From: Raghavan Sowrirajan
To: varavaramunisambandhis@googlegroups.com, ramanuja@yahoogroups.com
Date: Wednesday, 4 August, 2010, 3:17 AM
தாயாரின் அர்ச்சனை திருநாமங்களில் ஒன்று,
*லோக சுந்தர்யை நம:*
*
*
சகல உலகங்களிலும் உள்ள சர்வரைக் காட்டிலும் தாயார் அழகானவள். தாயாரின்
அழகிற்குக் காரணம் அவள் பரமனிடம் கொண்ட பாரதந்தர்யம்.
உடல் அழகை மட்டிலும் உடைய பெண்கள், காமத்திற்கு நோக்காவர்களே ஒழிய
வந்தனத்திர்க்கு நோக்காக மாட்டார்கள். அவர்களின் அழகும் வந்தனத்திர்க்கு
உரியதன்று.
ஒரு பெண் இயல்பாகவே பாரதந்தர்யத்தை உடையவள். பிறரை ஆதாரமாகக் கொண்டே வாழுமவள்.
அந்தப் பெண் பாரதந்தர்யத்தைப் பாராட்டி, அதன் படி வாழ்வது தான் அவளுக்கு அழகை
அளிக்கும். அதற்கு மாறாக ச்வாதந்தர்யத்தை ஏறிட்டாளாகில், காண சஹிக்காது.
பிராட்டியோ என்னில், எம்பெருமானுக்கு பரம பரதந்த்ரை. ஆக, பரமன் திருவடிகளிலே
உள்ள பரம பாரதந்தர்யத்தாலே நம் அன்பிற்குரிய தாய்,
திருவரங்கச்செல்வியார் சுந்தரியாக இருக்கிறாள். அவள் சௌந்தர்யத்திர்க்கு மேலும்
ஆதிக்யத்தை (மேன்மை) சேற்பவையும் உள. அவள் பரதந்த்ரையாக இருப்பது லோக சாமான்ய
புருஷனுக்கு அல்லாமல், புருஷோத்தமனுக்கு ஆகையால், அவள் அழகு அவன் பெருமைக்குத்
தக்கதாய் இருக்கும். பெருந்தேவி என்றாலே, அவன் பெருமைக்குத் தக்க தேவி தானே.
இது வரையிலும் தாயாரின் அழகு, எம்பெருமான் திருவடிகளில் உள்ள
பாரதந்தர்யத்தாலும் வாள்ளபியத்தாலும் வந்தவை.
சொல் தோறும் அவளை தாயார் என்றே அழைத்து வருகிறோமே. ஒரு பெண் தன் குழந்தைகள்
இடத்தில் குற்றம் பாராதே, அன்பை காட்டும் அது அழகிலும் அழகு. இந்த அழகு பொதிந்த
குணம் நம் ஆருயிர்த் தாயார் இடத்தில் தான் முழுமையாக இருக்கும். பிரசித்தமாக
அசோக வனத்திலே, திருவடி (ஹநுமன்) ராக்ஷசிகளை கொல்லக் கோலும் போது, அந்த
ராகஷசிகள் வேண்டாமல் இருக்கச் செய்தே, அந்த ராக்ஷசிகளை ரக்ஷித்தாள். என்ன ஒரு
"தாயின் குணம்". உலக தாயர்கள் போல் அளவுபட்ட குழந்தைகள் என்று இராமல்,
எல்லோரிடத்திலும் (ராவணன் உள்பட) அன்பை காட்டும் நம் தாயார் குணம் அழகிலும்
அழகு.
ஆக பெருந்தேவியார் சர்வத்தையும் காட்டில் அழகாக இருப்பதர்க்குக் காரணம், அவள்
பரமனிடம் கொண்ட பாரதந்தர்யமும் (அவனையே ஆதாரமாகக் கொண்டு, அவனுக்காகவே வாழ்வது)
வால்லபியமும் (அவனை ரசிக்கப் பண்ணும் அது), மற்றும் நம் எல்லோரிடத்தில் வாசி
பாராமல் கொண்டுள்ள வாத்சல்யம் (குற்றத்தை குணமாகக் கொள்வது).