Thanks to :
{Darsanam Muscat} Re: [SriRangaSri] FW: மழிசை
Posted by: "VS"
yennappan@computer.net sadagopan10510
Sat Feb 11, 2012 6:07 am (PST)
SrI:
Dear All :
It is our BhAgyam to receive the scholarly article on the Vaibhavam of Thirumazhisai AzhwAr on His Thirunakshatram day
(Thai Magam) .
We are indebted to Kaanchipuram Sri U.Ve. SaThakOpa TatAchAr Swamy for this celebration for the aruLiccheyalkaLs of Thirumazhisai AzhwAr .Thank you Srimans Anbil Ramaswamy and Sriman V.C.Govindarajan Swamy for forwarding it .
The AzhwAr Vaibhavam web site is being constructed by our Kaimkarya GhOshti and we plan to store such timeless articles there along with the rendering of the 4000 Dhivya Prabhandham audios as well as images of Archaa Moorthys and their Utsavams at that web site .
It is an ambitous venture and we seek the anugrahams of the dhivya dampatis and our AchAryAs to make progress with this Kaimkaryam .
NamO SrI NrisimhAya,
V.Sadagopan
2012/2/10 Ram Anbil <
Ramanbil@hotmail.com>
ஸ்ரீ. உ. வே. ஸ்ரீ. சடகோபன் ஸ்வாமி, மிகவும் ரசமான அருமையான கட்டுரை. சத்யம் சத்யம் புன: சத்யம். ஒவ்வொரு தேசிக சிஷ்யர்களும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. மிக ரசமானது. இந்த கட்டுரையை படித்தால் பல புத்தகங்கள் படித்தது போல. ஸ்வாமி தேசிகனின் திருமழிசை ஆழ்வார் அனுபவத்தை மிக நன்றாக அறிந்து கொள்ளலாம். இவரே 18 சித்தர்களில், சிவ வாக்கியர் என்று கொண்டாடப் படுகிறார் என்று கூறுகின்றனர். பாரத்வாஜ ஸ்ரிநிவசாச்சரியார் போல் ஸ்வாமி தேசிகனை இதுபோல் த்வ்ஷிப்பவர்களை பார்த்து உரைக்கிறார் ஸ்ரீ. பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி குரவ்வாதிஹம்சாம்புதாசார்யா சிஷ்யே என்று.
தாசன்,
வில்லியம்பாக்கம் கோவிந்தராஜன்
----------------------------------------------------------
--- On Fri, 10/2/12, desikan desikan <
srithooppul@yahoo.com> wrote:
From: desikan desikan <
srithooppul@yahoo.com>
Subject: மழிசை வந்த சோதியும் தூப்புல்குலவிளக்கும்
To: "Dr.V.Sadagopan" <
yennappan@computer.net>
Date: Friday, 10 February, 2012, 1:03 AM
தாஸஸ்ய விஞ்ஞாபனம், இன்று தையில் மகம் ,திருமழிசைப்பிரான் திருநக்ஷத்ரம், எல்லோரும் கொண்டாடியிருப்பார்கள், ஸ்வாமிதேசிகன் இவரை அதிகாரஸங்க்ரஹத்தில் மழிசை வந்த சோதி என்கிறார். இவர் விஷயமாக ஸாதித்த பாசுரத்தில் இவருக்கு இடும் விசேஷணம் மற்றைச்சமயங்கள் பலதெரிந்து மாயோனல்லால் தெயவம் மற்றிலை என உரைத்த வேதத்தின் சிறந்த ஸாரார்தத்தை உரைத்தவர் என,. இவர் அனுக்ரஹித்தது நான்முகன் திருவந்ததாதி மற்றும் திருச்சந்தவிருத்தமுமாகும், மிகவும் அர்தபுஷ்டியுள்ள ப்ரபந்தங்கள்,இங்கு பரமதங்களை கண்டித்து ஸ்ரீமந்நாராயணனை பரதேவதையாக ஸ்தாபித்துள்ளார்.ஸ்வாமி தேசிகன் கொடுத்த விசேஷணத்தை முதல் பாசுரத்திலேயே காணலாம், நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத்தான் படைத்தான், வேதாந்தம்-உபநிஷத்து கூறுகிறது, நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே, நாராயணாத் ருத்ரோ ஜாயதே என, படைத்தவன் ஜகத்காரணம், ந ப்ரஹ்மா நேசாந என்பதால் மற்றவர்களல்ல,ஸ்ரீமந்நாராயணனே தெய்வம்,
அறியார் சமணர், அயர்த்தார் பௌத்தர், சிறியார் சிவப்பட்டார், செப்பில்,-வெறியாய,
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே அதலால் இன்று.
இனி அறிந்தேன் ஈசர்கும் நான்முகர்கும் தெய்வம்,,,,,,,,,
இனி அறிந்தேன் காரணம் நீ கற்றவை நீ, ,,,,,,,,,,,,,,
காரணம் து த்யேயஃ என உபாஸகனால் எம்பெருமானே உபாஸி்க்கத்தகுந்தவன் என்பதும் கிடைக்கிறது,ஆக முக்தியை கொடுப்பவனும் முக்தனுக்கு போக்யமும் எம்பெருமான் என ஸித்தமாகிறது,இவரைப்போல் மற்றைச்சமயத்தை பரமதபங்கம் முதலிய க்ரந்தங்ளால் கண்டித்தவர் ஸ்வாமிதேசிகன், ஆதலால் இவரிடம் விசேஷமான பஹுமானம், ஸ்வாமிக்கு கலியனுறைகுடிகொண்ட கருத்தடையோன் என விசேஷணமிருப்பினும், திருமழிசைப்பிரானிடத்திலுள்ள பஹுமானங்களை அவருடைய க்ரந்தங்களை உத்தரிப்பதின்மூலம் அறியலாம்,
ப்ரப்ந்நன் பரந்யாஸம் செய்து மேலுள்ளகாலத்தில் செய்யவேண்டியவைகளை குறிக்கும் காலத்தில் 1,வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது ,சாஸ்த்ரங்களை படித்தும்,, அதினர்த்தத்தை ஆசார்யன்பக்கலில் கேட்டும், ஆசார்யர்களை வணங்கி, நல்வழியிலே நடந்தும்,திருவாராதளம் செய்தும் கலத்தை தோஷமில்லாததாக போக்கினேன்,
2. நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்கவேண்டுமே,நான் இடைவிடாமல் உன்னை த்யானம் பண்ணவேணுமென நீ ஸங்கல்ப்பித்தருளவேணும்,
3.குலங்களாயவீரிரன்டிலொன்றிலும் பிறந்திலேன்,, நல்லகுலங்களாய
ப்ராஹ்மணாதி நான்கு குலங்களில் ஒன்றிலும் பிறக்கவில்லை.
4,நாயினேன் செய்தகுற்றம் நற்றமாகவே கொள் ஞாலநாதனே .மிகவும் தாழ்ந்வனான நான் செய்த அபசாரத்தை க்ஷமிக்கவேணும்.
5,எட்டெழுத்துமோதுவார்கள் வல்லார் வானமாளவே, அஷ்டாக்ஷரத்தை ஜபம் செய்பவர்கள் பரமபதத்தை ஆளுவதற்கு சக்தி உடையவர்கள்..
6,அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் இறந்திலேன்.,. அன்று ஸ்வரூபஞானம் இல்லாததசையில் சரீராதிகளை விட வேறுபட்டவன் என்கிற ஞானம் பிறவாத போது நான் பிறக்கவில்லை, பிறந்தபின் அதை மறக்கவில்லை.
இப்படியாக மேலும் பல வாகாயங்களை காணலாம். திருச்சந்தவிருத்தம் மிகவும் கடினமானவை , அதுபோல் ஸ்வாமியின் ப்ரபந்தமும் கடினமானவையாம், ப்ரதிவாதிபயங்கரம்ஸ்ரீ அண்ணன் ஸ்வாமி ஸாதிக்கிறார்
யஃ ஸம்ஸ்க்ருத கவிதாயாம் ப்ரௌடிம்நாந்வேதி கூரநாதஸுதம்.
த்ராவிட கவிதா மார்கே பரகாலம் வாத பக்திசாரம் வா.
ஸ்வாமி தேசிகன் ஸம்ஸ்க்ருதகவிதையை கடிநமாக இயற்றுவதில் ஸ்ரீபட்டரையும், த்ராவிடகவிதையில் பக்திசாரரையும் ஒத்தவர் என கொண்டாடுகிறார்.
ஸ்வாமி தேசிகன் தன்னை சந்தமிகுதமிழமறையோன் என குறிப்பிடுகிறார். ஸ்வாமி உத்ஸவத்தில் திவ்யப்ரபந்த ஸேவைகள் அமைந்தவிதம் மிகவும் ரஸநீயம், அதாவது நான்காம் திருநாள் ஸ்வாமிக்கு பரமபதநாதன் திருக்கோலம், காலை திருச்சந்தவிருத்தம், மாலை நான்முகன் திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி நான்காம் பத்து, கடைசி தசகம் ஒன்றும் தேவும் என்பதில் எம்பெருமானே பரதேவதை என ஸாதிக்கப்படுவது, இந்த பாசுரத்தில் எம்பெருமான் ஜகத்காரணமென்று ஸாதிக்க திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவாராயிரப்படியில ச்ரமப்பட்டு முழு உபநிஷத்துக்களையும் ப்ரமாணங்களாக ஸாதிக்கிறார், அவைகளை அவச்யம் ஸேவிக்கவேணும், ஸ்வாமியோ எனில் முதல்பாட்டின் ஸாரமாக மூன்று பதத்தை ஸாதிக்கிறார், கல்பாந்தேபி ஸ்திதத்வாத் ப்ரளயகாலத்தில் தானொருவனே இருக்கையால் என, இதை ஸ்மரித்தே ப்ரதிவாதிபயங்கரம்ஸ்ரீ அண்ணன் ஸ்வாமி ஸாதிக்கிறார் ,கலிவைரிசடாரி வசோ ரஸிகம், நம்மாழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை ரஸிப்பவர் என,இன்று ஸ்வாமியை ஸேவித்தால் தனியாக ஒரு காம்பீர்யம் தெரியும்.
திருமழிசையாழ்வார் அயோநிஜர், ஆயினும் தாழ்ந்த ஜாதியினரால் வளர்கப்பட்டவர், அவர் விஷயமாக ஒரு கதையும் சொல்லுவார்கள், திருமழிசையாழ்வார் பெரும்புலியூரில் வீதிவழியாக சென்றுக்கொண்டிருக்கும்பொழுது வேதாத்யயனம் செய்யும் ப்ராஹ்மணர்கள் அக்ரஹாரத்தில் இவரைக்கண்டவுடன் இவர் மஹிமை அறியாத இவர் காதில் வேதபாகம் விழக்கூடாது என வேதபாகத்தை நிறுத்தினார்கள், பிறகு நிறுத்திய பாகம் தெரியாத ஸமயத்தில் இவர் அங்கிருந்த கருப்பு நெல்லை எடுத்து நகத்தால் கீண்டு காண்பித்தார் என, அந்தபாகம் க்ருஷ்ணானாம் வ்ரீஹீணாம் நக நிர்பிந்நம், என, ஆக ஜாத்யனுகுணமாக வேதாதிகளை வாயினால் சொல்லவில்லை என, இவ்விருத்தாந்தத்தை ஸ்வாமி தேசிகன் " விதுராதிகளிலுமுத்க்ருஷ்டப்ரபாவரான ஆழ்வார்களுடைய வ்ருத்தாந்த விசேஷங்களை நம்மனுஷ்டானததுக்கு த்ருஷ்டாந்தமாக்கலாகாது, அவர்கள் வ்ருத்தாந்தங்களையுமாராய்ந்தால் ஸ்வஜாதிநியமத்தை கடந்தமையில்லை "என ஸாதிக்கிறார், இதன் முன்பாக "ஸ்ரீவிதுரரும் ஸ்வஜாத்யனுரூபமாக விவாஹாதிகள் பண்ணினார்," என ஸாதித்து அங்கு ஒரு வ்ருத்தாந்தத்தை காண்பிக்கிறார்.
"புக்தவத்ஸு த்விஜாக்ர்யேஷு நிஷண்ணஃ பரமாஸநே.
விதுராந்நாநி புபுஜே சுசீநி குணவந்தி ச, ப்ராஹமணச்ரேஷ்டர்கள்" சாப்பிட்ட பிறகு உயர்ந்த ஆஸநத்தில் உட்கார்ந்து கொண்டு பரிசுத்தமாயும், குணங்கலோடுகூடியதுமான விதுரருடைய அன்னங்களை ஸ்ரீக்ருஷ்ணபரமாத்மா புஜித்தார் என, இதை கேட்டு துரியோதனன்
"பீஷ்ம த்ரோணாவதிக்ரம்ய மாம்சைவ மதுஸூதன.
கிமர்தம் புண்டரீகாக்ஷ புக்தம் வ்ருஷள போஜனம்""
பிதாமஹரான பீஷமர், த்ரோணர் மற்றும் என்னையும் தாண்டி சூத்ரனுடைய போஜநம் எதற்காக ஸாப்பிடப்பட்டது என்று கேட்க
"த்விஷதன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்
பாண்டவான் த்விஷஸே ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவாஃ"
சத்ருவின் அன்னம் சாப்பிடத்தக்கதல்ல, சத்ருவை தன்வீட்டில் சாப்பிட வைக்கவும் கூடாது,ஹே ராஜன், நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய், பாண்டவர்கள் எனக்கு ப்ராணனல்லவா என பதில் கூறுகிறார். இங்கு விதுரர் பாகவதரானபடியால் ப்ராஹ்மணஜாதி என பதில் கூறவில்லை, பகவத்பக்தரான சூத்ரர்கள் ப்ராஹ்மணரைப்போல ச்லாகனீயர் மாத்ரமே ,அல்லாது ஜாதி பேதியாது என,
(இதே ப்ரகாரம் சிலர் ஸ்வாமிதேசிகனை த்வேஷிக்கிறார்கள் அவர்கள் விஷயமாக எம்பெருமானின் வாக்யம் இவ்வாறாக அமையும் என
த்விஷதன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்.
தேசிகம் த்விஷஸே க்ரூர மம ப்ராணோ ஹி தேசிகஃ ,
ஹே க்ரூரமானவனே,ஸ்வாமி தேசிகனை நீ த்வேஷிக்கிறாய், எனக்கு ப்ராணனல்லவா தேசிகன் என.ஆக ஸ்ரீதேசிகனை த்வேஷிப்பவர்களை ஸத்கரிப்பதும்,அவர்களிடமிருந்து ஸத்காரத்தை பெறுவதும் கூடாதென பகவந்நியமனமாம் ஆக ஸ்வாமியை த்வேஷிப்பவர்கள் பகவானுக்கு பகைவர்களாவர்.)
திருமழிசையாழ்வார் மற்றைச்சமயத்தை புகுந்து அதில் தோஷத்தை கண்டு மாயோனல்லால் தெய்வம் மற்றில்லை என அறிந்து பகவத்பக்தரானார், இதுபோல் பலர் ஏகதேசிகளின் ஸம்ப்ரதாயத்தில் புகுந்து அதில் சாஸ்த்ரவிரோதத்தை அறிந்து ஸ்ரீதேசிகஸம்ப்ரதாயத்தை ஆச்ரயித்தார்கள் என அறிகிறோம். அவர்களில் ஒருவர் பாரத்வாஜ ஸ்ரீநிவாஸாசார்யரென்பவர் ஆவார், ஸ்வாமிதேசிகன் ஸாதித்த ந்யாயபரிசுத்திக்கு ந்யாயஸாரமென ஒரு வ்யாக்யானம் எழுதியுள்ளார். அவர் எழுதிய ஒரு ச்லோகம்
இயதஃ ஸமயானஹம் மஹாந்தம் மதிபேதம் விவசஃ ப்ரபத்யமானஃ
ஸ்வமவஞ்சயமஞ்ஜஸாத்ய தைவாத் நிகமாந்தார்யநிபந்ததஃ ப்ரபுத்தஃ
புத்திமாற்றத்தை அடைந்து இத்தனை நீண்டகாலத்தையும் வீணடித்து தன்னை ஏமாற்றிவந்தேன், தற்சமயமே தெய்வாதீனமாக ஸ்வாமிதேசிகனின் க்ரந்தத்தால் விவேகமுள்ளவனாக ஆனேன், எனஸாதித்தார்
ஆயினும் இன்றளவும் பலர் ஸ்வஸித்தாந்த த்வாந்த ஸ்திரகுதுகதுர்வாதி பரிஷத்திவாபீதர்களாய்-தங்களுடைய ஸி்த்தாந்தமாகிற இருட்டிலேயே ஸந்தோஷத்துடன் இருக்கிற துர்வாதிகளான கோட்டான்கள் தூப்புல்குளவிளக்கை காணமுடியாமல் தவித்து வருகிறார்கள்,
-
--
Dr. V.C. Govindarajan,
18, Sannathi Street,
Madurantakam,
Ph: 98404-00336 (Home)
97909-87100 (Personal)
044-2755-4433 (land line)
--
Srimad Vedanta Desikar Tiruvadigale Saranam