Wednesday, April 13, 2011

ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி (கட்டவாக்கம்)


ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி (கட்டவாக்கம்)
_________________

ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸ்வாமி (கட்டவாக்கம்) கோவிலில் கட்டியிருக்கும் தொங்கு பலகையில் எழுதியிருப்பதை இங்கு தமிழில் அப்படியே எழுதியுள்ளேன்.

பெருமாளின் அமைப்பு:

ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அனந்த பீடம், யோக பீடம், ஆகிய ஐந்து பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்றிருக்கும் பெருமாளுக்கு மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில் அம்பும் தாங்கி மற்றும் அபய வரத ஹஸ்தத்துடன் குளிர கடாக்ஷிக்கும் பாணியானது வந்தாரை வாழவைக்கும் பெருமாள் என்பதை உறுதிப்படுத்துகிறது. மகாலக்ஷ்மியுடன் கூடிய இந்த ந்ருஸிம்ஹனுக்கு த்ரிநேத்ரம் அமைந்துள்ளது. " அருள்விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்ணும் போதாமல் முக்கண்ணனாக ஸேவை சாதிக்கிறார்". மடியில் வீற்றிருக்கும் தாயார் தாமரை தாங்கிய அபய ஹஸ்தத்துடன் மிகவும் சௌந்தர்யமான தோற்றத்துடன் எழுந்தருளியிருப்பதைக் காண்கில் அருள் பொழியும் திவ்ய தம்பதிகள் இவர்கள்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும்.

இங்கு எழுந்தருளியிருக்கும் ந்ருஸிம்ஹனுக்கு வஜ்ரதம்ஷ்ட்ரங்கள் (பற்கள்) 12 அமைந்திருக்கின்றன. இது 27 நக்ஷத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளைக் குறிக்கும்.

திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராஹு, நாக்கில் சனி பகவான், ஆக நவக்ரஹங்களும் பெருமாளுடைய திருமுக மண்டலத்தில் ஐக்யமாகி இருப்பதால் இது ஒரு பரிஹார ஸ்தலமாக விளங்குகிறது.

நவக்ரஹ தோஷங்கள் உள்ளவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகங்களை தக்கவாறு பாராயணம் செய்துகொண்டு ஸ்ரீ ந்ருஸிம்ஹன் சந்நிதியை வலம் வர தோஷ நிவ்ருத்தி அடைந்து ஸகல ஸௌபாக்கியங்களையும் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

சூரியன்:

காலானல ஸமப்ரக்யம் ஷட்கோணாந்தஸ்திதம் விபும்
ஜ்வாலாமாலாதரம் தேவம் பஜே ஜ்வாலா ந்ருகேஸரிம்

சந்திரன்:

அனந்த மச்யுதம் தீரம் விஸ்வரூபம் ப்ரபும் விபும்
ந்ருஸிம்ஹம் தேவதேவேசம் தம் பஜே ஸர்வதோமுகம்

புதன்:

ஸர்வாபரண பூஷாங்கம் ஸச்சிதானந்த விக்ரஹம்
பத்மசக்ரதரம் வந்தே ஹயக்ரீவ ந்ருகேஸரிம்

சுக்ரன்:

ஸ்ரீ பூ நீளா ஸஹிதம் ஸர்வாபரண பூஷிதம்
விரூபாக்ஷம் மஹாவிஷ்ணும் பஜே பத்ர ந்ருகேஸரிம்

செவ்வாய்:

சதுஸ் சக்ரதரம் தேவம் அங்காராந்தர் பஹிஸ்திதம்
ஜ்வாலாமாலா தரம் வந்தே பஜேதுக்ர ந்ருகேஸரிம்

குரு:

வேதாந்த வேத்யம் யக்ஞேஸம் ஸர்வதேவ நமஸ்க்ருதம்
பஜாமி ஸததம் தேவம் மஹாவிஷ்ணும் ந்ருகேஸரிம்

சனி பகவான்:

அஷ்ட சக்ரதரம் தேவம் விபும் சனி ஹ்ருதிஸ்திதம்
நீலாபரண பூஷாங்கம் பாதாள ந்ருஹரிம் பஜே

ராஹு:

சக்ராஷ்டக தரம் தேவம் த்ரிநேத்ரம் சோக்ரவிக்ரஹம்
விஸ்வரூப மஜம் ஸௌம்யம் வராஹ ந்ருஹரிம் பஜே

கேது:

ஆதிமத்யாந்த ரஹிதம் ஸச்சிதானந்த ரூபிணம்
நமாமி ந்ருஸிம்ஹம் தம் ஸர்வ சத்ரு விநாஸனம்

ஜ்வாலாஹோபில மாலோல க்ரோட காரஞ்ச பார்கவ:
யோகானந்தஸ் சத்ரவட: பாவனோ நவஹரிர் நம

No comments: