ராமன் தர்மத்தின் வடிவம்
_____________
Messages in this topic (1)
3. Fw: Hey,Raam---7
Posted by: "soundararajan desikan"
srikainkarya@yahoo.com srikainkarya
Tue Apr 12, 2011 4:04 am (PDT)
Dear Swamin
Today is Sree Raamanavami
This is the concluding part of adiyen's submissions ....Hey, Raam
Sarvam Sree Hayagreeva preeyathaam
Dasan
Uruppattur Soundararajan
Srikainkarya
--- On Tue, 12/4/11, Desikan Soundararajan <
srikainkarya@gmail.com> wrote:
From: Desikan Soundararajan <
srikainkarya@gmail.com>
Subject: Hey,Raam---7
To: "Maheshwari Srinivasan" <
maheshvaasan@yahoo.co.in>, "Raajan Srinivas" <
maheshvaasan@gmail.com>,
srikainkarya@yahoo.comCc: "Desikan Soundararajan" <
srikainkarya@gmail.com>, "srikainkarya" <
srikainkarya@yahoogroups.com>, "Rajagopalan Divyapadhuka" <
rajdivyas@yahoo.com>,
ragmy@yahoo.comDate: Tuesday, 12 April, 2011, 11:20 AM
ஹே,ராம்---7
அப்ரதிஹத சூக்தம் , பகவானை, ஏகவீரன் என்று பேசுகிறது.
பதினாறாயிரம் சைன்யத்தை தனி ஒரு வீரனாகவே அழித்தான். லக்ஷ்மணனைக் கூட உதவிக்குக் கூப்பிடவில்லை.
இது ஒரு முக்யமான சூக்தம். க்ருஹப் பிரவேசம், புண்யாஹாவாசனம், உதகசாந்தி இவைகளில் இப்போதும் ஜபிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து வெளியே
புறப்பபடும்போது இதை ஜபித்துவிட்டு, வெளியே கிளம்பினால், போகிற கார்யம் ஜெயமாகும்.
எதையும் மூன்று முறை சொல்லும் வழக்கம், இராமாயண காலத்திலேருந்தே இருக்கிறது. வேதத்தை சொல்லி முடிக்கும்போது, ஓம், சாந்தி,சாந்தி சாந்தி : என்று மூன்று முறை சொல்வார்கள். இந்த வழக்கம், கோர்ட்டில் , குற்றவாளியையோ ,சாட்சியையோ, கூப்பிடுவது வரையில் நடைமுறையில் உள்ளது.
த்ரீணி பூர்ணத்வ ஸித்தி .......எதையும் மூன்று முறை பாராயணம் பண்ணினால் , பூரணமாகச்செய்த பலன் ஏற்படும்.
எட்டு அக்ஷரங்கள் உள்ளது , அஷ்டாக்ஷரம்.
பதினாறு ரிக்குகள் உள்ளது புருஷ சூக்தம்
இருபத்தி நான்கு அக்ஷரங்கள் உள்ளது காயத்ரி மந்த்ரம்.
முப்பத்திரண்டு அக்ஷரங்கள் கொண்டது ந்ருஸிம்ஹ மந்த்ரம் . இது அனுஷ்டுப் சந்தஸ் .
ராமாயணத்தில் ஏறக்குறைய முக்கால் பங்கு ஸ்லோகங்கள் , அனுஷ்டுப் சந்தஸ்சில் உள்ளன.
ராமாயணத்தில் அஷ்டாக்ஷரம், புருஷ சூக்தம், காயத்ரி, நருசிம்ஹமந்த்ரம் எல்லாம் உள்ளது.
ராமாயணத்தைப் பாராயணம் பண்ணினால் , இவை எல்லாவற்றையும் பாராயணம் பண்ணிய பலன் கிடைக்கும். ராமாயணத்தை மேலோட்டமாகப் படித்தால் அது ஒரு கதை; ஒவ்வொரு சர்க்கத்திலும் உள்ள தத்துவங்களை உணர வேண்டும்.
வேதத்தில் வரும் ப்ரார்த்தன மந்த்ரங்கள் ,எல்லா ஆத்மாக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறதே தவிர ,தனிப்பட்ட ஒருவன் நன்றாக இருக்க வேண்டும் என்கிற பிரார்த்தனை கிடையாது. அதேபோல ,பகவானும் எல்லாருடைய க்ஷேமத்தையும் விரும்புகிறான்.
பகவானாகிய ஸ்ரீராமபிரானை,
ராவணன் சூர்ப்பநகையிடம் பேசும்போது "தம்மன்யே ராகவம் வீரம் நாராயணம் அநாமயம் " என்கிறான்.
அதாவது, ராமனை, நாராயணன் என்று எனக்கு நன்றாகத் தெரியும் ஆனால், என் ஸ்வபாவம் ஒருவரையும் வணங்கமாட்டேன் ( ராவணனுக்கு வணங்கல் இலி அரக்கன் என்று தமிழில் பெயருண்டு )
விபீஷணன் "சர்வ லோக சரண்யாய " என்றான்.
மண்டோதரியோ "பரமாத்மா " என்கிறாள்
இப்படி ராவணன் குடும்பத்தினரே , பலபடியாக ஸ்தோத்ரம் செய்திருக்கின்றனர்
பிறப்பு ,இறப்பு அற்றவனான பகவான் ,தன பக்தர்களைக் காப்பாற்ற பிறப்பு எடுக்கிறான்
ராமாயணத்தில் சில இடங்களில் பலஸ்ருதி சொல்லப்படுகிறது.
யுத்த காண்டத்தில் " அக்னி பிரவேச ஸ்ர்க்கம் ' இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே ,முக்கிய கார்யங்களுக்கப் போகும்போது, இந்தஸ்ர்க்கத்தை பாராயணம் செய்துவிட்டுப் புறப்பட்டால், அபஜெயம் ஏற்படாது என்று பலஸ்ருதி உள்ளது.
சாஸ்திரம் விதித்த கர்மானுஷ்டானங்களை , எல்லாம் பகவத் ப்ரீர்த்த்யர்த்தம் என்று சொல்லி , அனுஷ்டிப்பவர்களைத் தேடி பகவானே அவர்களிடம் அனுக்ரஹிக்க வருகிறான். ராமாயணத்தில் இதற்கு இரண்டு உதாரணம்.
ஒன்று ஜடாயு ; இன்னொன்று சபரி . இவர்கள் இருவருக்கும் ,அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அனுக்ரஹித்தான்
-அண்ணன் தம்பிகளுக்குள் பாரபக்ஷமாக நடந்து கொள்கிறாயே என்று வாலி, ராமனைக் கேட்டான்.
தம்பியான சுக்ரீவனுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் இருந்தது; ராவணன் ஆகாய மார்க்கமாக சீதையுடன் போகும்போது, சீதை
தன்னுடைய ஆபரணங்களை மூட்டையாகக் கட்டி , ரிஷ்யமுக பர்வதத்தில் ,வானரர் களுக்கு நடுவில் போட்டாள்
அவைகளை எடுத்து சுக்ரீவன் பார்த்தான். அதனால் அவனுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் வந்தது; கூடவே ராமபிரானின் கடாக்ஷமும் கிடைத்தது.
வாலிக்கு லக்ஷ்மி கடாக்ஷம் இல்லை;
இன்னமுதத் திருமகள் என்று இவளை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளை அடைய வேண்டும்.
ராமோ விக்ரஹவான் தர்ம :
ராமன் தர்மத்தின் வடிவம்
அவனது சரிதத்தைச் சொல்லும் , சிறை இருந்த செல்வியின் ஏற்றத்தைச் சொல்லும், ஸ்ரீமத் ராமாயணத்தை ,
ஸ்ரீ ராம நவமியான இன்று முதல், பாராயணம் செய்யத் தொடங்குங்கள்
"இராம " என்கிற இரண்டு எழுத்தினால் எல்லா வளமும் பெருகும்
சுபம்
Sarvam Sri Hayagreeva Preeyatham
Dasan
Uruppattur Soundararajan