Monday, March 17, 2014

நெல்லிக்காயின் மகத்துவம்

நெல்லிக்காயின் மகத்துவம் ..
நெல்லியில் மகாவிஷ்ணு நித்யவாசம் செய்கிறார். எனவே நெல்லியமுதம் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான். சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.
நெல்லிக்கு ஹரிப்ரியா என்றும் பெயர் உண்டு. அட்சய திருதியை தினம் ஒன்றில் தான் அம்பிகையைப் போற்றி கனகதாரா துதியினைப் பாடி தங்க நெல்லிக்கனி மழையைப் பொழியச் செய்தாராம் ஆதிசங்கர மகான். நெல்லி மரத்தில் திருமாலும் திருமகளும் சேர்ந்து உறைவதாகச் சொல்கின்றன புராணங்கள். ஏகாதசியன்று நெல்லி இலை மற்றும் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்ப் பொடி) இடப்பட்ட நீரில் குளித்து, விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. நெல்லிமரம் வளரும் வீட்டினைத் தீய சக்திகள் நெருங்காது. அங்கே துர்மரணம் நிகழாது. அந்த வீடு லட்சுமி கடாட்சத்துடன் விளங்கும். நெல்லிக் கனியை நிவேதனம் செய்வதாலும் அதன் இலைகளால் அர்ச்சிப்பதாலும் மகாவிஷ்ணு மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். துவாதசி நாளில் ஏகாதசிவிரதத்தினை பூர்த்தி செய்து நெல்லிக்கனியை உண்பது அவசியம். இதனால் கங்கையில் நீராடிய பலனும், காசியில் வசித்த பலனும் கிட்டும். வெள்ளிக் கிழமைகளில் நெல்லி மரத்தினை வலம் வந்து வழிபடுபவர் திருமகளின் திருவருளைப் பெறுவர். அமாவாசை தினங்களிலும், இரவு நேரத்திலும் நெல்லிக்கனியை உண்பது கூடாது.
(பட்டமங்கலம் ஜோதிடம்