்பு?
ஞான வைராக்ய பூஷணமென்று அஸாதாரண பிருது வாய்ந்த ஸ்வாமிதான் வேதாந்த தேசிகராகக் கூடும். முன்னோர்கள் தெளியாத மறை நிலங்களெல்லாம் தெளிந்து வேதாந்தத்திற்கு அபார்த்தம் செய்யவொண்ணாதபடி குருவாய் விளங்கு மிவருடைய ஸ்ரீஸூக்திகளில் பல இடங்களில் இவர் துணையில்லாத் தொன்மறை நூல் துலக்கிய வழியை விட்டுச் சிறிதும் விலகாத ஒழுக்கத்தை உடையவரென்பது நன்றாய் விளங்குகிறது.”அங்கீகுர்வன் அநகலளிதாம் வ்ருத்திம் ஆதேஹபாதாத்” (தேகம் விழுமளவும் குற்றமற்ற ஒழுக்கத்தை மேற்கொண்டு) என்ற சப்தங்கள் ஸ்வவிஷயமாகப் பிரயோகிக்கப் பட்டனவென்றே சொல்லலாம். இதே அபிப்ராயத்தை பலவிடங்களிலும் ஸாதித்தாகிறது. திவ்ய தம்பதிகளின் கைங்கர்ய ஸாம்ராஜ்யத்திற்கு ஆசைப்பட்டு, மாயையால் விரிந்த த்ரிலோக ஐச்வர்யங்களையும் த்ருணமாக மதித்து அத்திவ்ய தம்பதிகளின் உகப்பைப் பெறவேண்டி வேதம் விதித்த வரம்புகளைக் கடவாத நல்லொழுக்கத்தைத் தாமும் நடத்திக் காட்டி தம்மருளிச் செயல்களையும் உபதேசித்துப்போன உத்தம புருஷன் இவரன்றி வேறொருவரில்லை யென்று ஸத்யம் செய்யலாம். ஸத்யம், ஸத்யம், புனஸ்ஸத்யம்.
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் அதிலும் முக்கியமாக க்ருதக்ருத்யாதிகாரம், ஸ்வபிநிஷ்டாபிஞ் ஞானாதிகாரம், உத்தரக்ருத்யாதிகாரம் ஆகிய இம்மூன்றதிகாரங்களிலும் விவரிக்கப்பட்ட ஒழுக்கம் ஒருவனுக்கு ஏற்பட்டால் அப்புறம் விரும்பக் கூடியது வேறுண்டோ? உத்தரக்ருத்யாதிகாரார்த்தங்களை சரணாகதி தீபிகையில் ச்லோகரூபமாய் ஸங்க்ரஹித்திருக்கும் அழகை அனுபவிக்க வேண்டும். (31 முதல் 36 வரையிலான ச்லோகங்கள்) ஸ்வாமி தன் வாழ்நாட்களை எப்படிக் கழித்தாரென்று பலவிடங்களில் அருளிச் செய்திருக்கிறார். “யதிப்ரவரபாரதீர ஸபரேண நீதம்வய: நிர்விஷ்டம் யதிரஸார்வபௌமவசஸாமா வ்ருத்திபிர் யௌவனம்” முதலியன பல. அவற்றுள் ஸாரதமமானது இந்த ஆறு ச்லோகங்களில் காட்டப்படும் வாழ்க்கைச் சித்திரம் முழுவதையும் அனுபவித்து ஆனந்திக்க வேண்டும். விரிவுக்கஞ்சி கடைசி ச்லோகத்தின் பொருளை மட்டும் இங்கே குறிக்கிறேன். “ஒன்றே புகலென்று எம்பெருமானைச் சரணமாகப் புகுந்து, பகவதபசாரம் புரிவோரைப் பாம்பென மதித்து அவருள்ள திக்கையும் நோக்காது, ப்ரம்ம சிவாதி பதங்களை அபதார்த்தமெனத் திரஸ்கரிக்கும் தைரியமுடையவர்களாய், கரணத்ரயங்களை ச்ரிய:பதி திறத்தில் உத்யோகிக்கவிடுவதால் ஏற்படும் பூரண ஸுகம் பெற்றுத் தமது காலத்தைக் கழிக்கிறார்கள் ஸத்துக்கள்” (36வது ச்லோகம்)
வைராக்ய ராசியான இவர் மண்ணாசை பொன்னாசையை வெறுத்த ச்லோகங்களை வைராக்கிய பஞ்சகத்தில் காண்கிறோம். பெண்ணாசையைப் பற்ற விரக்தி எப்படி யிருக்க வேண்டுமென்று இவ்வாசார்ய வள்ளல் அருளிச்செயல் விலக்ஷணம். ஸ்ரீஸங்கல்ப ஸூர்யோதயத்தில் வைராக்யத்திற்கு லக்ஷணம் கூறுகிறார். “திஷ்டதுகுணாவமர்ச: ஸ்த்ரீணாம் ஆலோகநாதிபிஸ்ஸார்த்தம், தோஷாநுசிந்தனார்த்தாஸ் மம்ருதிரபி தூரிகரோதி வைராக்யம்” ( ஸ்த்ரீகளைப் பார்ப்பது, அவர்கள் குணங்களை வர்ணிப்பதெல்லாம் கிடக்க அவர்களது தோஷங்களை அநுஸந்திக்க அவர்களைப் பற்றிச் சிந்திப்பதும்கூட வைராக்யத்தைப் போக்கிவிடும்). “முந்துற உரைக்கேன் மடவார் கலவியை விடு” என்று உபதேசிக்கும் ஆழ்வார்களும் “வான்நிலா முறுவல், சிறுநுதல் பெருந்தோள், மாதரார் வனமுலைப் பயனே பேணினேன், என்று” பேசுவது அவ்வளவு உசிதமல்ல என்று ஸ்வாமி திருவுள்ளம் போலும். அச்சொற்கள் பகவத் பக்தியில் ஆழ்ந்து கிடந்த ஆழ்வார்களது விரக்திக்கு மாறுசெய்ய மாட்டாவென்றாலும், சிற்றின்பப்புத்தி மாறாத மற்றவர்கள் அவைகளைப் படிக்கும்போது உயர்ந்த வைராக்ய நிலையினின்றும் நழுவ ஹேதுவாகுமோ, என்று அஞ்சி இவ்வண்ணம் அருளிச் செய்திருக்க வேண்டும். வைராக்ய பூஷணத்தின் பேச்சல்லவா இது? ஆழ்வார்களுடைய ச்ருங்காரங்ககளைப் பக்தியின் பரிணாம மென்று காட்டியதே நம் ஸ்வாமிதானே! “பக்தி:ச்ருங்கார வ்ருத்யா பரிணமதி” என்றும் “பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயாக்ருணந்த:” என்றும் பகவத் காமத்தை நிலை நாட்டியது காமமேயறியாத இக்கவிதார்க்கிக ஸிம்மந்தானே!
ஸ்வாமியினுடைய அனுஷ்டானத்தின் தூய்மையையும் மேன்மையையும் குற்றமே பெரிதுடைய அடியேனா எடுத்துச் சொல்ல வல்லவன்? அவ்விஷயத்தில் பூர்வர்களெல்லாம் வியந்து பலபடியாக அனுபவித்திருக்கிறார்கள். “யதீயசரிதம் ஸதாம் ஸுசரிதவ்யவஸ்தாபகம்” ஸ்ரீ அண்ணன் புகழ்ந்துள்ள ரீதி இது. ஸத்துக்களுக்கு எங்கேயாவது ஒழுக்கத்தில் தர்ம ஸந்தேஹம் வந்தால் ஸ்வாமி தேசிகனுடைய ஒழுக்கத்தைக் கண்டு ஸம்சயத்தைப் போக்கிக் கொள்வார்களாம். இனிப் பல சொல்லி என்ன பயன்? நல்லொழுக்கமுடையோரெல்லாம் ஸ்வாமி தேசிகன் காட்டிய நல்ல மார்க்கத்தையே பின்பற்றுவார்கள் என்று ஸ்வாமியே காட்டி விடவில்லையா? ஆஸ்திச்யவான், நிசிதபுத்தி:, அநப்யஸூயு:, ஸத்ஸம்ப்ரதாய பரிசுத்தமநா:, ஸதர்த்தீ ஸங்கேதபீதி ரஹித: ஸ்த்ருணேஷ்வஸக்த: ஸத்வர்த்தநீம் அநுவிதாஸ்யதி சாச்வதீம்ந:, இதில் ஒவ்வொரு அடைமொழியும் ஸ்வாமிக்கே பொருந்தும். அவர் ஒழுக்கத்தால் காட்டிய வழிதான் ஸத்வர்த்தனீ. ஓரடி வழி.
Leave a Comment
ஸம்ரக்ஷணீ இதழிலிருந்து
Posted in ஸம்ரக்ஷணீ by thiruthiru on February 8, 2010
வழக்கம்
ஸ்ரீ தி. ராமஸ்வாமி தாஸன்
ஸம்ரக்ஷணீ (1941 ஜூன்ஜூலை) இதழில்
எழுதியது.
பழக்க வழக்கங்களில் பெரியோரைப் பின்பற்றுவதுதான் நல்லறிவுடையவர் துணிவு. நவநாகரீகம் தலையெடுத்து நிற்குமிந்நாளில் “நான் ஏன் முன்னோர்கள் செய்தபடி செய்யவேண்டும், நான் இப்படித்தான் செய்வது வழக்கம்” என்று தமக்குத் தாமே வழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுமவர்க்கு ஸ்வாமி தேசிகன் திருவடி ஸம்பந்தத்தால்தான் அந்த நிலை மாறி நல்வழக்கம் ஏற்படவேண்டும். “வழக்கம் சேரும்” என்று தூப்புல் வரதார்யன் பிள்ளையந்தாதியில் அருளிச் செய்திருப்பது இதைத் திருவுள்ளம் பற்றியே போலும்.
வழக்கமாவது பூர்வர்கள் கடைப்பிடித்தொழுகிய மார்க்கம். ஒழுக்கமென்பது அவரவர் அனுஷ்டானம். வழக்கத்தைப் பற்றியே ஒழுக்கம் ஏற்படவேண்டும். ஸ்வாமி தேசிகன் ஒழுக்கம் முழுவதும் வழக்கத்தையொட்டியே என்பது அவருடைய சரித்திரத்திலிருந்தும் அருளிச்செயல்களிலிருந்தும் நமக்குத் தெளிவாகிறது. பூர்வர்கள் கண்டக சோதனம்(முன்னெடுத்துச் சுத்தம்) பண்ணிப் போந்த மார்க்கத்தில் நடக்கும் நமக்கு வருவதொரு தப்புமில்லை என்பதே அவரது உறுதி. அப்படி ஆசார்யர்கள் ஸ்வாமியை நல்வழக்கத்தில் பழக்கி வைத்தார்களெனத் தாமே அருளிச் செய்கிறார். நடத்தை மட்டுமன்று. பேசும் பேச்சுக்கள்கூட அவர்கள் பழக்கிவைக்கத் தாம் பழகியபடி, என்று அனுஸந்திக்கிறார், கிளியைப் பழக்குவிக்குமாப் போல பழக்குவிக்க: திருவுள்ளத்தால் க்ரஹித்த அர்த்தங்களும், திருமேனியால் நடத்தும் அனுஷ்டானங்களும்,திருவாக்கால் அருளிச் செய்யும் அருளிச்செயல்களும் எல்லாம் பூர்வர்கள் தம்மைப் பழக்குவித்த வண்ணமேயன்றி ஒரு சிறிதும் பிறழ்வனவல்ல. நன்றிது தீயதிது என்று நவின்றவர் நல்லருளால் நலம் பெற்றமையைப் பலவிடங்களில் அனுஸந்தித்தாகிறது. “ஆளவந்தாரடியோம் படியோமினி அல்வழக்கே இராமானுச முனியின்னுரைசேர் சீரணிசிந்தையினோம் சிந்தியோமினித் தீவினையே”. தாம் நல்வழிப்படுத்துவது அவ்வாசார்யர்களைப் பின்பற்றியேதான். நன்றும் தீதும் நாமே நிச்சயிக்க வொண்ணாது, நன்றும் தீதும் நமக்குரைப்பா ருளரென வெண்ணி நாடவேண்டும் என்று கற்பிக்கிறார்.
“பதஸ்கலிதம்மாம் அவலோகய, அச்யுத!” என்று ஆளவந்தார் கூப்பிடுகிறார். அதாவது, வழியிலிருந்து நழுவித் தடமாடுகிறேன், அடியேனை நழுவவிடாது (அச்யுத) கடாக்ஷிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். நாம் படும் துன்பத்துக் கெல்லாம் காரணம் நாம் நல்வழக்கங்களை விட்டு நல்வழியினின்று நழுவுவதுதான். நைச்யாநுஸந்தான ரீதியில் ஸ்வாமியும் “துய்யமனத்தர் துறை அணுகாத துணையிலி” என்று பாசுரமிடுகிறார். பரிசுத்த ஹ்ருதயர்கள் போன வழியில் போகாததால் நான் துணையற்றவனாய்ப் போனேன். ராஜ மார்க்கத்தில் பலரும் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். காட்டுத் தனிவழியில் துணை யார் அகப்படுவார்? ஆகையால்தான் பெரியோர்கள் ஒருக்காலும் ஸத்பதத்தை (நல்வழக்கத்தை) விட்டு நழுவமாட்டார்கள். “நஜகதிஸத்பதம் ஜகதிசாதகவத்க்ருதிந.” சாதக பக்ஷி ஆகாச(ஸத்பத)த்தை விடாததுபோல் ஸத்துக்களும் முந்தையோர் முறையினின்றும் வழுவமாட்டார்கள். மருளே மிகுத்து மறையவர் நல்லவழி மாற்றி நின்றேன் என்று வருந்துவோரெல்லாம் அவ்வருத்தம் தீர “தூப்புல் தேவே அருளாய்" இனி எனக்கு உன்னருளேயன்றி ஆறில்லையே” என்று ஸ்வாமி விஷயமாய் ப்ரார்த்திக்க வேண்டுமென்று பிள்ளையந்தாதிப் பக்கம் மற்றொன்றில் நமக்குப் போதிக்கப் பட்டிருக்கிறது.
“தொல்வழியே நல்வழிகள் துணிவார்கட்கே” ஸாரதமமான ஆசார்ய நிஷ்டை பேசப்படுமிடத்தும் அது தொல்வழியான (ப்ராசீன) வழக்கம் என்பதுதான் அதன் பெருமைக்கு முதல் காரணமாகவும் பேசப்பட்டிருக்கிறது. இதில் வேறொரு ரஸம். துணிவார்கட்கே தொல்வழி நல்வழியாகும். துணிவில்லாதவர்கள் காலத்தின் போக்குக்கும் அண்டையிலிருப்பவர்கள் தாக்ஷிண்யத்துக்கும் பயந்து தமது புத்திமாலின்யத்தால் பழைய வழக்கங்களை அனுஷ்டிக்க அஞ்சுவார்கள். அது நல்லதா, இது தீயதா என்று விவேகிக்க புத்தியுமில்லாது உண்டியே உடையே உகந்தோடும் உலகத்துக்கு மாறாக உத்தமர்கள் வகுத்த நல் வழக்கங்களைப் பின்பற்ற தைரியமில்லாத பேர்கள் எப்படித் தொல்வழியை நல்வழியென மதிப்பார்கள்?
ஸ்வாமியைப்போல் உண்மையை உள்ளபடியறிந்த பேர்களுக்கே பழைய வழக்கங்களின் மேன்மை புலப்படும். இன்புறுமிவ் விளையாட்டான உலக லீலையில் ரஸித்துவரும் ஸ்ரீய:பதிக்கு பழைய நல்வழக்கத்தைப் பின்பற்றுவோரிடத்தில் ப்ரீதி அதிகம் என்பதை வெகு ரஸமாக ஸ்வாமி ஓரிடத்தில் அருளிச் செய்கிறார். “ஸம்ஸார நாட்ய ரஸிகஸ்யத வாஸ்துத்ருப்த்யை ……………………..ப்ராசீநஸஜ்ஜநவிடம்ப நபூமிகாமே.” (நான் ஒரு வேஷம் போட்டு உன்னைக் களிப்பிக்க வெண்ணுகிறேன், அதாவது பூர்வர்களான ஸத்துக்களுடைய வேஷம்) நம்மிடத்தில் நற்குணம் சிறிது மில்லாவிடினும் நல்லவர்கள் வழக்கத்தை நாமும் அவலம்பித்தால் நாமும் நாரணன் அருளால் நலம் பெறுவோம் என்னும் அர்த்தத்தை இதிலும் அழகாகப் பேசமுடியுமா?
Leave a Comment
ஸம்ரக்ஷணீ இதழிலிருந்து
Posted in ஸம்ரக்ஷணீ by thiruthiru on February 5, 2010
ஒடுக்கம்
ஸ்ரீ தி. ராமஸ்வாமி தாஸன் ஸ்வாமி
1941 மே விஷு வைகாசி மாத “ஸம்ரக்ஷணீ” இதழில் எழுதியது
அஸ்மத் தேசிக ஸம்ப்ரதாய நிஷ்டர்கள் அடையும் பேறுகளில் முதலாவதாக வணக்கத்தைச் சென்ற மாதம் விவரித்தோம். அடுத்த பேறு ஒடுக்கம். ஒடுக்கமாவது ஒடுங்குவது: அடக்கம், வினயம் என்றும் பொருள் படுத்தலாம்.
“உள்ளம் உரை செயல் உள்ள இம்மூன்றையும் உள்ளிக்கெடுத்து இறையுள்ளி லொடுங்கே” என்று ஆழ்வார் உபதேசித்தார்.அதாவது நமக்கு ஏற்பட்டுள்ள மனம் வாக்கு காயம் என்னும் முக்கரணங்களை எம்பெருமானிடத்து ஒடுக்கவேண்டுமென்று. இதைத் தாம் அனுஷ்டித்தபடியை சிந்தையாலும், சொல்லாலும், செய்கையினாலும் தேவபிரானையேயடைந்த வண்குருகூரவர் சடகோபன், என்று தம்மைப் பேசிக்கொள்ளுமிடத்துக் காண்கிறோம். ஆசைப்படுவதுமதுவே. பொங்கேய் புகழ்கள் வாயவாய் புலன்கொள் வடிவென் மனத்ததாய் அங்கேய் மலர்கள் கையவாய் வழிபட்டோட அருள் பெறுவதைத்தான் வேண்டி நிற்பர். ஆழ்வார் திருவுள்ளத்தை அடியொற்றி திருமால் பக்கல் கரணத்ரய ஸாரூப்யமே இஹபரஸுகங்களுக்கு ரஸாயனம் என்று நம் ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்திருக்கும்படி. த்ரிவர்க்க நிரபேக்ஷதா கரணத்ரய ஸாரூப்யம் என்று அருளிச் செய்திருப்பதால் திருமால் பக்கல் ஸாரூப்யம் என்று பொருள் கொள்ள ப்ராப்தம். ஆகவே இவரது திருவடிகளை அவலம்பித்தவர்களுக்கு இவரருளால் இறையுள்ளிலொடுங்கேயென்று சொல்லும்படியான ஒடுக்கம் பெறுவது ஸுலபமாயிற்று. கையொன்று செய்ய விழியொன்று காண மனமொன்று சிந்திக்க என்னும்படியான அவஸ்தைகள் ஸ்வாமியின் திருவடி ஸம்பந்திகளுக்கு நேரா. ருஜுவாக கரணங்கள் ஒருப்பட்டு புருஷோத்தமனை வழிபட்டு நிற்கும் நிலையை தேசிக கடாக்ஷத்தால் எளிதிலெய்துவர் என்று காட்ட பிள்ளையந்தாதியில் தூப்புல் பிள்ளைதனை அரணாக அடைபவர்க்கே ஒடுக்கம் சேரும் என்று ஸாதிக்கப்பட்டது.
இப்படி எம்பெருமான் விஷயமாக ஏற்படும் ஒடுக்கம் ததீய விஷயமாக ஏற்பட வேண்டுவ தவசியமாகையாலே அப்படி ஏற்பட்டபோது அதுவே அடக்கம் வினயம் என்று பெயர் பெறும். பெரியோர்களைக் கண்டபோது ஆங்கே மடியடக்கி நிற்கவேண்டியது நமக்கு ஸ்வரூபம். அவர்களுடைய பெருமைக்குத் தோற்று நம் தாழ்மையை உணர்ந்து அடங்கியிருப்பது அழகாகுமேயன்றி, பெரியவரானால் அவர்மட்டும், நமக்கென்ன என்று இறுமாந்திருப்பது இகழ்ச்சிக் குறுப்பாகும். “நாம் பெரியோமல்லோம், நன்றும் தீதும் நமக்குரைப்பாருளரென்று நாடுவோமே” என்பது ஸ்வாமி காட்டிய மனோநிலை. நமக்கு கர்வம் கிடையாது: பெரியோரை அடிபணிந்து அவர்களிடம் இதுவன்றே நல்ல, இதுவன்றே தீய, என்று நாம் உபதேசம் பெறச் சித்தமாயிருக்கிறோம் என்று இருந்தவரை இக்காலத்தில் சிலர் கர்வியென இகழ்ந்துரைப்பது ஸ்வாமி தேசிகன் திருவடி சேர்ந்து ஒடுக்கம் பெறாமையால்தான் என்று நாம் உணர்ந்து அவர் பக்கல் பச்சாத்தாப முடையவராயிருத்தல் வேண்டும்.
பகவத் பாகவத ஸம்பந்தத்தால் தமக்கு நேர்ந்த உத்கர்ஷத்தை வாய்விட்டுப் பாராட்டுபவரை அஹங்காரியென்று சொல்லப் போகாது. அப்படியானால், “குரவையாய்ச்சியர்” அனுஸந்தித்த ஆழ்வாரைக் காட்டிலும் அஹங்காரி அகப்படுவது துர்லபமென்று முடிவுகட்ட வேண்டிவரும். ஸ்வாமி தேசிகனுடைய சரித்திரத்தாலும் அருளிச் செயல்களாலும் அவருடைய பணிவும் வினயமும் விரிவாய் விளங்குவன. அவருடைய அருள் பெற்ற அடியோமுக்கும் அவ்வொடுக்கம் உரியதாகும்.
வகுத்த விஷயத்தில் ஏற்படவேண்டிய ஒடுக்கம் அஸ்தானத்தில் அயுக்தமாகும். விவாத ஸமயத்தில் வாதியோ ப்ரதிவாதியோ ஒடுக்கத்தை அனுஷ்டித்தால் பரிஹாஸத்திற்கிலக்காவான். ஆகையால் அச்சமயங்களில் ஒருவன் தனது மேன்மையை யெண்ணிப் போரிலன்வயிப்பது ஸ்வரூப விருத்தமாகாது. கிருஷ்ணமிச்ரனென்கிற ப்ரதிவாதியை ஸ்வாமி வாதத்தில் ஜயித்து ஸம்ப்ரதாயத்தை நிலை நாட்டிய பிறகு அவன் ஸ்வாமி பெருமைக்குத் தோற்றபோதிலும் ஸ்வாமியொழிந்த ஏனைய ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில் தான் அபஜயப்படாமையால் அவர்கள் பக்கல் தன் பெருமையைப் பாராட்டியவனாய் கோஷ்டியில் தான் ஸ்வாமிக்கு அடுத்தபடியாய் நின்று தீர்த்த மரியாதைகள் பெறவேண்டுமென்று கேட்டுக் கொண்டான். ஸ்வாமி புன்முறுவல் பூத்து, அப்படியேயாகட்டு மென்றிசைந்தனராம். தன்னைப்போல் ஸ்வாமியும் முதல் ஸ்தானத்தை விரும்பி நிற்பர் என்று அவன் எண்ணிய எண்ணத்தைத் தவறாக்கி ஸ்வாமி அந்த ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியில் கடைசியாக நின்றாராம். அதற்கும் கடைசியான ஸ்தானம் கிருஷ்ணமிச்ரனுக்குக் கிடைத்தது. ஸ்வாமியின் ஞானம் தனக்கில்லாததோடு அவர் வினயமும் தனக்கில்லையே என்று எண்ணலானான் கிருஷ்ணமிச்ரன். இந்த வ்ருத்தாந்தத்தில் ஸ்வாமியின் பெருமையும், ஒடுக்கமும் ஒருங்கே தோற்றுவன – ப்ரதிவாதிகள் பக்கல் பெருமையும், ஸ்ரீவைஷ்ணவர்களான பாகவதோத்தமர் பக்கல் ஒடுக்கமும் இதுபோன்ற பல வ்ருத்தாந்தங்கள் ஸ்வாமி சரித்திரத்தில் நிரம்பியிருக்கின்றன. அவருடைய அருளிச் செயல்களிலும் இப்படியே பெருமையும், ஒடுக்கமும் சேர்ந்து தோன்றுவன. “யதீச்வரஸரஸ்வதீ” யென்று தொடங்கும் ச்லோகத்தில் ஸத்துக்களுடைய திருவடிகளைத் தன் சிரஸாலேற்றும் மற்றவர்களுடைய முடியில் தம் திருவடிகளை வைத்தும் நிற்கும் தமது நிலையை நன்கு விவரித்திருக்கிறார். இம் மஹா புருஷன் திருவடிகளை ப்ராப்ய ப்ராபகங்களாக அடைந்த நமக்கு இப்பெருமையும், ஒடுக்கமும் ஒருங்கே கிடைக்கும் என்று காட்டுகிறது வணக்கமொடுக்கமென்னும் பாசுரம்.
Leave a Comment
ஸம்ரக்ஷணீ இதழிலிருந்து
Posted in ஸம்ரக்ஷணீ by thiruthiru on February 3, 2010
வணக்கம்.
(1941 ஏப்ரல் மாத ஸம்ரக்ஷணீ இதழில் ஸ்ரீ தி. ராமஸ்வாமி தாஸன் ஸ்வாமி எழுதியது)
வணக்கமொடுக்கம் வழக்கமொழுக்கம் இரக்கம் சேரும்
இணக்கமுறக்கம் இழுக்கும் அழுக்கு மிகுந்து நிற்கும்
குணக்குல மோங்குமிராமாநுஜன் குணம் கூறும்தூப்புல்
அணுக்கனைப் பிள்ளைதனை அரணாக அடைபவர்க்கே.
(பிள்ளையந்தாதி)
ஸ்ரீதேசிகர் பெருமான் திருவடிகளை அடைக்கலமாக அடைபவர்கள் அடையும் பெரும் பேறுகளில் முதன்மையானது வணக்கம். "தலை வணக்கிக் கைகூப்பி ஏத்தவல்லார் திரிதலால் தவமுடைத்துத் தரணிதானே" என்பது குலசேகரப் பெருமாள் அருளிச் செயல். வணங்காமுடி மன்னர்கள் அளிக்கமாட்டாத பெருமையை வணக்கத்தை அணியாகக் கொண்ட சிறு மாமனிசர் உலகத்திற்கு அளிக்கிறார்கள். துயரறு சுடரடி தொழுதெழுந்த நம்மாழ்வார் போன்ற பரமனடி பணிந்துய்ந்த பூர்வாசாரியர்கள் வணக்கத்தின் பெருமையை நமக்கு நன்கு உபதேசித்திருக்கிறார்கள். இதிஹாஸ புராணங்களும் வணக்கத்தின் ஏற்றத்தையே உத்கோஷிக்கின்றன. ஸம்ஸார மண்டலத்தில் உழன்றுவரும் நம் போல்வார்க்கு வணக்கமின்றி வேறு துணை இல்லை.
வணங்காமுடியினர் அடையும் முடிவை இராவணாதிகள் பக்கல் கண்டிருக்கிறோம். மால்யவான் இராவணனுக்கு ஹிதோபதேசம் செய்தபோது இராவணன் மால்யவானுக்கு பதில் தெரிவிக்கிறான். "த்விதாபஜ்யேய மப்யேவம் நரநமேயம் துகஸ்யசித், ஏஷமேஸஹஜோ தோஷ: ஸ்வபாவோ துரதிக்ரம:" (என்னை இப்படி இரண்டாய்ப் பிளந்தாலும் நான் ஒருவனுக்கும் வணங்கமாட்டேன். இது என்னுடன் கூடப் பிறந்த குற்றம். ஸ்வபாவம் மீற முடியாதல்லவா?) என்ற இந்த அவனுடைய பேச்சு அவனது மட்டுமன்று. நாம் ஒவ்வொருவரும் நமது அறிவின்மையாலும், செருக்காலும், இராவணனைப் போலவேதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சிறிது செல்வமோ, படிப்போ நம்மவரை வணங்கா முடியினராய்ச் செய்துவிடுகிறது. இதற்கு மேல் நானே ப்ரஹ்மம் வணக்கமும் அஹங்கார காரியமாதலால் விலக்கப்பட வேண்டும் என்று உபதேசிக்கும் மதங்களும் உலகில் உலவுவதால் வணங்காமை வலிவு பெறுகிறது.
ஒருதரம் தலையை வணக்கியவர் விஷயத்தில் ஸர்வேச்வரன் திருவுள்ளம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து பார்த்தால் வணக்கத்தின் மேன்மை வெளியாகும். "ஏபிச்சஸசிவைஸ்ஸார்த்தம் சிரஸா யாசிதோ மயா, ப்ராது:சிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்த்துமரர்ஹஸி" என்று தலையால் யாசித்த பரதாழ்வான் விஷயத்தில் பெருமாள் எப்படி உளங்கனிந்திருந்தார் என்பது இராவண வதத்திற்குப் பிறகு விபீஷணனுக்கு பெருமாள் அருளிச் செய்யும் பாசுரத்தால் வெளியாகிறது. "சிரஸா யாசதோயஸ்ய வசனம் நக்ருதம் மயா" என்று வாடுகிறான் எம்பெருமான். பரதன் தலையால் வணங்கி யாசித்த விஷயத்தை (வார்த்தையை) நான் தலைக்கட்டவில்லையே என்று துக்கித்து அவனைக் காணப் பதைக்கிறான் பிரபு. பெருமாள் திருவுள்ள மறிந்த பிராட்டியும் திருவடியை (ஹனுமனை) நோக்கி "சிரஸா சாபிவாதய" (எனக்காக அவனை நீ தலையால் வணங்கு) என்று வேண்டுகிறாள். தலை தாழ்த்து இருகை கூப்பாத தமது பாழ்த்த விதியை மீறி "தலையில் வணங்கவுமாங் கொலோ"(நமக்கு வணங்கும் நாட்களும் வாய்க்குமோ) என்று பாடுகிறார் நம்மாழ்வார்.
பெருமாள் தம்மை வணங்கினவர்களை வாழ்விக்கிறார் என்னும் இவ்வுண்மையை ஸ்வாமி தேசிகன் பலவிடங்களில் பலவிதமாக அருளிச் செய்திருக்கிறார். பரமார்த்தஸ்துதியில் இதைத்தான் ரஸமாக வர்ணிக்கிறார்.
ஸ்ரீமத் க்ருத்ரஸரஸ்தீர பாரிஜாத முபாஸ்மஹே|
யத்ரதுங்கை ரதுங்கைச்ச ப்ரணதைர்க்ருஹ்யதே பலம்||
புட்குழி யெம்போரேறான ஸ்ரீவிஜயராகவன் ஒரு பாரிஜாத விருக்ஷமாம். அம்மரத்தின் பழங்களை கிரஹிப்பவர் வணங்குபவர்களே. உயர்ந்தவராயினும், தாழ்ந்தவராயினும் வணங்கித்தானாக வேண்டும். ஸாதாரண மரத்தின் பழம் உயர்ந்தவனுக்குத்தான் எட்டும். குள்ளமாயிருப்பவனுக்கு எட்டாது. இந்தப் பழமோ உயர்ந்தவனும் வணங்கினால்தான் அடையக் கூடும்படி இருப்பது. குலம், சீலம், குணம், பணம் இவற்றால் உயர்ந்தவர்களும் தலை வணங்கித்தான் இத்தெய்வத்தின் அருளைப் பெறலாம். தாழ்ந்தவர்களும் கூடத் தம் தாழ்மையே போதுமென்று தேறியிருக்கப் போகாதென்று காட்ட "அதுங்கைச்ச" என்று அழுத்திக் காட்டப் பட்டிருக்கிறது. தாழ்ந்தவர்களுக்கு அத்தாழ்வே துணையாகாது என்ற ஆழ்ந்த அர்த்தம் இங்கே வெளியாகிறது. தோஷம் உபாயமாகாது. வணக்கமே உபாயம். பகவத் ப்ரஸாதம் என்பது குனிந்து கும்பிட்ட பேருக்கே கிட்டுமன்றி ஏனையோருக்குக் கிட்டாது.
ப்ரணதை: என்று பேசினார் மேற்குறித்த ச்லோகத்தில். களிப்புடன் வணங்குவோரிலும் விசேஷ ஞானத்தால் வணங்குபவர்கள் மேம்பட்டவர்கள். இவர்களை விநதசப்தத்தால் ஸ்வாமி நிர்த்தேசிக்கும் வழக்கம். "விநத விவித பூதவ்ராத ரக்ஷைகதீக்ஷே" என்ற எம்பெருமானார் ஸ்ரீஸூக்தியை "ஸக்ருத் ப்ரபன்ன ஜன ஸம்ரக்ஷண தீக்ஷித" என்று ஸ்வாமி பொருள்படுத்துமிடத்தில் விநத சப்தத்திற்கு ப்ரபந்ந சப்தம் பரியாயமாய் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. அயிந்தை நகரமர்ந்த அடியவர்க்கு மெய்யனும் "விநத விஷயஸத்யம்" என்று ஸ்வாமியால் வர்ணிக்கப் பெற்றிருக்கிறார். விசேஷ ஞானத்தால் வரும் வணக்கம்தான் ப்ரபத்தி. அப்படி வணங்கிய மெய்யடியார்க்கே மெய்யன் என்று பொருள்.
தயாசதகத்தில் இப்படி வணங்கினவர்களை எம்பெருமானுடைய தயை எப்படி ஸுகம் பெறச்செய்கிறாள் என்பது வெகு ரஸமாய் அருளிச் செய்யப் பட்டிருக்கிறது.
சூடா வ்ருஷா சலபதே: பாதே முககாந்தி பத்ரளச் சாயா|
கருணே ஸுகயஸி விநதாந், கடாக்ஷ விடபை: கராப சேயபலை:|
ஸ்ரீநிவாஸன் திருவடிகளில் நாம் தலை வைத்தவுடன் (சரணாகதி செய்தவுடன்) கருணை எனும் கொடி அங்கு முளைக்கின்றது. திருமலையின் அடியில் முளைத்த கொடி என்னவுமாம். அக்கொடி ஓங்கி வளர்ந்து ஸம்ஸாரதாபத்தில் நொந்தவர்களைத் தன் பசுமையான இலைகளின் (நிறத்தால், நிழலால்) ஆச்வாஸமடையச் செய்கிறதாம். உடனே, கைநீட்டிப் பறிக்கக் கூடிய பழங்களைக் கொண்ட தாழ்ந்த கிளைகளால் இன்புறச் செய்கிறதாம். எம்பெருமானுடைய முக காந்திதான் தயாவல்லியின் இலைகளின் பசுமை. எம்பெருமானுடைய கடாக்ஷங்கள்தான் கிளைகள். புருஷார்த்தங்களாகிய பழங்கள் அக்கிளைகளில் பழுத்துத் தொங்குமவை.
பெருமாளையே ஒரு விருக்ஷமாக பரமார்த்த ஸ்துதியில் வர்ணித்தவர் இங்கே தயையை ஒரு கொடியாக வர்ணிக்கிறார். நம் வணக்கம் நம் பெருமாளை இணங்கும்படி செய்கிறதென்று திருச்சின்னமாலையில் கோஷிக்கிறார் "நாம் வணங்கத் தாமிணங்காநிற்பார் வந்தார்" என்று.
1 Comment
ஸம்ரக்ஷணீ யிலிருந்து
Posted in Uncategorized by thiruthiru on February 2, 2010
இன்பம்
(1940 ஆகஸ்ட்- செப்டம்பர், விக்ரம ஆவணி-புரட்டாசி "ஸம்ரக்ஷணீ" இதழில்
ஸ்ரீ தி. ராமஸ்வாமி தாஸன் எழுதியது)
ஸாதாரணமாக அறிவாளிகள் இவ்வுலக விஷயமான இன்பங்களைச் சிற்றின்ப மென்று இழிவுபடக்கூறியும், பகவத் விஷயமான இன்பங்களைப் பேரின்பமென்று பெருமைபடக் கூறியும் வருவதுண்டு. பகவத் விஷயமான இன்பம் இவ்வுலகத்தில், அதிலும் இப்பிறவியில், கிட்டாது என்றும், அதை அடைய இந்த சரீரத்தைவிட்டு வேறு உலகங்களுக்குச் சென்றே தீரவேண்டும் என்றும், ஒரு கொள்கை உலகெங்கும் உலாவி வந்தது. அது தவறென்று ஸ்ரீவைஷ்ணவ ஸமயாசாரியர்கள் தம் அனுபவத்தாலும் அருளிச் செயல்களாலும், நிரூபித்தார்கள். எம்பெருமானுக்கு இன்பமான அடிமையை இம்மைப் பிறவியிலேயே செய்யப்பெறாது இனிப்போய்ச் செய்யும் தவந்தான் என்? என்று பழைய முறையைப் பரிஹஸிப்பதிலிருந்தே இது உண்மை யென்று விளங்கும். அடும்துனியை(துன்பத்தை)த் தீர்த்து இன்பமே தருகின்றதோர் தெய்வத்தை வழிபட்டும் இம்மையிலேயே இன்பம் பெறுவதற்கு என்ன தடை? "இம்மைக்கின்பம் பெற்றோம்" என்று திருமங்கைமன்னன் போல், ஒவ்வொருவரும் அநுஸந்திக்கப் பிராப்தம்.
இப்படி இவ்வுலகில் இவ்வின்பத்திற்கு ஆசைப்பட்டுப் பதைத்த பேர்கள் அநந்தம். ப்ரஹ்லாதாழ்வான் முதல் நம் தேசிகோத்தமன் வரை ஸ்ரீவைஷ்ணவாக்ரேஸர்கள் பலர் பகவத் விஷயத்திலுள்ள இன்பத்தால் பேராசைக்கடலுள் வீழ்ந்து அயர்ந்தார்கள். "யாப்ரீதி ரவிவேகாநாம்" என்கிற ச்லோகத்தால் ப்ரஹ்லாதன் ப்ரார்த்தித்தது. ஸம்ஸாரிகள் விஷய ஸுகங்களில் எத்தனை பற்று வைத்திருக்கிறார்களோ அத்தனை பற்றும் தனக்கு எம்பெருமான் விஷயத்தில் வேண்டுமென்பதே. "யாப்ரீதி" என்று வாய் கொண்டமட்டும் திறந்து அவ்வளவுப்பிரீதியும் பகவானிடத்துப் பண்ணப் பார்க்கிறார். நம் ஸம்ப்ரதாயத் தலைவர்களனைவரும் இவ்வண்ணமே பகவத் விஷய ராஸிக்யத்தில் முழுகியவர்கள். திருப்தியில்லாத (அத்ருப்தஸ்தம் முனிம்) மஹரிஷி ஒருவர் ஆதிகவி. (கிருஷ்ண)
த்ருஷ்ணா (தாகம்) தத்வம் ஒன்று நம் குலபதி. அச்யுத பதாம்புஜங்களுக்கு வ்யாமோஹம் கொண்டவரொருவர் தர்சன ப்ரவர்த்தகர். "வைகுண்டவாஸேபி நமேபிலாஷ:" (வைகுண்டத்தில் கூட ஆசையில்லை) என்று சபதம் செய்து மேல்வரும் நற்கதியை மதியாது இம்மை யின்பத்தைப் பாராட்டுபவர் நம் பரமாசார்யன். "நததர்ப்ப" (திருப்தியடையவில்லை) என்றும்,
"நஜகாமத்ருப்திம்" என்றும் விபவாவதாரங்களில் கண்டவர்க்கு திருப்தி விளையாதபடி பேரின்பத்தை வாரியிறைத்ததுபோலவே அர்ச்சாவதாரத்திலும் திருமால் காண்பவர் மனதையும் கண்ணையும் கவர்ந்து "த்ருஷ்ட்வாத்ருசௌவிபுதநாத நத்ருப்யதேமே" (பார்த்து என் கண்கள்
திருப்தியடையவில்லை) என்கிற அளவில் இன்பத்தை ஊட்டுகிறவனன்றோ? "இன்பமதனையுயர்த்தாய்" என்றார் பெரியாழ்வார். இன்பம் உயர்ந்து விடுகிறதாம். அதிகப்படுவது மட்டுமில்லை. அற்பஸாரங்களைச் சுவைத்து நீத்த இந்திரியங்கள் பற்றிய உயர்ந்த இன்பம். இன்பம் ஏற்றம் பெற்றது. சிற்றின்பம் பேரின்பமாகியது. இது கோபிகள் விருத்தாந்தத்திலும் அர்ச்சாவதாரத்திலும் தான் கைகூடும். விண்ணவர்வேண்டி விலக்கின்றி மேவும் அடிமை யெல்லாம் மண்ணுலகில் நாமும் மகிழ்ந்தடையும்படி ஆழ்வார்களும் ஆசார்யர்களும் நமக்குக் கற்பித்திருக்கிறார்கள். எல்லோரிலும் காட்டிலும் வெளிப்படையாயும் ரஸமாயும் நம் தேசிகர் பெருமான் பலவிடங்களில் பலபடியாய் அவ்வின்ப நுகர்ச்சிமுறைகளை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். அவரது காவியங்கள் நாடகங்கள் ஸ்தோத்திரங்கள் எல்லாம் அப்படிப்பட்டவை. அவைகளுள் எதைக்கொள்வது? எதை விடுவது? என்றாலும் ஸ்ரீபாதுகாஸஹஸ்ர ச்லோகமொன்று நினைவிற்கு வருகிறது. அதைச் சொல்லாது நிறுத்த மனம் வரவில்லை.
நிஜஸம்ஹந ந ப்ரஸக்தலாஸ்யம்
சரதித்வாமதிருஹ்யரங்கநாத
பதரக்ஷிணி பாவனத்வமாஸ்தாம்
ரஸிகாஸ்வாதமத:பரம்நவித்ம |
(ஸஞ்சார பத்ததி)
அழகிய மணவாளன் ஸ்ரீபாதுகைகளைச் சாற்றிக்கொண்டு ஒய்யார நடை போட்டுக்கொண்டு எழுந்தருளுகிறார். திருமேனி அசைந்தசைந்து நர்த்தனமிடுகிறது. சூழ்ந்திருந்து ஸேவிப்பவர்கள் பலர். "தன்யோஸ்மி" யென்கிறார் அவர்களுள் ஒருவர். நீர் தன்யராவது ஒருபுறமிருக்கட்டும். இவ்வளவு இன்பத்தை விளைவிக்கும் காட்சி எவ்வுலகிலாவது கண்டதுண்டோ? என்று வினவுகிறார் அருகிலிருந்த ரஸிக ஸிகாமணியான நம் ஸ்வாமி தேசிகன். பகவத் தர்சனத்தால் பாபம் போய்ப் புனிதராவது என்பது நிற்க, இவ்வழகுக்கு மேற்பட்டதாய் ரஸிகர்கள் இன்புறும் வஸ்து வேறில்லையே, யென்பதை அழகாய்ப் பேசுகிறார். இன்மைக்கு இன்பம் பெற்றவரன்றி இப்படிப் பேசவல்லவர் யார்?
மாதங்களுக்குள் பரமபாவனமானது இப்புரட்டாசி. இதற்குள் பரமபாவன தினம் திருவோணத் திருநாள். அதுதான் நம் கலி தீர்க்கவந்த கவிஸிம்ஹம் தோன்றிய திருநாள். எட்டுமிரண்டும் அறியாத எமக்கும் எம்பெருமான் இணையடி இன்பத்தை எட்டவைத்த எங்கள் தேசிகன் திருவவதார நாள். அந்நாளையும் அவரையும் அவர் பெருமையையும் அவர் அருளிச்செயலின் அருமையையும் எண்ணி தம்மிலங்கமெல்லாம் வந்தின்பமெய்த எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பர் பெரியோர்.
Leave a Comment
ஸம்ரக்ஷணீ இதழிலிருந்து
Posted in ஸம்ரக்ஷணீ by thiruthiru on January 27, 2010
1940 மார்ச் பிரமாதி பங்குனி “ஸம்ரக்ஷணீ” இதழில் ஸ்ரீ தி. ராமஸ்வாமி தாஸன் எழுதிய
அஞ்சல்
எம்பெருமானைக் குறித்து சேதனன் ஒரு அஞ்சலி செய்தால் சேதனனை நோக்கி எம்பெருமான் ‘அஞ்சல்’ செய்கிறான். அஞ்சல் என்றால் பயப்படாதே என்று பொருள். வலது திருக்கரம் பயப்படாதே என்று அடியார்களுக்கு அபயம் கொடுப்பதால் அபயஹஸ்தமென்று அத்திருக்கரத்துக்குப் பெயர். அபயமுத்திரையென்று அந்த அடையாளத்திற்குப் பெயர். அபயமுத்திரதமான பெருமாள் திருக்கையைப் பலவிடங்களில் ஸ்வாமி தேசிகன் அனுபவிக்கிறார்.
க்ஷணந்தோறும் கோடிக்கணக்கான பாபங்களைப் புரிந்துவரும் பேர்களுக்குப் பெருமாளை அணுகுவதென்றால் உள்ளத்தில் எத்தனை பயம் ஏற்படுகிறது? அந்த பயத்தைப் போக்காவிடில் பகவத் ஸந்நிதியில் போய் நிற்பதே முடியாதே! ஆகவே அபயஹஸ்தம் முதல்முதலாகப் புரியும் காரியம் அபராதத்தால் நமக்கு ஏற்படும் பயத்தைப் போக்குவதே. ‘நித்யாபராத சகிதே ஹ்ருதயே மதீயே, தத்தா பயம்ஸ்புரதி தக்ஷிணபாணிபத்மம்’ என்று தேவநாயக பஞ்சாசத்தில் திருக்கை வர்ணனை. இடைவிடாமல் செய்யும் பாபங்களினால் பயமடைந்த அடியேனுடைய ஹ்ருதயத்திற்கு அபயம் கொடுத்துக்கொண்டு விளங்கும் வலது திருக்கை மலர் – என்று இதற்குப் பொருள்.
இதனால் எம்பெருமானை அணுகத் துணிவு ஏற்பட்டு ‘நதர்ம நிஷ்டோஸ்மி’, ‘நோற்றநோன்பிலேன்’, ‘மனத்திலோர் தூய்மையில்லை’ முதலிய ஸ்தோத்திரங்களையும் பாசுரங்களையும் அனுஸந்தானம் செய்துகொண்டு அவனை சரணம் புக்கால் அபயஹஸ்தம் அப்பொழுது வேறு பொருள்கொண்டு விளங்கும். ‘நீ செய்த அபராதத்தால் உனக்கு வரவிருக்கும் தீங்குகளை யெல்லாம் விலக்கி உனக்கு அபயம் கொடுத்தேன். இனி அஞ்சேல்’ என்று வாய்ப்பேச்சில்லாத அந்த அழகிய கைப்பேச்சு நமக்கெல்லாம் வெகு ஆப்தம். முன்பு ஸமுத்திரதீரத்திலும், அர்ச்சுனன் தேர்த்தட்டிலும் பேசிய ‘அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி’, மாஸூச:’ என்ற வாக்கியங்களைப் பொருளாய்க் கொண்டு விளங்குகிறது அபய முத்திரை. ‘ஸர்வபூதேப்யோ ததாமி’ என்ற வாக்கியத்தில் தோன்றும் இரண்டு அர்த்தங்களையும் ‘அனைவர்க்கும் அனைவராலும் அஞ்சேல் என்றருள் கொடுப்பன்’ என்று ஸ்வாமி மொழிபெயர்த்துக் காட்டுகிறார் அபயப்ரதானஸாரத்தில். எல்லோருக்கும் ரக்ஷணம், எல்லோரிடமிருந்தும் ரக்ஷணம்.
பூவில் தோன்றிய பொற்கொடி பிடிக்கும்போது சிவந்துபோகும் மெல்லடிப்போதுகளுடன் பரம ஸுகுமாரமான திருமேனியுடையவராய், அழகு மிளிரும் இவரிடத்தில் இத்தனை ஆண்மையு முண்டோ என்று சங்கிப்போருக்கு அபயமுத்திரையில் அவநம்பிக்கை உண்டாகும். ‘ஸுகுமாரௌ மஹாபலௌ’ என்று ஒரேமூச்சில் பேசிய சூர்ப்பனகையின் அறிவுமிலாத பேர்களுக்கு நம்பிக்கை உண்டாக்கவேண்டிப் பெருமாள் ஆயுதமேந்தி நிற்கிறார் என்று ஸ்வாமி தேசிகன் உத்ப்ரேக்ஷிக்கிறார். ‘நீலாசலோதித நிசாகர பாஸ்கராபே, சாந்தாஹிதே ஸுரபதே! தவசங்கசக்ரே, பாணேரமுஷ்ய பஜதாம் அபயப்ரதஸ்ய ப்ரபத்யாயநம் ஜகதி பாவயத ஸ்வ பூம்நா’(தேவநாயகபஞ்சாசத் 30)’ஓர் கோலநீல! நன்னெடுங் குன்றத்தை அணைந்து நின்ற சந்திராதித்யர்கள் போன்ற உமது சங்கமும் சக்ரமும் சத்ருக்களை நிரஸிப்பதில் நிகரற்ற தமது காந்தியாலே இந்த வலது கரத்தின் அபயப்ரதானத்தில் விச்வாஸத்தை(நம்பிக்கையை) ஜகத்துக்கு விளைவிக்கிறார்கள்’ என்று இதன் பொருள். இவ்வர்த்தத்தையே பன்னிருநாமத்தில் ‘அம்பொற்கரங்களில் ஐம்படைகொண்டு அஞ்சலென்றளிக்கும் செம்பொன் திருமதிள்சூழ் சிந்துராசலச் சேவகனே’ என்று ப்ரணாதார்த்திஹர வரதன் விஷயமாக அருளிச் செய்திருக்கிறார். இவன் சேவகத்தை சரணம் புகவந்த ஒரு குரங்கு பரீக்ஷித்து அங்கீகரிக்க வேண்டி வந்தது. பின்னர் இந்த ஸந்தேஹம் ஏற்படாவண்ணம் எப்பொழுதும் திருவாயுதங்களை ஏந்தியவண்ணம் இருப்போம் என்று ஸதா பஞ்சாயுதங்களை ஏந்திவருகிறார் போலும். மேலும் அர்ச்சாஸமாதியாகையால் பரீக்ஷிப்போரிஷ்டப்படி பரீக்ஷை கொடுக்க இயலாது போவதே! என்ற கவலையால் முன்கூட்டியே ஆயுதங்கள் தாங்கி அடியாரை நம்பும்படி செய்கிறான் ஆகவுமாம். ப்ரணத ரக்ஷணத்தில் விளம்பத்தை ஸஹிக்கமாட்டாதவராய் ஸதா பஞ்சாயுதங்களை ஏந்தியிருக்கிறார் பெரியபெருமாள் என்றருளிச் செய்தார் பட்டர். அணுகும் அடியார்க்கு விச்வாஸத்தை விளைவிக்க அவ்வாறு ஏந்தி நிற்கிறார் என்று ஸ்ரீதேசிகன் அருளிச் செயல். ஆயுதமேந்தி சபதம் செய்வதும் முறையாதலால் என் ஆயுதங்களின் மேலாணையாய் உன்னை ரக்ஷிக்கிறேன், நீ கவலையொழி என்று பொருள்படும் வண்ணம் ஆயுதங்களும் அபயமுத்திரையும் ஒருங்கே அமைந்தபடி. ‘ஸத்யம்தே ப்ரதிஜாநே’ என்று சொல்லும் திருவுள்ள மல்லவா அவனது!
அபயமுத்திரைக்கு மூன்றாவது பொருள் ப்ரபத்தி ஸக்ருத் கர்த்தவ்யம் (ஒரே தடவை செய்யப்பட வேண்டியது) என்கிற சாஸ்த்ரார்த்தம். ‘உமதடிக ளடைகின்றே னென்றொருக்கால் உரைத்தவரை அமையும் இனி என்பவர்போல் அஞ்சலெனக் கரம்வைத்து’ என்று அடைக்கலப்பத்தில் அருளிச் செய்யப்பட்டிருக்கிறது. ‘அமையும்’ என்பதற்குப் பொருள் ‘போதும்’ என்று. ‘ப்ராய:ப்ரபதனே பும்ஸாம்பௌந:பிந்யம் நிவாரயந், ஹஸ்த ஸ்ரீரங்க பர்த்துர்மாம் அவ்யாத் அபயமுச்ரித:’ என்கிற ந்யாஸ திலக ச்லோகத்திற்கும் இதுவே பொருள்.
தம்மேனி அழகை வாரி இறைக்கும் வள்ளலாகி அழகன் என்ற அஸாதாரண திருநாமம் பெற்ற திருமாலிருஞ்சோலை எம்பெருமான் தம் ஔதார்யத்தைக் காட்ட வரதான முத்திரையுடன் விளங்குகிறார். அவரிடம்போய் பெரியாழ்வார் ‘அக்கரையென்னும் அனத்தக்கடலுள் அழுந்தி உன் பேரருளால் இக்கரையேறி இளைத்திருந்தேனை அஞ்சேலென்று கைகவியாய்’ என்று ப்ரார்த்திக்கிறார். அபயமுத்திரையைப்போல நமக்கு ஆறுதல் அளிக்கவல்லது வேறில்லை என்பதை இப்பாசுரம் கொண்டு அனைவரும் உணரலாம். ஆகவே ஸ்வாமி தேசிகன் “அஞ்சலஞ்சலென்றளிக்க வேண்டும் அச்சுதா” என்று ப்ரார்த்திக்க நமக்கு போதித்திருக்கிறார்.
1 Comment
ஸம்ரக்ஷணீ இதழிலிருந்து
Posted in ஸம்ரக்ஷணீ by thiruthiru on January 24, 2010
த்வரை(வேகம்)
(1941 பிப்ரவரி ஸம்ரக்ஷணீ இதழில் ஸ்ரீ ராமஸ்வாமி தாஸன் எழுதியது)
‘பகவதஸ்த்வராயை நம:’ (எம்பெருமானுக்கு ஆச்ரித ஸம்ரக்ஷணத்தில் இருக்கும் அவஸரத்திற்கு நமஸ்காரம்) என்றருளிச் செய்கிறார் பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில். எம்பெருமானையும், அவனுடைய ரக்ஷணத்தையும் காட்டிலும் அந்த ரக்ஷணத்தின்போது அவனுக்குண்டாகும் பரபரப்பே நமது வணக்கத்திற்குரியது என்று திருவுள்ளம். ஒரு ப்ரஹ்லாதாழ்வானுக்காகவும், ஒரு கஜேந்திரனுக்காகவும் ப்ரபு பட்ட பாடு இன்றைக்கும் நாடெங்கும் பாடப்படுகிறதன்றோ?
பகவானுடைய நாமத்தைச் சொல்லத் துணிந்ததற்காகத் தன் சிறுவனென்றும் பாராது ஹிரண்யன் ப்ரஹ்லாதனைச் சீறிய குற்றத்தைத் தாங்கமாட்டாது உடனே எந்த விடத்தைக் காட்டிக் கேட்பனோவென்ற திருவுள்ளத்தால், மூன்று லோகங்களும் நரசிங்க வடிவத்தால் நிறைந்து விட்டன. பாதி சிங்கமும் பாதி மனுஷ்யனுமாக மாற்றிக்கொள்ளும்வரையில்கூட பெருமாளுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. திருமுகத்தளவு சிங்கமாய் மாறியவுடன் அயன் அளித்த வரம் அம்மட்டோடு த்ருப்தியடைந்து விட்டதென்று உடனே ஆவிர்ப்பவித்தருளியாயிற்று. திருமுகம்கூட முழுதும் சிங்கமாக இயலாதபடி பெருமாள் த்வரையென்று ஸ்வாமி தேசிகன் திருவுள்ளம். “விஷம விலோசனன்” என்று வர்ணிக்கிறார். (விஷமம்—மூன்று கண்களையும் சொல்லும், பொருந்தாக் கண்களையும் சொல்லும்) சிங்கத்தின் முகத்தில் செந்தாமரைக் கண், ஸடை(பிடரி), அட்டஹாஸம், புருவ நெறிப்புகள் முதலியவற்றால் பயங்கரமான சிங்கமுகத்தினிடையே ஸரோஜஸத்ருசங்களான திருக்கண்கள் – என்று தயாசதகத்திலும் காமஸிகாஷ்டத்திலும் அனுபவம். ‘அனல்விழி’ யென்றும் எரிவட்டக் கண்கள் என்றும் ஆழ்வார்கள் அருளிச் செயல்களைக்கூட மாற்றி ஸ்வாமி அனுபவிக்கும்படி. நரஸிம்மாவதாரத்தில் பெருமாளுடைய த்வராதிசயத்தை “காலே ந்ருஸிம்ஹ” என்று ஸ்ரீருக்மிணிப் பிராட்டியும், “அங்கப்பொழுதே அவன்வீயத் தோன்றிய” என்று நம்மாழ்வாரும், “எற்றினன் எற்றலோடும் திசை திறந்தண்டங் கீறிச்சிரித்தது செங்கட்சீயம்” என்று கவிச் சக்ரவர்த்தி கம்பரும் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள்.
கஜேந்திரவரதனுடைய ஸம்ரக்ஷண த்வரைதான் ஜகத்பிரஸித்தமாயிற்றே! அதில் ஈடுபடாத கவியிமுண்டோ? பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் உத்தசதகம் 56-57 ச்லோகங்களில் கஜேந்திரன் கூப்பிட்டபோது பெருமாள் அடைந்த ஆகுலத்தையும் வேகத்தையும் ஒவ்வொரு ச்லோகத்தால் அனுபவித்திருக்கிறார். இத்தனைக்கும் அந்த யானை எம்பெருமானைப் பேர்சொல்லிக் கூப்பிடவில்லை. “மூலப்பேரிட்டழைத்த மும்மதமால் யானைக்கு நீலக்கிரிபோல் முன்னின்ற நெடுமாலுடைய நீர்மையையும் பெருமையையும் நினைத்துத்தானே ஆனைக்கன்றருளையீந்த கண்ணறா உன்னையன்றோ களைகணாக் கருதுமாறே” என்று தொண்டரடிப்பொடிகள் வியந்து பேசியபடி! மற்ற தெய்வங்கள் ஸங்கடமானவிடத்தில், நானன்று, என்னையன்று, என்று ஒதுங்கிப் பதுங்கும் வேளையில் முன்வந்து முகங்கொடுத்துக் காக்கும் தனித்தெய்வம் தானென்று இவ்வேழ வ்ருத்தாந்தத்தில் வெளியிட்டபடி ஸர்வேச்வரன் வேறெங்கும் வெளியிடக் காணோம். ஸக்ரும் ப்ரபந்நஜன ஸம்ரக்ஷணதீக்ஷிதனென்று அஸாதாரண பிருது தாங்கிய ராமாவதாரத்திலும் விபீஷணனை அந்தரக்ஷிகதனாகச் சிலகாலம் நிறுத்திவிட்டான். த்ரௌபதிக்கும் ஆபத்வேளையில் துகிலுதவினானேயன்றி தன் திருவுருவை நேரில் காணக்கொடுத்து உதவவில்லை. அபயப்ரதானத்திற்கு விபீஷணரும், ஔதார்யத்திற்கு த்ரௌபதியும் ஸாக்ஷிகள். ஆனால் ஆர்த்தார்த்திநிர்வாபனத்திற்கு கஜேந்திரனே ஸாக்ஷி. ஸ்ரீதியாகைய்யரும் ‘க்ஷீரஸாகர சயனா’ என்ற கீர்த்தனத்தில் வாரணராஜனை ரக்ஷிக்க வந்த வேகத்தைப் புகழ்ந்து பாடுகிறார். வேகம் வேறெங்கும் விளங்கவில்லை. தம்துமே ப்ராதரம் த்ரஷ்டும் பரதம் த்வரதே மக: என்று சக்ரவர்த்தித் திருமகன் பேசினாரேயொழிய சரணாகத பரதந்த்ரீக்ருத ஸ்வாதந்திரியர் ஆகையாலே த்வரித்தவளவு ரக்ஷிக்க வல்லவராகவில்லை அவ்வவதாரத்தில்.
ஸ்வாமி தேசிகர் பெருமான் கஜேந்திர ரக்ஷண த்வரையைப் பெருமைப் படுத்தக் கருதி “கஜேந்த்ர ரக்ஷா த்வரிதம் பவந்தம் க்ராஹைரிவாஹம் விஷயைர் விக்ருஷ்ட: அபார விக்ஞான தயாநுபாவம் ஆப்தம் ஸதாமஷ்ட புஜம் ப்ரபத்யே” என்று அட்டபுயகரத்தெம் பெருமான் விஷயமாகப் பாசுரமிடுகிறார். ‘தொட்டபடையெட்டும் தோராத வென்றியான் அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக் கோள் முதலை துஞ்ச குறித்தெறிந்த சக்கரத்தான் தாள்முதலே நங்கட்குச் சார்வு’ என்ற அருளிச் செயலின்படி கஜேந்திர ரக்ஷணத்தின்போது பெருமாளுக்கு எட்டுக் கைகள். அட்டபுயகரத்தெம்பெருமான் திருக்கோயிலில் உத்ஸவமூர்த்திகளுள் ஒருவர் கருடாரூடராய் கஜேந்திர ரக்ஷணத் திருக்கோலத்தோடு எழுந்தருளியிருப்பதை இன்றும் ஸேவிக்கலாம். ஆனையின் துயரந்தீரப் புள்ளூர்ந்து சென்றுநின்று ஆழி தொட்டவனுக்கு எட்டுக்கைகள் ஏன், என்பதற்கு அழகாய்க் காரணம் கூறுகிறார் நம் தேசிகோத்தமன். ‘சரணாகத ஸந்த்ராண த்வரா த்விகுணபாஹுகா ஹரிணா வேங்கடேசஸ்ய ஸ்துதி ஸ்வீக்ரியதாமியம்’ என்கிற அஷ்டபுஜாஷ்டக கடைசீ ச்லோகத்தில். ஹர்ஷத்தால் ஓருடல் ஈருடலாய்ப் பெருக்குமதுபோல் ஆச்ரித விரோதி நிரஸன த்வராதிசயத்தால் நாலுகைகள் எட்டுக்கைகளாக இரட்டித்தனவாம். ப்ரயோகித்தது ஓராழியே யானாலும் ஏந்தியது எட்டு ஆயுதங்கள். என்ன செய்வது என்று தெரியாத ஸாமான்யன் படும் ஸம்பிரமத்தோடு வாசியற விருக்கும் ஸர்வக்ஞனுடைய இந்த ஸந்த்ராண ஸம்பிரமும். ஆச்ரிதர்களுக்கு அனுக்ரஹிக்கும் வேளையில் நான்கு புருஷார்த்தங்களையும் ஏககாலத்தில் வழங்குவதற்காக நான்கு திருக்கைகளானால்,ஆச்ரிதவிரோதி நிரஸனத்தில் அமைவன எட்டுத் திருக்கைகள். இங்கு, தம் ரக்ஷணத்வரைக்குப் பாசுரமிடும் ஸ்தோத்திரமாகையால் இவ்வெட்டு ச்லோகங்களை எம்பெருமான் எட்டுத் திருக்கைகளாலும் ஸ்வீகரித்தருள வேண்டுமென்னும் பொருள் த்வனிக்கிறது. இது எம்பெருமானுக்கு ஆச்ரித பக்ஷபாதத்தால் ஏற்படும் த்வராதிசயத்தின் இருப்பு. இதற்குக் காரணம் அவன் தன்னிருப்பாயில்லாமல் கருணாவேச விவசனாயிருத்தல்தான் என்று ஸ்ரீஸங்கல்ப ஸூர்யோதயத்தில் அருளிச் செய்யப் பட்டிருக்கிறது.
இதை ஆலோசிக்கும்போது ஒரு எண்ணம் உதிக்கிறது. ப்ரஹ்லாத கஜேந்திராதிகள் பக்கல் தோன்றிய த்வரை அவர்களைவிட ஆயிரம் மடங்கு தீனர்களாயிருக்கும் நம் பக்கல் ஏன் தோற்றக் காணோம்? இதற்கு ஸ்வாமி அருளிச் செயலில் பலவிடங்களில் ஸமாதானம் நிறைந்திருக்கிறது. ‘அஹங்காரக்ராஹ க்ரஹகதன ஸாக்ராந்த ததுப்ருந், முமுக்ஷா ஸம்ப்ரதோ முரமதன ஸங்கல்ப மஹிமா’ முராரியினுடைய ஸங்கல்பமானது அஹங்காரமாகிய முதலையால் பீடிக்கப்பட்டுக் கதறும் ஜீவாத்மாவுக்கு மோக்ஷம் கொடுப்பதில் பரபரப்பை யுடையது என்று ஸாதிப்பதால் கஜேந்திரன் போல் நாமும் கையெடுத்தலறினாலன்றி அவன் ரக்ஷணத்வரை தோன்றாது. அவன் அனுக்ரஹம் நிர்ஹேதுகமென்று ஆறியிருப்போர் அனுபவிக்க அரிது அவனுடைய த்வரை. இத்தலையில் ஆர்த்தி யெழுந்தபோதே அத்தலையில் த்வரை யெழுமென்பது ஸஹஸ்ரப்ரமாண ஸித்தம், ஆழ்வார் அருளிச் செயலில் வெகு ஸ்பஷ்டம், ஸ்வாமி ஸ்ரீதேசிகனுடைய ஸ்ரீஸூக்திகளின் முடிவான ஸித்தாந்தம்.
Leave a Comment
“ஸம்ரக்ஷணீ” யிலிருந்து
Posted in ஸம்ரக்ஷணீ by thiruthiru on January 23, 2010
திருவடி நகர்
(1940 ஏப்ரல்—மே மாத “ஸம்ரக்ஷணீ” இதழில் ஸ்ரீ ராமஸ்வாமி தாஸன் எழுதியது)
எம்பெருமானாருடைய திருவடிகளை ஒரு பட்டணமாக (நகரமாக) வர்ணிக்கிறார் வேதாந்த தேசிகன். யதி சக்கரவர்த்தி பதபத்ம பட்டணத்தை நல்லறிவாளர்கள் நன்கு எய்தி குற்றமற்ற ரீதியில் ஹரிபக்த தாஸ்யத்திலுள்ள ரஸத்தால் ஒருவருக்கொருவர் வாங்கியும் விற்றும் வழங்கலாம்படியான தசையில் (ஹிதைக்ஷிகளாய்) ப்ரகாசிக்கிறார்களாம். ஸ்ரீபாஷ்யகாரர் திருவவதரித்து ஸ்ரீவைஷ்ணவர்கள் தழைத்தோங்கி நிற்கும் நிலையை முன்னமேயே ஞானத்ருஷ்டியால் கண்டு ‘பொலிக பொலிக பொலிக’ என்று அந்த ஸமூஹத்திற்கு நம்மாழ்வார் பல்லாண்டு பாடினார் என்று பெரியோர் கொள்கை. எம்பெருமானார் காலத்துக்குப் பிற்பாடான நம் தூப்புல் பிள்ளை நேரில் அந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியையும் கலியைக் கெடுத்த பரஸ்பர ஹிதத்தையும் அனுபவித்து அருளிச்செய்த பாசுரமிது:–
அபிகம்ய ஸம்ய கநகா: ஸுமேதஸ:
யதி சக்கரவர்த்தி பதபத்ம பந்தனம்
ஹரிபக்த தாஸ்யரஸிகா: பரஸ்பரம்
க்ரய விக்ரயார்ஹதசயா ஸமிந்ததே.
நகரத்தை நாலாதிக்குகளிலிருந்தும் கிராம வாஸிகள் வந்து அடைவது இயல்பு. இந்த பட்டணத்திற்கும் பலர் பலவிடங்களிலிருந்து வருகின்றனர் என்பதை அபிகம்ய சப்தம் காட்டுகிறது. வந்து சேர்ந்த பிறகு இங்கே இருக்கும் அழகைக் கண்டு திரும்பிப் போக மனமில்லாது ஆய்விடுவதால் இது நன்கு அடையப் பட்டதாயிற்று. (ஸம்யக் அபிகம்ய) மீளவொண்ணாது வந்தடைந்தமையைக் காட்டுகிறது. ஒரு முறை நகரத்தினழகுகளை அனுபவித்தவர் மறுபடி கிராமத்திற்குப் போக விரும்புவாரா? மதுரை மாநகரத்து மாதர்களைக் கண்ட கண்ணன் இனி கிராமத்தில் வஸிக்கும் நம்மைப் பற்றி நினைக்கவும் மாட்டார் என்று கோபிகைகள் வருந்தவில்லையா? ஸாமான்ய நகரத்திற்கே இது இயல்பென்றால் அஜஹத் த்ரிவர்க்காபவர்க்க வைபவமுடைய (ஐஹிகாமுஷ்மிக பலங்களை கொடுக்கும்) இராமாநுசன் தன்னிணையடிகளைச் சேர்ந்தோருக்கு அப்பேறுகளை விட்டுத் திரும்ப மனம் வருமா? ஆகவே ஸம்யக் அபிகம்ய, நன்கு அடைந்தபடி. அவ்வடிப்போதுகளின் ஒண்சீராந்தெளிதேன் உண்டு அமர்ந்திட வேண்டியே ஒவ்வொருவர் நெஞ்சும் போந்தது. இனி மற்றொன்று காட்டி மயக்காதிருக்க வேண்டுமன்றல்லவோ அப்படி அமர்ந்தவர் பாசுரமிருக்கும்படி.
அப்படி இப்பட்டணத்தை வந்தடைந்தவர் பெறும் பேற்றைச் சொல்லுகிறது “ஹரிபக்த தாஸ்ய ரஸிகா:” இவர்களனுபவிக்கும் ரஸம் தாஸ்ய ரஸம். பிறர்க்கே உழைத்தேழையானேன் என்றபடிக்குள்ள கிராம்ய ரஸம் போலல்லாது ஹரிபக்தர்களுக் காட்பட்டுச் செய்யும் தாஸ்யம் மிக நாகரீகமானது. இதுதான் இப் பட்டணத்தில் இவர்கள் காணும் புதுமை. உண்டிக்கும் உடைக்கும் பெண்டிருக்கும் பாடுபட்டுக் காலத்தைப் போக்கிய பேர்களுக்கு எம்பெருமானைக் கண்ணாரக் கண்டுருகிக் கையாரத் தொழுவாரைத் தொழும் பாக்கியம் ஏற்பட்டால் அதைப் பாராட்டாது போவார்களா?
தாஸ்யமென்றாலும் க்ரய விக்ரயார் ஹதசாபர்யந்தமான தாஸ்யம். க்ரயம் என்றால் வாங்குவது, விக்ரயம் என்றால் விற்பது. வாங்கவும் விற்கவும் கூடும்படியாக அப்படி ஒருவருக்கொருவர் ஆட்பட்டிருப்பது. “எந்தம்மை விற்கவும் பெறுவார்களே” என்று பேசினார் பெரியாழ்வார். எல்லாரும் விற்பவர்களானால் வாங்குபவர்கள் யாவருமின்றிப் போகுமன்றோ? ஆகையால் வாங்குபவரும் விற்பவரும் மலிந்துள்ளது இப்பட்டணம் என்று காட்ட “க்ரய விக்ரயார்ஹதசயா ஸமிந்ததே” என்கிறார் தேசிகன். “பரஸ்பரம் க்ரயவிக்ரயார்ஹ” என்பதால் ஒருவரே விற்பவராயும் வாங்குபவராயும் இருக்க இயலும். வியாபார முறையில் இதிலும் மேம்பட்ட சீர்மையுண்டோ? பட்டணத்தின் செழிப்புக்கு வியாபாரத்தின் மிகுதியே காரணமன்றோ?
ஒரு சிற்றரசன் ராஜ்யத்தினுடைய தலைநகரும் பட்டணமென்று பேசப்படும். இது ஒரு பெரும் பட்டணமென்று காட்ட சக்கரவர்த்தியுடைய பட்டணம் என்று வர்ணிக்கப் படுகிறது.யதி சக்ரவர்த்தி பதபத்ம பட்டணம்.பல அரசர்களுக்கு ப்ரதானரான ஒரு பெரிய சக்ரவர்த்தியினுடைய நகரம். திருவடி நகர் தலைநகராயிருக்கிறது.
உடையவருடைய திருவுள்ளம் விசாலமானது என்று சொல்வதுண்டு. இந்த உண்மையை விளக்கப் பல பொருந்தாத ஐதிஹ்யங்களைச் சொல்லி வருவோரையும் காண்கிறோம். ஸ்வாமி தேசிகன் இந்த ச்லோகத்தில் உடையவருடைய திருவடிகளை ஒரு விசாலமான பட்டணமாக அனுபவிப்பது வெகு ரஸமாயிருக்கிறது. அநுகல்ப பூத முரபித்பதம் ஸதாம் என்று மஹான்களுக்கு எம்பெருமானார் திருவடிகள் முக்கிய கல்பங்களாயும் எம்பெருமான் திருவடிகள் அநுகல்பங்களாயுமுள்ளனவாக ஸாதித்தது வைசால்யத்தையும் கருதியேதானிருத்தல் வேண்டும். உலக மளந்ததே யொழிய உலகை உய்விக்கவில்லை ஸர்வேச்வரனுடைய திருவடி. சரணாகதி யென்னும் உபாயத்தைக் காட்டி நல்வழிப்படுத்தி உலகனைத்துக்கும் உய்யும் வகை ஏற்படுத்தி வைத்தது ஸ்ரீபாஷ்யகாரர் திருவடியேதான். ஆகையால் அனைவருக்கும் இடம் கொடுத்துக் காப்பவை உடையவர் திருவடிகளேயாகும். அவைகளை நன்கு அடைவதே (அபிகம்ய ஸம்யக்) உபாயம். அப்படி அடைபவர்களே அநகர்கள். (குற்றமில்லாதவர்கள்) இங்கே அகம் (குற்றம்) என்னப்படுவது ஸ்ரீபாஷ்யகாரர் அனுஷ்டித்துக் காட்டிய வழியை அவமதியாதிருத்தலே. ப்ரபத்தி செய்யாமல் ப்ரபந்நத்வம் ஸித்திக்காது என்று தெளிந்து அப்பொன்னருள் எனக்குமாக வேண்டுமென்று எம்பெருமான் அடியிணையை இறைஞ்சுவோரே நல்ல புத்திமான்கள் (ஸுமேதஸ:) இப்படிப்பட்டவர்கள் புருஷார்த்த காஷ்டையான பாகவத தாஸ்யத்தை வஹித்து இன்புறும் ப்ரதேசம்தான் யதிபதி திருவடி நகர்.
Leave a Comment
Next Page » .
--------------------------------------------------------------------------------
Theme: The Green Marinée by Ian Main — Blog at WordPress.com.
RSSComments RSSBlog at WordPress.com.
Sunday, October 31, 2010
Monday, October 4, 2010
ரஹஸ்யத்ரயஸாரம்
ரஹஸ்யத்ரயஸாரம்-
___________________
Posted by: "thiruthiru" rajamragu@gmail.com thiruthiruragu
Sun Oct 3, 2010 8:05 pm (PDT)
; “திடமுதற் கேள்வி கொண்டே திறங்கொளா மூர்க்கர் தன்மத், திடமது தெளியா ரந்தோ.....”1.
என்று இந்நீதியின் நறுமையும் அருமையும் விளங்குமாற்றை ரஹஸ்யத்ரயஸாரத்தில்
எடுத்துக்காட்டினார். “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது பழமொழி.
கொண்டதுபற்றல் பொதுவாக ஒருசிறிதளவில் அறிஞராகிய சித்தாந்திகளிடத்தில் இருத்தல்
இயல்பே. ஆயினும் அறிஞர் என்பார் கொண்டது விடாமை என்ற ஒன்றையே கோட்பாடாகக் கொள்ளாது
நல்லகோட்பாட்டின் நலம்கண்டு அதைக் கடைப்பிடிக்கும் சால்புடையார் என்று மீமாம்ஸாபாதுகையில்.
இம்மஹாதேசிகர் காட்டியிருத்தலை நோக்குக:-
“பண்புடைமதியின் மிக்கார் மிக்கார் பழையதோ புதியதோவாம், ஒண்பொரு ளொன்று மந்நற்
பொருளையே கடைப்பிடிப் பார்”2 என்றும் “குமரிலம் போன்ற நூலே கொள்ளுமா தரமிகுந்த,
அமயமின் றுமது நூலை யார் கொள்வார்? முன்னம் கேட்ட, தமதுளப் பாட்டின் பற்றில் தானொரு
வேறு நீதி, அமையுமோ? என்னில், அன்று, நன்றுடன் படுவர் நல்லார்.....”3. என்றும்
மீமாம்ஸாபாதுகையில் கூறினார். இவ்வாறு அறிஞருடைய சான்றாண்மைத்தகைமையை இவர்
போற்றியுள்ள பெருமனவள்ளன்மையைப் போற்றுக. எம்பெருமானார் தரிசநம் என்னும்
ராமாநுஜஸித்தாந்தம் இம்மஹாதேசிகருடைய சமயம். கீழே விளக்கப்பெறும் தத்துவமும்மையை
அடியாகக் கொண்டுள்ள திருமாலின் ஸர்வசரீரித்தன்மை என்னும் இறைமை இந்த சித்தாந்தத்துக்கு
ப்ரதாநப்ரதிதந்த்ரம் ஆகும். ஆயினும் அது சித்தாந்தியர் பிறர்க்கும் ஓரளவிலேனும்
உடன்படுசித்தாந்தமாய்க் கைக்கொள்ளத்தக்க நன்னெறியில் தூய்மையும் இனிமையும் ஒன்றிய
செந்தமிழ்ச் சொற்களாலமைத்து இம்மாலையை நல்கியுள்ளார். சான்றோர் பணிக்கும் சிறப்புமறை
நூல்களை உணரும் முறையும் அவை உணர்த்தும் நுட்பமும் நயமும் ஓர்ந்து தெளியப்பட வேண்டும்.
சிறப்பு மறைநூல்கள் அறிஞர் அனைவர்க்குமே ஓரளவில் பொதுமறையாயே இருக்கும்.
ஒருபடியிலேனும் பொது மறையாகா நூல் எப்படியிலும் சிறப்புமறையாகாது. ஒரு
சமயத்தாருடைய சிறப்பு நூலை மற்றோர் சமயத்தார் மறுக்குங்கால் இருவர்க்கும் உடன்பாடாகிய
பொதுச் சான்றுகளையே ஆதாரமாகக் கொண்டு வாதம் நிகழ்த்தி உண்மை தெளிய வேண்டும்.
சொற்சான்றை உடன்படாத சாருவாக சமயத்தார் வைதிக சமயத்தைத் தாக்குங்கால், கண்கூடு ஒன்றையே
சான்றாகக் கொண்ட சாருவாகர்களை, கண்கூடும் ஒருசான்று என்று உடன்பட்ட வைதிக சமயத்தினர்
அவ்வொரு சான்றுகொண்டே சாருவாக சமயத்தை மறுத்துத் தமது சமயத்தை நிறுவல் வேண்டும்.
பரமத பங்கத்தில் இவர் சாருவாக சமயத்தை மறுத்துள்ள சுருக்குப் பாக்களை இங்கு
எடுத்துக்காட்டுவாம்.
”கண்டது மெய்யெனிற் காணும் மறையில் அறிவு கண்டோம்
கண்டத லாத திலதெனிற் கண்டிலம் குற்றமிதில்
கண்டது போன்மறை காட்டுவதுங் கண்ட தொத்ததனால்
உண்டது கேட்கு முலோகா யதரின்று மீறுவதே”4
“கண்டதனாற் காணாத தனுமிக் கின்றார்
கண்டொருத்த னுரைத்ததனைக் கவருகின்றார்
உண்டுபசி கெடுமென்றே யுணர்ந்துண் கின்றார்
ஒன்றாலே யொன்றைத்தாம் சாதிக்கின்றார்
பண்டுமுலை யுண்டதனால் முலையுண் கின்றார்
பார்க்கின்றார் பலரல்லாத் தம்மை மற்றும்
பண்டுமதி கெட்டநிலை காண கில்லார்
காணாதொன் றிலதென்று கலங்கு வாரே”5
என்பன, கண்கூட்டுக்கும் முரண், தம்முள்ளும் முரண் என்ற இருவகை முரண்பாடும் உற்றுள்ளதால்
சாருவாக மதம் சான்றோர்க்குக் கொள்ளற்பாலதன்று என்று துணிந்தார். பொதுச் சான்றோடு
முரணுதலும், தம்முள் ஒன்றோடொன்று முரணுதலும் சித்தாந்தங்களுக்கு இழுக்கு என்றது
சித்தாந்திகள் அனைவரும் உடன்பட்டுள்ள வாத நீதி. சான்றோடு முரணுதல் தன்னிலும் தம்முள்
ஒன்றோடொன்று முரணுதலைக் காட்டி மறுத்தல் மிக்க வலியதாகும் என்ற குறிப்பைக் காண்க.
தம்முள்முரணல் சான்றோடு முரணற்கு அறிகுறியாகும். சான்றுகளான அனைத்தோடும் (அதாவது
காட்சி, ஊகம், சொல் என்ற முச்சான்றுகளோடும்) முரணாக் கோட்பாடே தம்முள் முரணாக் கோட்பாடு
ஆகும் என்ற தருக்க நீதியைக் காட்டியுள்ள நயம் காண்க. சொற்சான்றை உடன்பட்ட
பெருஞ்சமயத்தாருள்ளும் வாதங்கள் நிகழும். அது நிகழுங்கால் சொற்சான்று கொண்டு வாதத்தை
நெறியிற் பரிந்து தத்துவத்தைத் துணிய வேண்டும் என்றார். பொதுச்சான்றோடு முரணுதலையும்
தம்முள் ஒன்றோடொன்று முரணுதலையும் காட்டி மறுக்க வேண்டும். இங்கும் தம்முள் ஒன்றோடொன்று
முரணலைக் காட்டி மறுத்தல் மிக்க வலியதாகும். ஒரே சிறப்புச் சமயத்தாருள்ளும் வாதம்
நிகழுங்கால் அவர்கட்கு உடன்பாடாகிய சிறப்புச்சான்று கொண்டே துணிதல் வேண்டும். இங்கு,
பொதுச்சான்று தன்னிலும் சிறப்புச்சான்று வலிமிக்கதாதலால் சிறப்புச்சான்று கொண்டே துணிதல்
முறையாகும். இம்முறைகளை இவர் ஸங்கல்பசூர்யோதயத்தில்6 விளக்கியிருத்தல் காண்க.
இம்முறைகளால் உரியசான்றுகளைக் கொண்டு, எழும்வாதத்துக்கும் எழுப்பும்வாதியர்க்கும் தக
உண்மையை ஓர்ந்து தெளிதல் அறிஞர்க்கு அழகாகும். மூதறிஞர்களின் சிறப்புமறைநூல்களில்
மற்றுமோர் நயமும் காணப்பட வேண்டும். அந்நூல்களுள், சிலகருத்து வலியுறுத்தப் பெற்றும்,
சில மறுக்கப்பெற்றும், சில உதாசீனமாய் விடப்பட்டும் உள்ளன. உதாசீநம் என்பது விருப்பும்
வெறுப்புமின்மையாகும். உடன்படாதும் மறுக்காதும் உள்ள கருத்து உதாசீனத்தின் பாற்படும்.
அவற்றின் சுவடு நன்கு அறியப்பட வேண்டும். வேதக்கருத்தை உணர்த்துதற்கே தோன்றிய ஜைமிநி
முதலிய பேரிருடிகளும் இம்மஹாதேசிகர் போன்ற பேராசிரியர்களும் இவ்வுண்மையைக்
காட்டியுள்ளது நன்கு உள்ளித் தெளியற்பாலது. இச்சுவடு அறிந்தார்க்கே தெளிவு.
அறியாதார்க்குக் கலக்கமே. இந்நலம் உணராதார், தாமும் கலங்குவார் பிறரையும் கலக்குவார்.
இந்நெறி நுட்பத்தை:-
“யாங்குசை மிநிமு தல்வர் நன்றுதா சீந நின்றார்
யாங்கலைந் ததுக லக்க வாதர்தம் வாய்வ லிப்பார்”7
என்று ந்யாயபரிசுத்தியிலும்,
“உளபொருள் விருத்தி யாவு முள்ளவா றுள்ளு கோணத்
தளவுதா சிநவி கற்போ டடைத்தெனுண் ணறும தத்தே”8
என்று தத்த்வமுக்தாகலாபத்திலும் இம்மஹாதேசிகர் காட்டினார். நன்மதி, நன்னெறி, நன்மொழி,
நல்லருள், நன்னீப்பு முதலிய நலங்களுக்கு வித்தாயும் அவற்றின் விளைவாயும் விளங்கும்
நன்மாலையே இம்மாலை. இவ்வாறு மக்களனைவர்க்கும் நலம் பயக்கும் பொதுமறைநூலாயும் ஒருபடி
சிறப்புமறை நூலாயும் திருமாலடியார்க்கு முற்றும் உபயவேதாந்த ரஹஸ்யத்திருமந்திர நூல்
என்னும் சிறப்புமறைநூலாயும் இம்மாலை விளங்குதல் ஒருவாறு கூறப்பட்டது.
1ரஹஸ்யத்ரயஸாரம் 23 (தமிழ் செய்தது) ; 2 மீமாம்ஸாபாதுகா 8 (தமிழ்செய்தது); 3
மீமாம்ஸபாதுகா 7 (தமிழ் செய்தது); 4 பரமதபங்கம் 12; 5 பரமதபங்கம் 13 ; 6 ஸங்கல்ப.2;
7 ந்யாயபரிசுத்திப்ரமேயாத்யாயம், ஆஹ்நிகம் 2(தமிழ்செய்தது); 8 தத்வமுக்தகலாபம்
495(தமிழ் செய்தது)
--
Posted By thiruthiru to புல்லாணிப்பக்கங்கள் at 9/26/2010 09:45:00 AM
___________________
Posted by: "thiruthiru" rajamragu@gmail.com thiruthiruragu
Sun Oct 3, 2010 8:05 pm (PDT)
; “திடமுதற் கேள்வி கொண்டே திறங்கொளா மூர்க்கர் தன்மத், திடமது தெளியா ரந்தோ.....”1.
என்று இந்நீதியின் நறுமையும் அருமையும் விளங்குமாற்றை ரஹஸ்யத்ரயஸாரத்தில்
எடுத்துக்காட்டினார். “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது பழமொழி.
கொண்டதுபற்றல் பொதுவாக ஒருசிறிதளவில் அறிஞராகிய சித்தாந்திகளிடத்தில் இருத்தல்
இயல்பே. ஆயினும் அறிஞர் என்பார் கொண்டது விடாமை என்ற ஒன்றையே கோட்பாடாகக் கொள்ளாது
நல்லகோட்பாட்டின் நலம்கண்டு அதைக் கடைப்பிடிக்கும் சால்புடையார் என்று மீமாம்ஸாபாதுகையில்.
இம்மஹாதேசிகர் காட்டியிருத்தலை நோக்குக:-
“பண்புடைமதியின் மிக்கார் மிக்கார் பழையதோ புதியதோவாம், ஒண்பொரு ளொன்று மந்நற்
பொருளையே கடைப்பிடிப் பார்”2 என்றும் “குமரிலம் போன்ற நூலே கொள்ளுமா தரமிகுந்த,
அமயமின் றுமது நூலை யார் கொள்வார்? முன்னம் கேட்ட, தமதுளப் பாட்டின் பற்றில் தானொரு
வேறு நீதி, அமையுமோ? என்னில், அன்று, நன்றுடன் படுவர் நல்லார்.....”3. என்றும்
மீமாம்ஸாபாதுகையில் கூறினார். இவ்வாறு அறிஞருடைய சான்றாண்மைத்தகைமையை இவர்
போற்றியுள்ள பெருமனவள்ளன்மையைப் போற்றுக. எம்பெருமானார் தரிசநம் என்னும்
ராமாநுஜஸித்தாந்தம் இம்மஹாதேசிகருடைய சமயம். கீழே விளக்கப்பெறும் தத்துவமும்மையை
அடியாகக் கொண்டுள்ள திருமாலின் ஸர்வசரீரித்தன்மை என்னும் இறைமை இந்த சித்தாந்தத்துக்கு
ப்ரதாநப்ரதிதந்த்ரம் ஆகும். ஆயினும் அது சித்தாந்தியர் பிறர்க்கும் ஓரளவிலேனும்
உடன்படுசித்தாந்தமாய்க் கைக்கொள்ளத்தக்க நன்னெறியில் தூய்மையும் இனிமையும் ஒன்றிய
செந்தமிழ்ச் சொற்களாலமைத்து இம்மாலையை நல்கியுள்ளார். சான்றோர் பணிக்கும் சிறப்புமறை
நூல்களை உணரும் முறையும் அவை உணர்த்தும் நுட்பமும் நயமும் ஓர்ந்து தெளியப்பட வேண்டும்.
சிறப்பு மறைநூல்கள் அறிஞர் அனைவர்க்குமே ஓரளவில் பொதுமறையாயே இருக்கும்.
ஒருபடியிலேனும் பொது மறையாகா நூல் எப்படியிலும் சிறப்புமறையாகாது. ஒரு
சமயத்தாருடைய சிறப்பு நூலை மற்றோர் சமயத்தார் மறுக்குங்கால் இருவர்க்கும் உடன்பாடாகிய
பொதுச் சான்றுகளையே ஆதாரமாகக் கொண்டு வாதம் நிகழ்த்தி உண்மை தெளிய வேண்டும்.
சொற்சான்றை உடன்படாத சாருவாக சமயத்தார் வைதிக சமயத்தைத் தாக்குங்கால், கண்கூடு ஒன்றையே
சான்றாகக் கொண்ட சாருவாகர்களை, கண்கூடும் ஒருசான்று என்று உடன்பட்ட வைதிக சமயத்தினர்
அவ்வொரு சான்றுகொண்டே சாருவாக சமயத்தை மறுத்துத் தமது சமயத்தை நிறுவல் வேண்டும்.
பரமத பங்கத்தில் இவர் சாருவாக சமயத்தை மறுத்துள்ள சுருக்குப் பாக்களை இங்கு
எடுத்துக்காட்டுவாம்.
”கண்டது மெய்யெனிற் காணும் மறையில் அறிவு கண்டோம்
கண்டத லாத திலதெனிற் கண்டிலம் குற்றமிதில்
கண்டது போன்மறை காட்டுவதுங் கண்ட தொத்ததனால்
உண்டது கேட்கு முலோகா யதரின்று மீறுவதே”4
“கண்டதனாற் காணாத தனுமிக் கின்றார்
கண்டொருத்த னுரைத்ததனைக் கவருகின்றார்
உண்டுபசி கெடுமென்றே யுணர்ந்துண் கின்றார்
ஒன்றாலே யொன்றைத்தாம் சாதிக்கின்றார்
பண்டுமுலை யுண்டதனால் முலையுண் கின்றார்
பார்க்கின்றார் பலரல்லாத் தம்மை மற்றும்
பண்டுமதி கெட்டநிலை காண கில்லார்
காணாதொன் றிலதென்று கலங்கு வாரே”5
என்பன, கண்கூட்டுக்கும் முரண், தம்முள்ளும் முரண் என்ற இருவகை முரண்பாடும் உற்றுள்ளதால்
சாருவாக மதம் சான்றோர்க்குக் கொள்ளற்பாலதன்று என்று துணிந்தார். பொதுச் சான்றோடு
முரணுதலும், தம்முள் ஒன்றோடொன்று முரணுதலும் சித்தாந்தங்களுக்கு இழுக்கு என்றது
சித்தாந்திகள் அனைவரும் உடன்பட்டுள்ள வாத நீதி. சான்றோடு முரணுதல் தன்னிலும் தம்முள்
ஒன்றோடொன்று முரணுதலைக் காட்டி மறுத்தல் மிக்க வலியதாகும் என்ற குறிப்பைக் காண்க.
தம்முள்முரணல் சான்றோடு முரணற்கு அறிகுறியாகும். சான்றுகளான அனைத்தோடும் (அதாவது
காட்சி, ஊகம், சொல் என்ற முச்சான்றுகளோடும்) முரணாக் கோட்பாடே தம்முள் முரணாக் கோட்பாடு
ஆகும் என்ற தருக்க நீதியைக் காட்டியுள்ள நயம் காண்க. சொற்சான்றை உடன்பட்ட
பெருஞ்சமயத்தாருள்ளும் வாதங்கள் நிகழும். அது நிகழுங்கால் சொற்சான்று கொண்டு வாதத்தை
நெறியிற் பரிந்து தத்துவத்தைத் துணிய வேண்டும் என்றார். பொதுச்சான்றோடு முரணுதலையும்
தம்முள் ஒன்றோடொன்று முரணுதலையும் காட்டி மறுக்க வேண்டும். இங்கும் தம்முள் ஒன்றோடொன்று
முரணலைக் காட்டி மறுத்தல் மிக்க வலியதாகும். ஒரே சிறப்புச் சமயத்தாருள்ளும் வாதம்
நிகழுங்கால் அவர்கட்கு உடன்பாடாகிய சிறப்புச்சான்று கொண்டே துணிதல் வேண்டும். இங்கு,
பொதுச்சான்று தன்னிலும் சிறப்புச்சான்று வலிமிக்கதாதலால் சிறப்புச்சான்று கொண்டே துணிதல்
முறையாகும். இம்முறைகளை இவர் ஸங்கல்பசூர்யோதயத்தில்6 விளக்கியிருத்தல் காண்க.
இம்முறைகளால் உரியசான்றுகளைக் கொண்டு, எழும்வாதத்துக்கும் எழுப்பும்வாதியர்க்கும் தக
உண்மையை ஓர்ந்து தெளிதல் அறிஞர்க்கு அழகாகும். மூதறிஞர்களின் சிறப்புமறைநூல்களில்
மற்றுமோர் நயமும் காணப்பட வேண்டும். அந்நூல்களுள், சிலகருத்து வலியுறுத்தப் பெற்றும்,
சில மறுக்கப்பெற்றும், சில உதாசீனமாய் விடப்பட்டும் உள்ளன. உதாசீநம் என்பது விருப்பும்
வெறுப்புமின்மையாகும். உடன்படாதும் மறுக்காதும் உள்ள கருத்து உதாசீனத்தின் பாற்படும்.
அவற்றின் சுவடு நன்கு அறியப்பட வேண்டும். வேதக்கருத்தை உணர்த்துதற்கே தோன்றிய ஜைமிநி
முதலிய பேரிருடிகளும் இம்மஹாதேசிகர் போன்ற பேராசிரியர்களும் இவ்வுண்மையைக்
காட்டியுள்ளது நன்கு உள்ளித் தெளியற்பாலது. இச்சுவடு அறிந்தார்க்கே தெளிவு.
அறியாதார்க்குக் கலக்கமே. இந்நலம் உணராதார், தாமும் கலங்குவார் பிறரையும் கலக்குவார்.
இந்நெறி நுட்பத்தை:-
“யாங்குசை மிநிமு தல்வர் நன்றுதா சீந நின்றார்
யாங்கலைந் ததுக லக்க வாதர்தம் வாய்வ லிப்பார்”7
என்று ந்யாயபரிசுத்தியிலும்,
“உளபொருள் விருத்தி யாவு முள்ளவா றுள்ளு கோணத்
தளவுதா சிநவி கற்போ டடைத்தெனுண் ணறும தத்தே”8
என்று தத்த்வமுக்தாகலாபத்திலும் இம்மஹாதேசிகர் காட்டினார். நன்மதி, நன்னெறி, நன்மொழி,
நல்லருள், நன்னீப்பு முதலிய நலங்களுக்கு வித்தாயும் அவற்றின் விளைவாயும் விளங்கும்
நன்மாலையே இம்மாலை. இவ்வாறு மக்களனைவர்க்கும் நலம் பயக்கும் பொதுமறைநூலாயும் ஒருபடி
சிறப்புமறை நூலாயும் திருமாலடியார்க்கு முற்றும் உபயவேதாந்த ரஹஸ்யத்திருமந்திர நூல்
என்னும் சிறப்புமறைநூலாயும் இம்மாலை விளங்குதல் ஒருவாறு கூறப்பட்டது.
1ரஹஸ்யத்ரயஸாரம் 23 (தமிழ் செய்தது) ; 2 மீமாம்ஸாபாதுகா 8 (தமிழ்செய்தது); 3
மீமாம்ஸபாதுகா 7 (தமிழ் செய்தது); 4 பரமதபங்கம் 12; 5 பரமதபங்கம் 13 ; 6 ஸங்கல்ப.2;
7 ந்யாயபரிசுத்திப்ரமேயாத்யாயம், ஆஹ்நிகம் 2(தமிழ்செய்தது); 8 தத்வமுக்தகலாபம்
495(தமிழ் செய்தது)
--
Posted By thiruthiru to புல்லாணிப்பக்கங்கள் at 9/26/2010 09:45:00 AM
Salagrama Thiruvaradanam-DVD
Salagrama Thiruvaradanam-DVD
by Poundarikapuram Andavan Asramam
___________________________
Re: Saligramam Aradhanam
Posted by: "Badrinarayanan" badriks1967@yahoo.co.in badriks1967
Sun Oct 3, 2010 8:57 am (PDT)
I have saligramams at home; daily I am reciting nithyaanusanthanam; If any could provide video/audio on how to perform aradhanam for Saligramam, it would be very helpful for beginners like me. Though I am doing aradhanam using Andavan's ashram guide, it is for from satisfying me.
Thanks
Dasan
Kidambi Srinivasaraghava Badri Narayanan
Back to top Reply to sender | Reply to group | Reply via web post
Messages in this topic (2)
1b. Re: Saligramam Aradhanam
Posted by: "Sridharan Raghavan" sridharan_49@yahoo.co.in sridharan_49
Sun Oct 3, 2010 11:37 pm (PDT)
Dear Swamin,
Sri Poundarigapuram Srimad Andavan Ashram has released a DVD on Salagrama
Thiruvaradanam which is complete and useful.I have a copy. It is available in
the Ashram in Thiruneermalai, Srirangam etc.
================
Another post on Saligrama worship:
Re: Saligramam worship by woman
Posted by: "Ramanujam Srinivasan" vasan1937@yahoo.com vasan1937
Mon Feb 13, 2012 Srimathe Ramanujaya Namaha
Dear Swamin
Reagarding your query. Ladies can offer Prasadam to Salagrama Moorthy in the absence of their husbands. But they should not touch the Perumal,. they can open the Sampudam or box in which the Salagraman is kept and after the Neivedhayam close the box.
Dasan
Venagarai R.Srinivasan
--- On Sun, 12/2/12, raman rajagopal <vasudhagopal2000@yahoo.com> wrote:
From: raman rajagopal <vasudhagopal2000@yahoo.com>
Subject: [andavan] Saligramam worship by woman
To: "andavan@yahoogroups.com" <andavan@yahoogroups.com>
Date: Sunday, 12 February, 2012
Dear friends,
Can a wife do prsadhana samarpan to koil azzwar (saligramam) in the house, when the husband travels? Request some one to throw light on this? Further can a woman (lone) maintain saligramam in her house? Regards
R. Rajagopal
by Poundarikapuram Andavan Asramam
___________________________
Re: Saligramam Aradhanam
Posted by: "Badrinarayanan" badriks1967@yahoo.co.in badriks1967
Sun Oct 3, 2010 8:57 am (PDT)
I have saligramams at home; daily I am reciting nithyaanusanthanam; If any could provide video/audio on how to perform aradhanam for Saligramam, it would be very helpful for beginners like me. Though I am doing aradhanam using Andavan's ashram guide, it is for from satisfying me.
Thanks
Dasan
Kidambi Srinivasaraghava Badri Narayanan
Back to top Reply to sender | Reply to group | Reply via web post
Messages in this topic (2)
1b. Re: Saligramam Aradhanam
Posted by: "Sridharan Raghavan" sridharan_49@yahoo.co.in sridharan_49
Sun Oct 3, 2010 11:37 pm (PDT)
Dear Swamin,
Sri Poundarigapuram Srimad Andavan Ashram has released a DVD on Salagrama
Thiruvaradanam which is complete and useful.I have a copy. It is available in
the Ashram in Thiruneermalai, Srirangam etc.
================
Another post on Saligrama worship:
Re: Saligramam worship by woman
Posted by: "Ramanujam Srinivasan" vasan1937@yahoo.com vasan1937
Mon Feb 13, 2012 Srimathe Ramanujaya Namaha
Dear Swamin
Reagarding your query. Ladies can offer Prasadam to Salagrama Moorthy in the absence of their husbands. But they should not touch the Perumal,. they can open the Sampudam or box in which the Salagraman is kept and after the Neivedhayam close the box.
Dasan
Venagarai R.Srinivasan
--- On Sun, 12/2/12, raman rajagopal <vasudhagopal2000@yahoo.com> wrote:
From: raman rajagopal <vasudhagopal2000@yahoo.com>
Subject: [andavan] Saligramam worship by woman
To: "andavan@yahoogroups.com" <andavan@yahoogroups.com>
Date: Sunday, 12 February, 2012
Dear friends,
Can a wife do prsadhana samarpan to koil azzwar (saligramam) in the house, when the husband travels? Request some one to throw light on this? Further can a woman (lone) maintain saligramam in her house? Regards
R. Rajagopal
Subscribe to:
Posts (Atom)